ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்- ராகுல் காந்தி கண்டனம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள சிவகோடி கோவிலில் இருந்து பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதல் மிகவும் வருத்தமளிக்கிறது.
இந்த வெட்கக்கேடான சம்பவம் ஜம்மு காஷ்மீரில் கவலைக்கிடமான பாதுகாப்புச் சூழலை விளக்கும் உண்மையான படம்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று நம்புகிறேன். பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டு நிற்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment