விழுப்புரத்தில் இடி மின்னலுடன் மழைவாக்கு எண்ணும் மையத்தில் கேமராக்கள் பழுது

தமிழகத்தில், பாராளுமன்ற தேர்தல் வாக்குகள், 39 மையங்களில் எண்ணப்பட உள்ளன. மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் முத்திரையிடப்பட்டு, அறைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி சீலிடப்பட்டுள்ளன.வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தில், மூன்றடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அலுவலர்கள், 24 மணி நேரமும் பாதுகாப்பில் உள்ளனர். அறை உள்ளேயும், வெளியிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

இந்நிலையில், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏழு தொகுதிகளின் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளது. இங்கு 300 சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு பணிக்காக பொருத்தப்பட்டுள்ளது.
இன்று காலை இடி மின்னலுடன் பெய்த மழையால் 7.30 மணிக்கு வெளியே பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த ஏழு சிசிடிவி கேமராக்கள் திடீரென பழுதானது. மழை விட்ட பிறகு எட்டு முப்பது மணிக்கு மேல் கேமராக்கள் சரி செய்யப்பட்டு மீண்டும் இயங்கியது.

Related posts

Leave a Comment