ஸ்வாதி மாலிவால் விவகாரம் பா.ஜனதாவின் சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை பெண் எம்.பி.யான ஸ்வாதி மாலிவால், தான் கெஜ்ரிவால் வீட்டில் அவரது தனிச் செயலாளரால் தாக்கப்பட்டேன் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.இது தொடர்பாக டெல்லி மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து ஸ்வாமி மாலிவால் தாக்கப்படவில்லை. இது பா.ஜனதாவின் சதி என 52 வினாடி வீடியோவை சுட்டிக்காட்டி ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி என குற்றம்சாட்டியுள்ளார்.

அந்த வீடியோவில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வீட்டிற்கு வந்திருந்த ஸ்வாதி மாலிவாலை, வெளியேறும்படி பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். இதனைக் கேட்டு ஸ்வாமி மாலிவால் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பாதுகாப்பு அதிகாரிகளை மிரட்டுகிறார். அவர்களை வெளியேற்ற முற்படுகிறார் என்பதுபோல் உள்ளது.

இந்த வீடியோவை பார்க்கும்போது, டெல்லி மாநிலத்தில் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னதாக கெஜ்ரிவாலை குறிவைத்து பா.ஜனதாவல் நடத்தப்பட்ட திட்டம் தற்போது வெளியாகியுள்ளது என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்ததில் இருந்து பா.ஜனதா கலக்கம் அடைந்துள்ளது. இதனால் ஸ்வாதி மாலிவாலை கெஜ்ரிவால் வீட்டிற்கு கடந்த 13-ந்தேதி அனுப்பி பா.ஜனதா சதித்திட்டம் வகுத்துள்ளது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றம்சாட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். ஆனால், அவர் அங்கே இல்லை என்பதால், அவர் பாதுகாக்கப்பட்டார். பா.ஜனதாவின் இந்த சதியில் ஸ்வாதி மாலிவால் பயன்படுத்தப்பட்டுள்ளார் என அதிஷி தெரிவித்துள்ளார்.

மேலும், போலீஸ் புகாரில் அவர் தாக்கப்பட்டதாக கூறியுள்ளார். ஆனால், வீடியோ காட்சியில் அவர் வசதியாக உட்கார்ந்து கொண்டு அதிகாரிகளை மிரட்டுகிறார். மேலும், பிபவ் குமாரை மிரட்டுவதையும் பார்க்க முடிகிறது என அதிஷி தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment