என் படத்தை தை உலகளவில் பேமஸ் ஆக்கிய எலான் மஸ்க்கிற்கு ரொம்ப நன்றி- தப்பாட்டம் பட நாயகன்

டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க், அவருக்குச் சொந்தமான எக்ஸ் தளத்தில் தமிழ்ப் படமான ‘தப்பாட்டம்’ படத்தின் காட்சி ஒன்றின் மூலம் உருவாக்கப்பட்ட மீம்ஸ் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

ஒரு இளநீரை படத்தின் நாயகி ஸ்டிரா வைத்து குடிக்க, அந்த நாயகியின் வாயிலிருந்து ஒரு ஸ்டிராவை வைத்து நாயகன் குடிக்கும் ஒரு காட்சி அது.

2017ம் ஆண்டு முஜிபூர் ரஹ்மான் இயக்கத்தில் துரை சுதாகர், டோனா ரொசாலியோ நடித்த படமான ‘தப்பாட்டம்’ படத்தின் அந்த ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பல மீம்ஸ்களாக பல முறை பரவியிருக்கிறது.

“ஐபோன், ஆப்பிள், டேட்டா” ஆகியவற்றை மையமாக வைத்து யாரோ ஒருவர் உருவாக்கிய மீம்ஸ் ஒன்றை இன்று எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார்.

ஒரு தமிழ்ப் படத்தை வைத்து உருவாக்கிய மீம்ஸை எலாக் மஸ்க் உலக அளவில் பிரபலமாக்கிவிட்டார்.

இந்நிலையில், தப்பாட்டம் படத்தின் கதாநாயகன் துரை சுதாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “சிறு முதலீட்டுடன் எடுக்கப்பட்ட என் படத்தை உலகளவில் பேமஸ் ஆக்கிய எலான் மஸ்க்கிற்கு ரொம்ப நன்றி. இது தமிழ் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம். எலான் மஸ்க்கிற்கு இந்த மீம் சென்று சேர உதவிய மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு எனது நன்றிகள்” என்று அவர் தெரிவித்தார்.

Related posts

Leave a Comment