புதுச்சேரி மாநில தொமுச சார்பில் மே தினம் கொண்டாட்டம்

புதுச்சேரி மாநில தொமுச சார்பில் மே தினம் கொண்டாட்டப்பட்டது.அதில் 30 இடங்களில் கொடியேற்றி தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார். தொழிலாளர் தினத்தையொட்டி புதுச்சேரி மாநில தொமுச சார்பில் சுதேசி பஞ்சாலை, மாஸ் ஹோட்டல், பழைய சட்டக்கல்லூரி, கதிர்காமம், புவன்கரே வீதி ஆட்டோ ஸ்டேண்ட், மூலகுளம் ஆட்டோ ஸ்டேண்ட், மேட்டுப்பாளையம் தேவி பாட்டில் தொழிற்சாலை, திருவள்ளுவர் பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலைய ஆட்டோ தொழிற்சங்கங்கள், தந்தை பெரியார் போக்குவரத்து கழக பணிமனை, பிஆர்டிசி பணிமனை, வில்லியனூர் ஆட்டோ மற்றும் டெம்போ ஓட்டுநர்கள் சங்கம், நோணாங்குப்பம் போட்ஹவுஸ் உள்ளிட்ட 30 இடங்களில் தொமுச கொடி ஏற்றுதல் மற்றும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

தொமுச பேரவைத் தலைவர் அண்ணா அடைக்கலம் தலைமை தாங்கினார். தொமுச நிர்வாகிகள் அங்காளன், சிவக்குமார், மிஷேல், காயாரோகணம், காந்தி, துரை, பக்தவச்சலம், சீனுவாசன், அண்ணாதுரை, ராஜேந்திரன், திருக்குமரன், விஜயபாஸ்கர், கண்ணன், ரவி, கொளஞ்சியப்பன், ராஜசேகர், ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் இமாணுவேல், ராஜேஷ், அஜிபாஷா, முருகன், சண்முகம், அம்மாவாளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், தொமுச கெளரவத் தலைவருமான இரா. சிவா, எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தொமுச கொடியேற்றி வைத்து தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து ஆட்டோ தொழிலாளர்களுக்கு சீருடை, மதிய உணவு, மோர் பந்தல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாநில துணை அமைப்பாளர்கள் வி. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளர் இரா. செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் லீ. சம்பத் எம்.எல்.ஏ., தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூ. மூர்த்தி, ஜேவிஎஸ் சரவணன், பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ். கோபால், பா. செ. சக்திவேல், சன். சண்முகம், பிரபாகரன், வேலவன், செந்தில்குமார், அமுதாகுமார், தொகுதி செயலாளர்கள் இரா. சக்திவேல், திராவிடமணி, வடிவேல், சீத்தாராமன், ராஜாரராம், ராஜா (எ) தியாகராஜன், கலியகார்த்திகேயன், து. சக்திவேல், மணிகண்டன், சக்திவேல், சத்தியவேல், அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் மதிமாறன், தொண்டர் அணி அமைப்பாளர் வீரய்யன், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ரவி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சுமதி, மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் உத்தமன், வர்த்தகர் அணி துணைத் தலைவர் குரு என்கிற சண்முகசுந்தரம், கலை, இலக்கிய பகுத்தறிவு துணைத் தலைவர் புலவர் கிருஷ்ணமூர்த்தி, ராமகிருஷ்ணன், தமிழ்வாணன், ஆட்டோ அஜிபாஷா, காளிதாஸ், ஜெகன், தமிழ்ச்செல்வன், முருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment