தி.மு.க. மாவட்ட செயலாளர் : மஸ்தான் விடுவிப்பு – கௌதம் சிகாமணிக்கு பொறுப்பு

விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி மரணம் அடைந்ததால் அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

தேர்தலுக்கு நாள் நெருங்கி விட்ட காரணத்தால் இந்த தேர்தலில் போட்டியிட தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளை மாற்றம் அதன் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி,

  • விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக கௌதம்சிகாமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வரும் செஞ்சி மஞ்தான் அப்பொறுப்பில் இருந்து விடுவித்து அவருக்கு பதிலாக ப.சேகர் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

எனவே, ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related posts

Leave a Comment