மல்யுத்த வீராங்கனை ஹமீதா பானுவைக் கவுரவித்து டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்

மே.4, இன்றைய தினம் இந்தியாவின் முதல் தொழில்முறை மல்யுத்த வீராங்கனை ஹமீதா பானுவைக் கவுரவித்து டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம். 1940 – 50 காலகட்டத்தில் ஆண்கள் ஆதிக்கம் மட்டுமே இருந்த ஒரு விளையாட்டுத் துறையில் ஹமீதா பானு காலடி எடுத்து வைத்ததை நினைவு கூறும் வகையில் இந்த டூடுல் வெளியிடப்பட்டுள்ளது. துணிச்சல்காரி ஹமீதா! “என்னை யார் மல்யுத்த களத்தில் தோற்கடிக்கிறாரோ அவர் என்னைத் திருமணம் செய்து கொள்ளலாம்” இப்படி ஒரு சவாலை விடுத்தவர் தான் ஹமீதா பானு. அதுவும் 1954 ஆம் ஆண்டில் இத்தகைய துணிச்சலான சவாலை விடுத்தார். அந்தச் சவாலை அவர் விடுத்த பின்னர் பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலாவின் பிரபல மல்யுத்த வீரரையும், கொல்கத்தாவைச் சேர்ந்த மற்றொரு பிரபல வீரரையும் அடுத்தடுத்து தோற்கடித்தார் என்கிறது வரலாறு. அதே ஆண்டு மே மாதம் ஹமீதா…