இலங்கை அம்மன் கோவிலில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் சாமி தரிசனம்

இலங்கை நாட்டிற்கு சென்றுள்ள புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் இன்று 27.05.2024 இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பராசக்தி அம்மன் ஆலயம் மற்றும் 800 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பொன்னம்பல வான சுவாமிகள் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
பொன்னம்பல வான சுவாமிகள் ஆலயத்தில் இந்து மத குருமார் தலைவர் சுவாமி சிவாச்சாரியார் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார். இந்த நிகழ்வுகளில் இலங்கை அரசின் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் அரசியல் ஆலோசகரும் நேர்முக உதவியாளருமான திருமதி உமாச்சந்திர பிரகாஷ் உடனிருந்தார்.

முன்னதாக இந்த ஆலயங்களின் நிர்வாகத்தினர் சட்டப்பேரவைத் தலைவர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

மேலும் சட்டப்பேரவை தலைவர் அவர்களுடன் புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவர் ஜெயக்குமார் ரெட்டியார் பாஜக மாநில இளைஞரணி செயலாளர் வருன் மற்றும் இராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related posts

Leave a Comment