ஐ.சி.சி. டி 20 தரவரிசை பட்டியல் மீண்டும் முதல் இடத்தில் இந்தியா

டி20 போட்டிகளில் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் முதல் 3 இடங்களில் முறையே இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மாற்றமின்றி தொடருகின்றன.

இதில் 6-வது இடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி கிடுகிடுவென முன்னேறி 4-வது இடம்பிடித்துள்ளது. நியூசிலாந்து மாற்றமின்றி 5-வது இடத்தில் தொடருகிறது. பாகிஸ்தான் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 3-இடம் சரிந்து 7-வது இடத்திலும் உள்ளது. கடைசி 3 இடங்களில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ளன.

Related posts

Leave a Comment