3 வது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்பு

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியது.

கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ள நிலையில் நேற்று முன் தினம் நடைபெற்ற என்.டி.ஏ புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து இன்று இரவு 7.15 மணிளவில் பிரதமராக மோடி 3-வது முறையாகப் பதவியேற்றுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், 7.15 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி 8.00 மணி வரை சுமார் 45 நிமிடங்கள் நடைபெறுகிறது.

இந்திய வரலாற்றில் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ந்து 3 வது முறை பிரதமராகும் பெருமையை மோடி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment