கன்னியாகுமரியில் விவேகானந்தர் தியானம் செய்த இடத்திலேயே பிரதமர் மோடி தியானம் செய்ய திட்டம்பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பிரதமர் நரேந்திர மோடி வருகிற மே 30 ஆம் தேதி மாலை கன்னியாகுமரி வர உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், பிரதமரின் வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது.

மே 30 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய இருக்கிறார். விவேகானந்தர் தியானம் செய்த இடத்திலேயே பிரதமர் மோடி தியானம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக 2019 பாராளுமன்ற தேர்தலின் போது கடைசிக்கட்ட வாக்குப்பதிவின் போது பிரதமர் மோடி இமய மலை பயணம் செய்தார். அங்குள்ள குகை ஒன்றுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு தியானம் செய்தார். இந்த பயணத்தின் போது கேதார்நாத் சிவன் கோவிலில் வழிபாடு செய்தார்.

Related posts

Leave a Comment