கட்டணம் கேட்டதால் ஆத்திரம்: சுங்கச்சாவடியைபுல்டோசர் மூலம் சுங்கச்சாவடியை தகர்க்கும் வீடியோ வைரலானது.

உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் சுங்கச்சாவடி ஒன்று அமைந்துள்ளது. அங்கு வந்த புல்டோசர் சுங்கச்சாவடியைக் கடந்து செல்ல முற்பட்டது. அங்கிருந்த ஊழியர்கள் கட்டணம் செலுத்தும்படி டிரைவரிடம் கேட்டுள்ளனர்.

இதில் ஆத்திரம் அடைந்த அந்த டிரைவர் திடீரென புல்டோசர் மூலம் சுங்கச்சாவடியை இடிக்கத் தொடங்கினார். இதனால் அங்கு செயல்பட்டு வந்த இரு கட்டணம் வசூலிக்கும் மையங்கள் தகர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போனில் பதிவுசெய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்த சம்பவம் தொடர்பாக ஹபூர் மாவட்ட போலீஸார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜேசிபி டிரைவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சமபவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

Leave a Comment