காவிரி-கோதாவரி – இணைப்புத் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை பிரதமர் மோடி தொடங்க அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திரமோடி பதவியேற்றுள்ளார். இதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ள நரேந்திர மோடிக்கும், அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களுக்கும் பா.ம.க. சார்பில் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

உலகமயமாக்கல் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, ஒரு நாடு முன்னேறுவதற்கு சீர்திருத்தம் தான் சிறந்த வழி என்ற நிலை ஏற்பட்டுள்ள சூழலில், பல்வேறு முதன்மையான சீர்திருத்தங்களை மோடி தலைமையிலான அரசு செய்திருக்கிறது.

இந்திய வளர்ச்சிக்கான உந்து சக்தியாக பார்க்கப்படுவது நதிகள் இணைப்பு ஆகும். இந்த திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பாக்கிறது. காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டம் உள்ளிட்ட அனைத்து நதிகள் இணைப்புத் திட்டத்தையும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நரேந்திர மோடி 3.0 அரசு உடனடியாக தொடங்க வேண்டும்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் திட்டத்திற்கு தடை விதித்தல், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் திட்டத்திற்கு கேரள அரசு போடும் முட்டுக்கட்டைகளை அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் புதிய அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Related posts

Leave a Comment