குஜராத்தில் கேளிக்கை அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 22 பேர் பரிதாபமாக பலியானார்கள்

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள கேளிக்கை அரங்கில் கேம்ஜோன் உள்ளது. இங்கு குழந்தைகள், பெரியவர்கள் என பலர் கூடியிருந்தனர்.

இந்நிலையில், அந்த கேளிக்கை அரங்கில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 20 பேர் பலியானதாக தகவல் வெளியானது.
தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கப் போராடினர். மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம். தீ விபத்து குறித்து அறிந்த முதல் அமைச்சர் பூபேந்திர படேல், மீட்புப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.இந்த விபத்து தொடா்பாக ராஜ்கோட் காவல் துறை உதவி ஆணையா் விநாயக் படேல் கூறுகையில், ‘விபத்தில் சிறாா்கள் உள்பட இதுவரை 22 போ் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சடலங்கள் முற்றிலும் எரிந்துவிட்டதால், இறந்தவா் யாா் என்பதை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது’ என்றாா்.

இந்த விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:
தீ விபத்தில் பலா் உயிரிழந்தது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்தவா்கள் விரைந்து குணமடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிராா்த்திக்கிறேன். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment