சிக்கிம் மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா முன்னிலை மீண்டும் ஆட்சி அமைக்கிறது

இந்தியாவில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இதனோடு ஆந்திரா, ஒரிசா, அருணாச்சல்ப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கை நடைபெரும் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையின்படி ஆளும் மாநிலக் கட்சியான சிக்கிம் க்ரந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்) கட்சி மொத்தம் உள்ள 32 இல் 29 சீட்களில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் சிக்கிமில் மீண்டும் எஸ்.கே.எம் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது

Related posts

Leave a Comment