புதுச்சேரி மாநில திமுக செயற்குழுக் கூட்டம்

அமைப்பாளர் சிவா, எம்.எல்.ஏ., தலைமையில்

நிர்வாகிகள் பங்கேற்பு!

புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை லப்போர்த் வீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில கழக அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார் தலைமை வகித்தார். மாநில கழக துணை அமைப்பாளர்கள் வி. அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ., அ. தைரியநாதன், ஏ.கே குமார், மாநில பொருளாளர் இரா. செந்தில்குமார், எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத், எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் தீர்மானங்களை விளக்கி சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: –

இந்திய அரசியல் வரலாற்றில் ஜனநாயக பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகாலம் தமது அயராது உழைப்பால் கட்டிக்காத்து – கழகத்தை எஃகு கோட்டையாக்கி கழகத் தொண்டர்களை கண்ணிமைபோல் காத்த – ஓய்வறியா உழைப்பாளி – தாம் போட்டியிட்ட 13 சட்டமன்ற தேர்தல்களிலும் மகத்தான வெற்றி பெற்ற சாதனையாளர் – ஐந்து முறை தமிழ்நாடு முதலமைச்சராக சிறப்பான முறையில் – பார் போற்றும் வகையில் பணியாற்றி தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட, எண்ணற்ற முற்போக்கு சட்டங்களையும் – முன்னோடி திட்டங்களையும் நிறைவேற்றித் தந்து திராவிட சூரியனாகத் திகழ்ந்த நம் நெஞ்சம் நிறைந்த தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை கடந்த ஓர் ஆண்டு சிறப்பாக கொண்டாடினோம். அதன் தொடர்ச்சியாக நூற்றாண்டு நிறைவு விழாவை, புதுச்சேரி மாநிலம் முழுவதும் கழகத் தொண்டர்களின் குடும்ப விழாவாக – மக்கள் விழாவாக கோலாகலமாக கொண்டாடுவது என்று இக்கூட்டம் ஏகமனதாக தீர்மானிக்கிறது.

நம்முடைய அன்புத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, ஜூன் 3–ஆம் தேதி காலை 09.00 மணியளவில் புதுச்சேரி மாவட்டம் முழுவதும் தொகுதிதோறும் அனைத்து கிளைகளிலும் கழக கொடி – தோரணங்களை கட்டி முத்தமிழறிஞர் கலைஞர் – கழகத் தலைவர் அண்ணன் தளபதி ஆகியோர் புகழ் பரப்பும் பாடல்களையும், அவர்கள் உரையாற்றிய எழுச்சியான பேச்சுகளையும் ஒலிபரப்பி, அந்தந்த கிளைகளில் உள்ள கழக முன்னோடிகளை வைத்து கழக இரு வண்ணக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, புதுச்சேரி மாநிலமே வியக்கும் வண்ணம் விழாக்கோலம் காணுகின்ற வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 101–வது பிறந்தநாளை மிகவும் எழுச்சியோடு, பிரம்மாண்ட முறையில் கொண்டாடுவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

ஜூன் 3–ஆம் தேதி புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லம் – கருணை இல்லம் – பார்வையற்றோர் பள்ளி – மனநலம் குன்றியோர் பள்ளிகளில் ஜூன் 3–ஆம் தேதி அறுசுவை உணவு வழங்குவது என்றும் இந்த மாதம் முழுவதும் இரத்ததான் முகாம்கள் – மருத்துவ முகாம்கள் நடத்துவது என்றும் மரக்கன்றுகள் நடுதல், ஏழை, எளியோர்க்கு நலத்திட்டம் வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்ட உதவிகளை சிறப்பான முறையில் வழங்குவது என்றும் இக்கூட்டம் ஏகமனதாக தீர்மானிக்கிறது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா தருணத்தில், அவர் தன் வாழ்நாள் முழுவதும் போற்றி பாதுகாத்த சமூக நீதி மற்றும் பகுத்தறிவு ஆகிய இலட்சியங்களை பரப்புரை செய்யும் நோக்கில் புதுச்சேரி மாவட்டத்தில் தொகுதிதோறும் பகுத்தறிவுப் பாசறைக் கூட்டங்கள் நடத்துவது என்றும் இக்கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது.

நடந்து முடிந்த 18–வது நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெ. வைத்திலிங்கம் அவர்களின் வெற்றிக்காக தீவிர பிரச்சாரம் செய்த நம் உயிரினும் மேலான கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அண்ணன் தளபதியார் அவர்களுக்கும், கழக இளைஞர் அணிச் செயலாளர், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் புதுச்சேரி மாநில கழகம் நமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

அதேபோல், இரவு – பகல் பாராது அயராது உழைத்த கழக சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில கழக நிர்வாகிகள், தொகுதி கழக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள், தொண்டர்களுக்கு புதுச்சேரி மாநில கழகம் தமது நெஞ்சார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.

புதுச்சேரி மாநில கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் நீண்ட நாள் விருப்பமாக இருக்கும் கலைஞர் அறிவாலயம் கட்டும் திட்டத்திற்கு மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள் அனுமதி அளித்துள்ளார்கள்.  அதன்படி, புதுச்சேரி ஈசிஆர் சாலையில் உள்ள கழகத்திற்கு சொந்தமான இடத்தில் புதுச்சேரி நகர குழுமத்தின் அனுமதி பெற்று புதுச்சேரி மாநில கழகத்தின் அனைத்து நிலையில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் பங்களிப்போடு கலைஞர் அறிவாலயம் கட்டுவது என்று இக்கூட்டம் ஏகமனதாக தீர்மானிக்கிறது.

கூட்டத்தில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சண். குமரவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூ. மூர்த்தி, கே.எம்.பி. லோகையன், ஜே.வி.எஸ். ஆறுமுகம், ப. காந்தி, டி. அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் சி. கோபால், வே. கார்த்திகேயன், வெ. ராமசாமி, ப. செல்வநாதன், பா. செ. சக்திவேல், ந. தங்கவேலு, பெ. வேலவன், மு. பிரபாகரன், வீ. சண்முகம், எஸ். தர்மராஜன், ஆர். கோகுல், டி. செந்தில்வேலன், டாக்டர் கா. மாயக்கிருஷ்ணன், ப. இளம்பரிதி, பெ. பழநி, எஸ். எஸ். செந்தில்குமார், நா. கோபாலகிருஷ்ணன், எஸ். அமுதாகுமார், எஸ். நர்கீஸ், தொகுதி செயலாளர்கள் எம்.ஆர். திராவிடமணி, இரா. சக்திவேல், வ. சீத்தாராமன், பாண்டு அரிகிருஷ்ணன், செ. நடராஜன், ஜி.பி. சவுரிராஜன், எல். மணிகண்டன், து. சக்திவேல், கோ. தியாகராஜன், ர. சிவக்குமார், ரா. ஆறுமுகம், ப. வடிவேல், ஜெ. மோகன், பி.ஆர். ரவிச்சந்திரன், வெ. சக்திவேல், க. ராஜாராமன், செல்வ. பார்த்திபன், பி.சா. இளஞ்செழியபாண்டியன், கலிய. கார்த்திகேயன், சே. ராதாகிருஷ்ணன், ம. கலைவாணன், அணிகளின் அமைப்பாளர்கள் மாணவர் அணி எஸ்.பி. மணிமாறன், இலக்கிய அணி சீனு. மோகன்தாசு, விவசாய அணி வெ. குலசேகரன், விவசாய தொழிலாளர் அணி தவ. முருகன் மீனவராணி ந. கோதண்டபாணி கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை கி. சங்கர் (எ) சிவசங்கரன், நெசவாளர் அணி ந. செந்தில்முருகன், பொறியாளர் அணி ஆ. அருண்குமார், விளையாட்டு மேம்பாட்டு அணி ந. ரவிச்சந்திரன், மகளிர் அணி காயத்ரி ஸ்ரீகாந்த், மகளிர் தொண்டர் அணி சுமதி, தொண்டர் அணி வீரன் (எ) விரய்யன், ஆதிதிராவிடர் நலக்குழு சி. ஆறுமுகம், வர்த்தகர் அணி சு. ரமணன், தகவல் தொழில்நுட்ப அணி தாமோ. தமிழசரன், மருத்துவர் அணி ஆனந்து ஆரோக்கியராஜ் அமைப்புசாரா ஓட்டுநர் அணி ம. மதிமாறன், சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு அ. முகம்மது ஹாலிது, சுற்றுச்சூழல் அணி த. முகிலன், அயலக அணி அ. ஷாஜகான், வழக்கறிஞர் அணி ச. பரிமளம், தொமுச அண்ணா அடைக்கலம் மற்றும் அணிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment