5ஆம் கட்ட தேர்தல் தற்போதைய நிலவலப்படி 23.66 சதவீதம் வாக்கு பதிவு

நாடு முழுவதும் 8 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் 49 தொகுதிகளில் இன்று 5 ஆம் கட்டமாக தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் காலை 11 மணி நிலவரப்படி 23.66% வாக்குப்பதிவாகியுள்ளது. மேற்குவங்கத்தில் அதிகபட்சமாகவும், மகாராஷ்டிராவில் குறைவாகவும் வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 5-ஆம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. அதன்படி உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிஹார், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு காஷ்மீர், லடாக்கில் தலா 1 தொகுதிஎன மொத்தம் 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. உத்தரப்பிரதேசம்: 27.76 சதவீதம், மகாராஷ்டிரா: 15.93சதவீதம்,…

தங்கத்தின் விலை புதிய உச்சம் தொட்டது.ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.55,200 ஆனது

ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்து இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. சனிக்கிழமை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.6,850-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.54,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று காலை அதிரடியாக சவரனுக்கு ரூ.400 அதிகரித்து புதிய உச்சத்தை தங்கத்தின் விலை தொட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.6,900-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.55 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.3.50 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. முதல் முறையாக ரூபாய் 100 ஐ கடந்து ரூ.101க்கு விற்பனை ஆகிறது.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இப்ராஹிம் ரய்சி மறைவால் ஆழ்ந்த வருத்ததும, அதிர்ச்சியும் அடைந்தேன். இப்ராஹிம் ரய்சியின் குடும்பத்தினருக்கும், ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா-ஈரான் இருத்தரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூறப்படும். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் துணை நிற்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

21 போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் – யுஜிசி வெளியிட்டுள்ளது. அதில் புதுச்சேரியில் ஒன்று

நாடு முழுவதும் 21 பல்கலைக்கழகங்கள் அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக யுஜிசி பட்டியல் வெளியிட்டுள்ளது.பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகாரத்தின் அனுமதியின்றி செயல்பட்டு வந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலை யுஜிசி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.அதன் மூலம் நாடு முழுவதும் 21 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று யுஜிசியால் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த பட்டியலில், தில்லியில் 8, உத்தரப்பிரதேசத்தில் 4, ஆந்திரா, மேற்கு வங்கம், கேரளத்தில் தலா 2-ம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் தலா 1 உட்பட மொத்தம் 21 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள எந்த பல்கலைக்கழகமும் இந்தப் பட்டியலில் இல்லை. பிற மாநிலக் கல்லூரிகளில் படிக்க விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள் இந்தப் பட்டியலை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களை யுஜிசியின் https://www.ugc.gov.in/ இணையத்தில் அறிந்து கொள்ளலாம்

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன் கைது

உத்தரப் பிரதேசத்தின் ஃபரூக்காபாத் தொகுதியில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த 17வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஃபரூக்காபாத் தொகுதியில் 4-ம் கட்டமாக மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் பாஜக வேட்பாளர் முகேஷ் ராஜ்புத்துக்கு இளைஞர் ஒருவர் 8 முறை வாக்களிக்கும் விடியோ இணையதளங்களில் வைரலானது. அந்த விடியோவில், வெவ்வேறு அரசு அடையாள அட்டைகளுடன் வெவ்வேறு நேர இடைவெளியில் இளைஞர் ஒருவர் எட்டு முறை பாஜகவுக்கு வாக்களிப்பதைக் காணலாம். இந்த விடியோவை காங்கிரஸ், சமாஜவாதி கட்சி அகிலேஷ் யாதவ் ஆகியோர் பகிர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். இதையடுத்து இந்த விவகாரத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உ.பி. தலைமை…

ஈரான் அதிபர் மறைவு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஈரான் நாட்டின் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைசி. இவர் அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக நேற்று அங்கு சென்றார். அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் அணை திறப்பு விழாவில் கலந்துகொண்ட இப்ராஹிம் ரைசி, அதன் பின்னர் ஹெலிகாப்டரில் ஈரானுக்கு புறப்பட்டார்.அவருடன் ஈரான் வெளியுறவு மந்திரி உசைன் அமிரப்டோலாஹியன் மற்றும் மூத்த அதிகாரிகள் சிலர் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜோல்பா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. மிக மோசமான நிலையில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியும் உடன் சென்றவர்களும் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் உயிரிழந்ததாக அந்நாட்டு மக்களுக்கு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஈரானில் உள்ள புனித தலமான…