விருதுநகர் அருகே ஆவியூர் கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழப்பு

காரியாபட்டி பகுதி ஆவியூரில் உள்ள கல்குவாரியில் இன்று காலை தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. குடோனில் இருந்து வெடி மருந்தை வேனில் ஏற்றியபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சிதறிக்கிடந்த உடல்களை அடையாளம் கண்டதில், கந்தசாமி (47), துரை (25), குருசாமி (60) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், காயமடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் அமைந்திருக்கும் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் ஆத்திரமடைந்த மக்கள் குவாரியை மூடக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

Leave a Comment