மகிழ்ச்சியில் சந்திரபாபுநாயுடு குடும்பம்

ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்த சந்திரபாபு நாயுடு

ஆந்திரா சட்டசபைக்கு பாராளுமன்ற தேர்தலுடன் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.

இதில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 135 இடங்களில் தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும், மற்றவை 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

இதில் அறுதி பெரும்பான்மை பெற்று தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது. ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்கிறார். அவர் வருகிற 9-ந்தேதி முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் சந்திரபாபு நாயுடு கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

Related posts

Leave a Comment