நியூஸ் க்ளிக்’ ஆசிரியரை கைது செய்தது செல்லாது: விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நியூஸ் க்ளிக்” நிறுவனர் மற்றும் ஆசிரியரை கைது செய்யப்பட்டது செல்லாது எனக்கூறியுள்ள உச்சநீதிமன்றம்,அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டு உள்ளது.
சீனாவிடம் இருந்து நிதி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து நியூஸ்க்ளிக்செய்தி இணையதளதின் நிறுவனர் பரபீர் புரக்யஸ்தா மற்றும் மனித வளத்துறை தலைவர் அமித் சக்கரவர்த்தி ஆகியோரை கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டில்லி போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்(UAPA) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று( அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது: பரபீர் புரக்யஸ்தாவை கைது செய்ததும், சிறையில் அடைத்தது செல்லாது. கைது செய்ததற்கான காரணத்தை, அவரை கைது செய்வதற்கு முன்னர், அவரிடமோ அல்லது அவரது வழக்கறிஞரிடமோ கூறப்படவில்லை எனக்கூறிய நீதிமன்றம், அவரை சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.

Related posts

Leave a Comment