புதுச்சேரி மக்களை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் மாபெரும் வெற்றி1 லட்சத்து 36 ஆயிரத்து 516 வாக்குகள் வித்தியாச வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

புதுச்சேரி.ஜூன்-5 புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் இரண்டாவது முறையாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளார் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை 1 லட்சத்து 36 ஆயிரத்து 516 வாக்குகள் வித்தியாச வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.

புதுச்சேரி லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் காங்., வேட்பாளர் வைத்திலிங்கம், தேசிய ஜனநாய கூட்டணி கட்சி சார்பில் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம், அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மோகனா உள்பட 26 பேர் போட்டியிட்டனர். ஏப்ரல் 19ஆம் தேதி ஓட்டு பதிவு நடந்தது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் பாஜக சார்பில் நமச்சிவாயம், அதிமுக சார்பில் தமிழ் வேந்தன், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, உட்பட அரசியல் கட்சிகள் சார்பில் 7 பேரும் சுயேட்சையாக 19 பேரும் என மொத்தம் 26 பேர் போட்டியிட்டனர். மொத்தம் உள்ள 10 லட்சத்து 23 ஆயிரத்து 699 வாக்காளர்களில் 8 லட்சத்து 724 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு 78. 90% நடைபெற்றது.
வாக்குபதிவு மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் புதுச்சேரியின் நான்கு பகுதிகளிலும் ஸ்டிராங் ரூமில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தன.
புதுச்சேரி பகுதியில் 23 தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் லாஸ்பேட்டை அரசு மகளிர் பொறியியல் கல்லுாரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் ஆகிய 2 இடங்களில் நடந்தது.
காரைக்காலில் அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லுாரியிலும், மாகியில் ஜவகர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஏனாம் எஸ்.ஆர்.கே.,கலை அறிவியல் கல்லுாரியிலும் வாக்கு எண்ணிக்கை நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
மின்னணு ஓட்டு பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை எண்ண துவங்கியது முதல் காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் தொடர்ந்து முன்னிலை வகித்தார். ஒவ்வொரு சுற்றிலும் காங்., வேட்பாளரின் முன்னிலை அதிகரித்த வண்ணம் இருந்தது.
முதல் சுற்றில் புதுச்சேரியில் மண்ணாடிப் பட்டு, மங்கலம், கதிர்காமம், காமராஜ் நகர், முத்தி யால்பேட்டை, உருளையன்பேட்டை, அரியாங்குப்பம், ஏம்பலம், நெடுங்காடு, காரைக்கால் வடக்கு மற்றும் மாகி, ஏனாம் என 12 தொகுதி ஓட்டுகள் எண்ணப்பட்டன.
இதில் ஏனாமினை தவிர்த்து மற்ற தொகுதிகள் அனைத்தும் காங்., வேட்பாளர் வைத்திலிங்கமே முன்னணியில் இருந்தார்.

இரண்டாம் சுற்றில், திருபுவனை, வில்லியனூர், இந்திராநகர், ராஜ்பவன், லாஸ்பேட்டை, நெல்லித்தோப்பு, மணவெளி, நெட்டப்பாக்கம், திருநள்ளாறு, காரைக்கால் தெற்கு ஆகிய 10 தொகுதிகளின் வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த சுற்றிலும் இந்திரா நகரை தவிர அனைத்து தொகுதிகளிலும் காங்.,வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலை பெற்றார்.
மூன்றாம் சுற்றில் ஊசுடு, உழவர்கரை, தட்டாஞ்சாவடி, காலாப்பட்டு, உப்பளம், முதலியார் பேட்டை, பாகூர், நிரவி ஆகிய 8 தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இந்த சுற்றிலும் காங்., கட்சி முன்னிலை பெற, ஓட்டு வித்தியாசம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இறுதியில் காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் 4,26,005 வாக்குகளுடன் முதலிடம், பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் 2,89,489 ஓட்டுகளுடன் இரண்டாம் இடம் பெற்றனர்.
பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை காட்டிலும் 1,36,516 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங் வேட்பாளர் வைத்திலிங்கம் மாபெரும் வெற்றி பெற்றார். அடுத்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 39,603 வாக்குகளுடன் 3ஆம் இடத்தையும் , அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தன் 25,165 வாக்குகள் 4வது இடத்தை பிடித்தனர். இதில் புதுவையில் 9763 வாக்குகள் நோட்டோ வாங்கி 5வது இடத்தை பிடித்தது.
புதுச்சேரி மக்களவை தொகுதியில் இதுவரை 15 தேர்தலும், 1 இடைத்தேர்தலும் நடந்துள்ளது. இவற்றில் 11 முறை காங்., கட்சியே வெற்றிப் பெற்றுள்ளது.
வாக்கு எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டு தொடர்ந்து இரவு 10.41 மணியளவில் புதுச்சேரி மக்களவை தேர்தலில் காங்., வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான குலோத்துங்கன் சான்றிதழை வழங்கினார். அப்போது அவருடன் முன்னாள் முதல்வர் ரங்கசாமி, எதிர்கட்சி தலைவர் சிவா காங்கிரஸ் எம்எல்ஏ வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் கந்தசாமி,முன்னாள் எம்எல்ஏகள் அனந்தராமன்,கார்த்திக்கேயன் உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள்,கட்சி எம்.எல்.ஏ.,க்கள் உடனிருந்தனர்

Related posts

Leave a Comment