மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்க பா.ஜ.க. திட்டம் – டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை

மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.

இதையடுத்து முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 40 தொகுதிகளும் அடங்கும்.

அதைத்தொடர்ந்து ஏப்ரல் 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1-ந்தேதி ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக 6 கட்டங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாடு முழுவதும் வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது. தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கியதில் இருந்தே பா.ஜனதா கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்று இருந்தது. குறிப்பாக ராஜஸ்தான், குஜராத், ஆந்திரா, ஒடிசா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் முன்னிலை வகித்தனர். மத்திய பிரதேசம், டெல்லி மாநிலங்களில் அனைத்து இடங்களிலும் பா.ஜனதா கட்சியே கைப்பற்றும் நிலையில் இருந்தன.
வாக்கு எண்ணிக்கை முடிவில் பா.ஜனதா மட்டும் 240 இடங்களை கைப்பற்றியுள்ளது.

வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, முதலில் சற்று பின்னடைவை சந்தித்தாலும் 1½ லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதேபோல் குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சுமார் 7½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

புதிய ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. பா.ஜனதா தனித்து 239 இடங்கள் மட்டுமே பெற்றுள்ளது. எனவே மத்தியில் அமையும் புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே இருக்கும். எனவே பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது. இதற்காக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை பா.ஜனதா இன்று கூட்டியுள்ளது.

Related posts

Leave a Comment