புதுச்சேரி ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் கடைவீதியில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவுவிழா கொண்டாட்டம் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு திமுக மாநில கழக அமைப்பாளர் வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவர் சிவாவின் வழிகாட்டுதலின்படி, ஏம்பலம் தொகுதி கழகத்தின் சார்பில் கிருமாம்பாக்கம் கடைவீதியில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவுவிழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஏம்பலம் தொகுதி கழக செயலாளர் பி ஆர் ரவிச்சந்திரன் தலைமைதாங்கினார். கிருமாம்பாக்கம் கடைவீதி நான்கு முறை நான்குமுனை சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கும் கழகத் தோழர்களுக்கும் இனிப்பு வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


இந்நிகழ்வில் தேவநாதன் முன்னாள் மாநில மீனவர் அணி அமைப்பாளர் தொகுதி கழக மூத்த முன்னோடி குழந்தை மனோகரன், மகளிர் தொண்டர் அணி மாநில அமைப்பாளர் சுமதி, தொகுதி துணை செயலாளர் ஏம்பலம் கோவிந்தராஜ், தொகுதி பொருளாளர் இளம்பருதி, தொகுதி துணைச் செயலாளர் வாலி முருகன் ,தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் கோர்க்காடு விஜயன், அரங்கனூர் அருண் என்ற பச்சைப்பன், ராமானுஜம் டைலர், பிள்ளையார் குப்பம் ராமலிங்கம், மார்ட்டின் என்ற மாயவன் ,பின்னாச்சி குப்பம் சங்கர், நரம்பை ராமர் ,மற்றும் கிளைக் கழக செயலாளர்கள் ஒர்க் ஷாப் பன்னீர், ஹரி கிருஷ்ணன் மேஸ்திரி, கிருமாம்பாக்கம் கண்ணன், காசிமேடு குமாரவேல், கரிக்கலாம்பாக்கம் அற்புதராஜ், லோகு உட்பட கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளும் கழகத் தோழர்களும் கழகப் பற்றாளர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
கிருமாம்பாக்கம் சரவணன் நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment