இந்தியா- பாகிஸ்தான் போட்டியை காண சென்ற பாகிஸ்தான் யூடியூபர் சுட்டுக் கொலை- ரசிகர்கள்

நியூயார்க்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 19-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய இந்தியா 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் இந்தப் போட்டியை காண வந்த பாகிஸ்தானை சேர்ந்த யூடியூபர் ஷாத் அகமத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து நியூயார்க் கடை வீதிகளில் ஷாத் அகமது வீடியோ எடுத்து வந்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பாதுகாவலரிடம் ஒருவரிடம் போட்டி குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு அந்த பாதுகாவலரோ பதில் அளிக்க மறுத்திருக்கிறார்.

திரும்ப திரும்ப கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பாதுகாவலர் ஷாக் அகமதுவை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதையடுத்து, அங்கிருந்த நண்பர்கள் அகமதுவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். ரசிகரை சுட்டுக் கொன்ற பாதுகாவலரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘மோடியின் குடும்பம்’ என்பதை நீக்குமாறு பாஜகவினருக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

பீகார் மாநில முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ், பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என பொதுக்கூட்டத்தில் பேசும்போது விமர்சனம் செய்திருந்தார். இதனையொட்டி பா.ஜனதா தலைவர்கள் மோடியின் குடும்பம் என எக்ஸ் தளத்தில் தங்களது பெயருக்கு பின் குறிப்பிட்டு ஆதரவு தெரிவித்தனர்.

பாஜகவினரின் பெயருக்கு பின்னால் ‘மோடியின் குடும்பம்’ என சமூகவலைத்தளங்களில் வைத்திருப்பதை நீக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

“தேர்தல் பிரச்சாரத்தின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சமூக ஊடகங்களில் என் மீதான பாசத்தின் அடையாளமாக தனது பெயருக்கு பின் ‘மோடியின் குடும்பம்’ சேர்த்தனர். நான் அதிலிருந்து நிறைய பலம் பெற்றேன்.

இந்திய மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக பெரும்பான்மையை வழங்கியுள்ளனர், இது ஒரு சாதனையாகும், மேலும் நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கான ஆணையை அவர்கள் நமக்கு வழங்கியுள்ளனர்.

நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி திறம்பட தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் உங்கள் சமூக ஊடக கணக்குகளில் இருந்து ‘மோடியின் குடும்பம்’ என்பதை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பெயர்கள் மாறலாம். ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் நம் ஒரே குடும்பம் என்ற உறவு எப்போதும் வலிமையாகவும், உடைக்கப்படாமலும் இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

மோடியின் இந்த டுவீட் தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், “மோடி குடும்பம் உருவானது. ஊழல்வாதிகள் அனைவரும் அந்தக் குடும்பத்தின் அங்கமாகிவிட்டனர்” என்று விமர்சித்துள்ளார்.

நீட் தேர்வு விவகாரம்-முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது: மா.சுப்பிரமணியன் தாக்கு

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் என்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தற்போது நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் இந்தியா முழுவதும் உள்ள கல்வியாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் சமுதாயம் பொங்கி எழுந்து வருகிறது.

நாடுமுழுவதும் 23 லட்சத்து 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற தகவல் முறையாக தெரிவிக்கப்படவில்லை. இவ்வாறு இதில் பல குழப்பங்கள் இருக்கின்றன.

நீட் தேர்வில் முறைகேடு நடக்கவில்லை என சொல்வது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போன்றது.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன. தமிழக அரசின் சட்டத்துறை சார்பிலும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

‘கலவரம் செய்தால்தான்’.. இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் கைது

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அதிமுக, பாஜக கூட்டணி தோல்வியை சந்தித்தது.

குறிப்பாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

இந்நிலையில், இந்து மக்கள் கட்சி செயலாளர், நெல்லை பாஜக மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் பேசிய பரபரப்பு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த ஆடியோவில், “தமிழ்நாட்டில் 40 இடங்களில் ஒன்றில் கூட நம்மால் வெல்ல முடியவில்லை. இது வேதனையாக உள்ளது. நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் கொடுத்த பணத்தை முறையாக விநியோகிக்காததே தோல்விக்கு காரணம். கலவரம் பண்ணாதான் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியும்” என்று பேசியுள்ளனர்.

இந்நிலையில், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் உடையார் நெல்லையில் கைது செய்யப்பட்டார்.

பாளையங்கோட்டை எஸ்.ஐ. துரைபாண்டி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மதரீதியான பிரச்சனையை தூண்டியது, பொது அமைதியை குலைத்தல், அவதூறு பரப்புதல் என 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

தேர்தலுக்கு முன்பாக தாம்பரம் ரெயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என கூறப்படும் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

வாரணாசியில் பிரியங்கா போட்டியிட்டிருந்தால்… எச்சரிக்கை விடுத்த ராகுல் காந்தி

பாராளுமன்ற தேர்தலில் உ.பி.யின் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வென்றார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும், மூத்த தலைவருமான ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் இன்று ரேபரேலி தொகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் அவர்கள் இருவரும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

எங்களை வெற்றிபெறச் செய்த அனைத்து தலைவர்களுக்கும், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கும், அமேதி மற்றும் ரேபரேலி மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த முறை காங்கிரஸ் கட்சி அமேதி, ரேபரேலி, உத்தர பிரதேசம் மற்றும் நாடுமுழுவதும் ஒற்றுமையாக போராடியது. இந்த முறை சமாஜ்வாதி தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்களுடன் ஒற்றுமையாக போராடினார்கள்.

அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவையும், ரேபரேலியில் என்னையும், உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்களையும் வெற்றிபெறச் செய்தீர்கள்.

ஒட்டுமொத்த நாட்டின் அரசியலையும் மாற்றிவிட்டோம் என பொதுமக்கள் செய்தி அனுப்பியுள்ளனர். நாட்டின் பிரதமர் அரசியல் சட்டத்தை தொட்டால், மக்கள் அவரை என்ன செய்வார்கள் என்று பாருங்கள்.

பா.ஜ.க. அயோத்தி தொகுதியை இழந்தது. அயோத்தியில் மட்டுமல்ல, வாரணாசியிலும் பிரதமர் பிழைத்தார். வாரணாசியில் என் சகோதரி போட்டியிட்டிருந்தால் பிரதமர் 2 முதல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பார் என தெரிவித்தார்.

புதுச்சேரியில் கழிவறையில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் பலியான சம்பவம் ரூ.70 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு

புதுவையில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது. இந்த பாதாள சாக்கடைகளில் வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. ஒரு சில இடங்களில் வீடுகளில் கழிவுகளையும் நேரடியாக பாதாள சாக்கடைகளில் அனுப்புவதாக புகார்கள் உள்ளது.

கழிவிலிருந்து கார்பன் மோனாக்சைடு, மீத்தேன் உட்பட விஷ வாயு உற்பத்தியாகும் சாத்தியக்கூறுகள் உள்ளது. இந்த நிலையில் ஆங்காங்கே கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து அனுப்ப கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

ரெட்டியார்பாளையம் கனகன் ஏரிக்கு அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விஷவாயு உற்பத்தியாகி பாதாள சாக்கடை வழியாக வீடுகளில் உள்ள கழிவறைக்குள் புகுந்துள்ளது.

நேற்று வழக்கம்போல ரெட்டியார்பாளையம் புதுநகர் 4-வது தெருவில் கழிவறைக்கு சென்றவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். 4-வது தெருவை சேர்ந்த செந்தாமரை(80) கழிவறைக்கு சென்றபோது மயங்கி விழுந்தார். அவரின் மகள் காமாட்சி(45) தாய் விழுந்ததை கண்டு அவரை மீட்க சென்றார். அவரும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். காமாட்சியின் மகள் பாக்கியலட்சுமி(28)யும் மயங்கி விழுந்தார். அதே தெருவில் அடுத்த வீட்டில் வசிக்கும் ஆரோக்கியதாஸ் மகள் செல்வராணி(16) அவரும் கழிவறைக்கு சென்றபோது மயங்கி விழுந்தார்.

அதே பகுதியயை சேர்ந்த பாலகிருஷ்ணாவும் மயங்கி விழுந்தார். இதையடுத்து அந்த பகுதியில் கழிவறையிலிருந்து விஷவாயு வெளியேறும் தகவல் காட்டுத்தீயாக பரவியது. இதனால் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறினர்.

மூதாட்டி செந்தாமரை, அவரின் மகள் காமாட்சி, செல்வராணி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் 3 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

விஷ வாயு தாக்கியதால் பாதிக்கப்பட்ட பாக்கியலட்சுமி, ஆரோக்கியதாஸ், பாலகிருஷ்ணா ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விஷ வாயு பரவிய பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. பொதுப்பணித்துறையினர், தீயணைப்பு துறையினர், போலீசார் அப்பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

பாதாள சாக்கடை வழியாக விஷவாயு பரவியதா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்
இதையடுத்து அந்த பகுதியில் உள்ள வீடுகளில் கழிவறை வழியாக விஷவாயு பரவலாம் என முன்னெச்சரிக்கை விடப்பட்டது. அரசு தரப்பில் உடனடியாக அப்பகுதியில் 10 தெருக்களில் வசிக்கும் மக்கள் வெளியேறும்படி மைக் மூலம் எச்சரிக்கப்பட்டது.

இதனால் அங்கிருந்த மக்கள் வெளியேறினர். பாதிக்கப்பட்ட 4-வது தெரு மட்டும் சீல் வைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் வசித்த மக்கள் முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் முக கவசம் அணிந்துள்ளனர். அவர்களிடம் . 20 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் வீடுவீடாக சென்று பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்த அப்பகுதி மக்களுக்கு மருத்தவ பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் விழுப்பும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதே நேரத்தில் 3 போர்‌ உயிரிழந்த சம்பவம் குறித்து முதல்வர் ரங்கசாமி துறை அதிகாரிகளுடன்‌ சட்டப்பேரவையில்‌ உள்ளஉதனது அலுவலகத்தில்‌ ஆலோசனை நடத்தினார்‌.இதன்‌ பின்னர்‌, செய்தியாளர்களிடம்‌முதல்வர்‌ ரங்கசாமி கூறுகையில்‌: “புதுச்சேரியில்‌ அனைத்துப்‌ பகுதிகளிலும்‌ பாதாள
சாக்கடை அமைக்கும்‌ பணிகள்‌ முடிவடைந்து வீடுகள்தோறும்‌ இணைப்பு கொடுக்கும்‌ பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்‌, புதுச்சேரி, ரெட்டியார்பாளையம்‌, புதுநகரில்‌ பாதாள சாக்கடை வழியாக வீடுகளுக்கு விஷவாயு கசிந்ததன்‌ மூலம்‌ 2 முதியவர்களும்‌ ஒரு சிறுமியும்‌ விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்‌. இது மிகுந்த வருத்தத்தையும்‌, துயரத்தையும்‌ அளிப்பதாக உள்ளது. இந்த சம்பவம்‌ குறித்து மாவட்ட ஆட்சியரும்‌ பொதுப்பணித்துறை அதிகாரிகளும்‌ உரிய ஆய்வினை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது, அவர்கள்‌ அளிக்கும்‌ அறிக்கையின்‌ அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌. விஷவாயு பரவாமல்‌ தடுக்க ரெட்டியார்பாளையம்‌ பகுதி மட்டுமன்றி, புதுச்சேரியின்‌ அனைத்துப்‌ பகுதிகளிலும்‌ஆய்வு செய்யப்படும்‌. விஷவாயு பரவாமல்‌ தடுக்கஅதிகாரிகள்‌ நடவடிக்கை எடுத்து வருகின்றனர்‌.
விஷவாயுதாக்‌கிஇறந்த 2 முதியவர்களின் ‌குடும்பத்தினருக்கு தலா ரூ.20 இலட்சமும்‌, இறந்த சிறுமியின்‌ குடும்பத்திற்கு ரூ.30 இலட்சமும்‌ நிவாரணமாக வழங்கப்படும்‌.” என்று கூறினார்‌.இந்த ஆய்வு கூட்டத்தின்போது சபாநாயகர்‌ செல்வம்‌,பொதுப்பணித்துறை அமைச்சர்‌ லட்சுமிநாராயணன்‌,சட்டமன்ற உறுப்பினர்கள்‌ கல்யாணசந்தரம்‌, நேரு (எ]குப்புசாமி, மாவட்ட ஆட்சியர்‌ குலோத்துங்கன்‌, அரசுச்‌செயலர்‌ நெடுஞ்செழியன்‌, சுகாதாரத்துறை இயக்குநர்‌
டாக்டர்‌ ஸ்ரீராமுலு, பொதுப்பணித்துறை தலைமைப்‌பொறியாளர்‌ மற்றும்‌ அதிகாரிகள்‌ உடனிருந்தனர்‌.

Related posts

Leave a Comment