இந்தியா கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது இல்லத்தில் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது: இதுவரை நடந்த 6 கட்ட தேர்தல் பிரச்சாரத்திலும் 10 ஆண்டு பிரதமர் ஆக இருந்து என்ன செய்தேன் என மோடி பேசவில்லை. காங்கிரஸ் தலைவர்களை வசை பாடுவதும் காங்கிரஸ் கட்சியை தரம் தாழ்ந்து பேசுவதும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களை சிறையில் தள்ளும் வேலையைத்தான் பிரதமர் மோடி அமித்ஷா பாஜக தலைவர்கள் செய்கின்றனர். இஸ்லாமியர்களுக்கு எதிரான தீவிரவாத கட்சி அயோத்தி கோவிலை இருக்கும் கட்சி காங்கிரஸ் என பொய் பிரச்சாரம் செய்கிறார். பிரதமர் மனநலம் பாதித்தவர் போல் அவதார புருஷன் என பேசி வருகிறார். அவர் உளறுவதில் இருந்து பாஜக படுதோல்வி அடையமென தெரிகிறது. இந்தியா கூட்டணி மிகப்பெரும் அளவில் எம்பி தொகுதிகளை கைப்பற்றும். பாஜக கூட்டணி கட்சிகள் 200 இடங்களை தாண்டாது. இந்தியா கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும்.
புதுவையில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கம் அமோக வெற்றி பெறுவார். தமிழகம் புதுவையில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெற வாய்ப்பு இல்லை. அதிமுகவும் படு தோல்வி அடையும். தமிழ்நாடு கவர்னராக ரவி பொறுப்பேற்றது முதல் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகிறார். அவர் அதிகாரமீறல் ஜனநாயகத்தை மதிக்கவில்லை என சுப்ரீம் கோர்ட் சாடியும் திருந்தவில்லை. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு தொல்லை கொடுப்பது கோப்புகளை நிராகரிப்பது திருப்பி அனுப்புவதென அதிகார துஷ்பிரேகம் செய்து வருகிறார் கவர்னர். திருவள்ளூர் விழாவை கவர்னர் மாளிகையில் கொண்டாடியுள்ளார். அதில் தவறில்லை. திருவள்ளுவர் படத்துக்கு காவி சாயம் பூசி கவர்னர் சங்கி என்பதை நிரூபித்துள்ளார். திருவள்ளுவர் எந்த காலத்திலும் காவி உடை அணிந்தது இல்லை. அவர் படங்கள் சிலைகளில் வெள்ளை உடையுடன் இருப்பார். வேண்டுமென்றே பிரச்சனை உருவாக்க தமிழ்நாட்டில் தமிழ் மொழியை கொச்சைப்படுத்த தமிழக அரசுக்கு தொல்லை கொடுக்க சர்ச்சைக்குரிய வேலையை கவர்னர் செய்துள்ளார். இதற்கு கவர்னர் மட்டும் பொறுப்பல்ல. அவரை ஊக்குவிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடியம் தான் பொறுப்பு. கவர்னர் மூலம் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வெகு விரைவில் வரும். கவர்னர் தமிழக மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் தனது ஆர் எஸ் எஸ் சித்தாந்தத்தை படிப்படியாக தமிழ்நாட்டில் நுழைக்கும் வேலையை பார்க்கிறார். அரசியலமைப்பு சட்டப்படி எந்த கட்சியிலும் சாராமல் இருக்க வேண்டிய கவர்னர் பாஜகவுக்கு கைக்கூலியாக செயல்படுவது வேதனை தருகிறது.
ரங்கசாமியும் பாஜக கூட்டணியில் இருந்தும் மாநில அந்தஸ்து பெறவில்லை. ஆனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வருகின்ற ஜூன் 4-ஆம் தேதிக்கு பிறகு இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்து மூன்று மாதத்தில் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவோம். புதுவை பொறுப்பு கவர்னர் சி பி ராதாகிருஷ்ணன் ஏற்கனவே இருந்த கவனர்கள் போல் அரசு நிர்வாகத்தில் தலையிடுகிறார். அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்த நடத்தி முடிவெடுக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை. கஞ்சா விஷயத்தில் கவர்னர் தலையிட்டு உள்ளது வரவேற்கத்தக்கது. ஆட்சியாளர்களால் செய்ய முடியாததை கவர்னர் செய்வாரா? என பொறுத்திருந்து பார்ப்போம். குப்பைகளை சரிவர வாரவில்லை என நடவடிக்கை எடுத்துள்ளார். குப்பை அள்ளுவதற்கு டெண்டர் விட்டதில் கோடிக்கணக்கான ரூபாய் கை மாறி உள்ளது. இதனால்தான் டெண்டர் எடுத்தவர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்காமல் ஒரு டன்னுக்கு 2ஆயிரம் பெற்றுக்கொண்டு குறைந்த சம்பளம் வழங்கி கொள்ளையடிக்கின்றனர். டென்டர் எடுத்தவர்கள் லஞ்சம் கொடுத்ததால் தரமற்ற வேலை செய்கின்றனர். இதற்கு கவர்னர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்.
புதுவை அரசின் உதவியாளர் பணியிடத்தை அரசே நிரப்பி மத்திய தேர்வாணையம் அனுமதி அளித்தது. ஆனால் புதுவை அரசு அதை திருப்பி அளித்துள்ளது. ஒருபுறம் மாநில அந்தஸ்து அதிகாரம் வேண்டுமென அரசு கேட்கிறது. மறுபுறம் அதிகாரத்தை திருப்பி அளிக்கிறது. இதற்கு ஆளும் என் ஆர் காங்கிரஸ் பாஜக ஆட்சியில் நிர்வாக சீர்கேடுதான் காரணம்.
காரைக்காலில் மழையால் பருத்தி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர் .இதனால் ஏக்கருக்கு ரூ. 70 ஆயிரம் வழங்க வேண்டும். புதுவையில் போக்குவரத்து நெரிசல் ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முருங்கப்பாக்கம் முதல் மரபாலம் வரை வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இங்கு சாலையை அகலப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மாற்றுப் பாதையை உருவாக்க வேண்டும். ராஜீவ் காந்தி இந்திரா காந்தி சதுக்கங்களில் மேம்பாலங்கள் கட்ட வேண்டும். ஆட்சியாளர்கள் இதைப் பற்றி சிந்தனை இல்லாமல் உள்ளனர். சுற்றுலாப் பயணிகள் வருகையால் புதுச்சேரியின் விழா காலங்களில் ஏற்படும் நெரிசலால் புதுவை உள்ளூர் மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

Related posts

Leave a Comment