தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களை சந்திக்கிறார் விஜய்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. விழாவை 2 கட்டங்களாக நடத்த அக்கட்சியின் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் மாணவர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததால் இம்முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வருகிற 28-ஆம் தேதி மற்றும் ஜூலை 3-ஆம் தேதிகளில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து பாராட்டு சான்றிதழை விஜய் வழங்குகிறார். மேலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்குகிறார். முதல் கட்டமாக வருகிற 28-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி,…

நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு பயணம்

கோப்பு படம்

நடிகர் ரஜினிகாந்த், ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வந்தார். இதில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சுவாரியர், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் நிறைவு பெற்றது. இதையடுத்து அவர் ஓய்வுக்காக அபுதாபி சென்றார். ஐக்கிய அரபு அமீரக அரசு, அவருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது. அங்குள்ள இந்து கோயிலுக்கும் சென்றார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. சுமார் இரண்டு வார கால ஓய்வுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். ஒவ்வொரு வருடமும் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஆன்மிக சுற்றுப்பயணமாக இமயமலை செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் ரஜினிகாந்த் சென்னைக்கு திரும்பிய ரஜினிகாந்த், இன்று காலை தனது நண்பர்களுடன் இமயமலை செல்கிறார். அங்கு பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை…

‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’ படத்துக்கு சம்பளம் வாங்காத கார்த்திக் ராஜா

குழந்தைகளின் உணர்வுகளை மையமாக வைத்துஉருவாகி இருக்கும் படம் ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’. வரும் 31-ம்தேதி வெளியாகும் இந்தப் படத்தை ராம் கந்தசாமி இயக்கி, தன் கலாலயா நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இதில் கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய், குழந்தைநட்சத்திரம் பிரணிதி சிவசங்கரன்,லாவண்யா கண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். இதை 9 வி ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் ராம் கந்தசாமி கூறும்போது, “நாயை, பூனையைச் செல்லமாக வளர்ப்பதைப் பற்றித்தான் பெரும்பாலானவர்கள் பேசுவார்கள். ஆனால் ஆட்டுக்குட்டியை செல்லமாக வளர்ப்பது பற்றி என் மனைவி சொன்னார். அதைக் குழந்தைகளின் கண்ணோட்டத்தில் அவர்கள் பார்வையிலான கதையாக மாற்றி இந்தப் படத்தை எடுத்தோம். இதில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவசங்கரன் சிறப்பாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவிடம் தயக்கத்தோடு இசையமைக்கக்…

விஜய்யுடன் அவரது தந்தை வெளியிட்ட புகைப்படம் வைரல்

நடிகர் விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் விஃபெக்ஸ் பணிகளுக்காக தற்பொழுது காலிஃபோர்னியா சென்றுள்ளார் விஜய். , சென்னை, கேரளா, ரசியா என பல இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில் விஜய் அவர் பெற்றோரான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீண்ட நாட்கள் கழித்து விஜய் தன் பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருக்கின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு விஜய் -க்கும் அவரது தந்தையான சந்திரசேகர் இருவருக்கும் விஜய் அரசியல் வருவது குறித்தான கருத்து வேறுபாடுகள் நிலவியது. ஆனால் தற்பொழுது விஜய் அரசியலில் களம் இறங்கியுள்ளார். அவருக்கென தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இந்நிலையில் விஜய் அவருடைய பெற்றோருடன்…