தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வாழ்த்து1!

கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளே பாட புத்தகங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன்!

பெற்றோர்களும், ஆசிரியர்களும் மீண்டும் வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களின் மனநிலை – உடல்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாசிப்பிலும் விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டி மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment