தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரிக்கு தாண்டிய வெயில்: உச்சகட்டமாக சென்னையில் 105 டிகிரி

தமிழகம் முழுவதும் இன்று 8 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக சென்னையில் 105.08 டிகிரி வெயில் கொளுத்தியது.

ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசியது

இதனையடுத்து தமிழகத்தில் மே மாதத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்தது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி நிலவியது.

இந்நிலையில் வங்கக்கடலில் உருவான ரீமால் புயல் நேற்று வங்கதேசம் அருகே கரையை கடந்தது. இதனால் மீண்டும் தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இனிவரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:- சென்னை – 105.08, கடலூர் – 101.12, ஈரோடு – 100.76, மதுரை விமான நிலையம் – 101.12, புதுச்சேரி – 101.12, தஞ்சாவூர் – 102.2, திருத்தணி -100.58, வேலூர் – 103.82, கோயம்புத்தூர் – 90.68, கரூர் பரமத்தி – 97.7 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இதேபோல் சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-
குன்னூர் – 77, கொடைக்கானல் – 75.2, ஊட்டி – 74.84, வால்பாறை – 76.1டிகிரி வெப்பநிலை இருந்தது.

Related posts

Leave a Comment