குவைத் தீவிபத்து- 3 தமிழர்கள் உயிரிழப்பு

வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத், ஏராளமான புலம்பெயர் மக்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. உலக அளவில் எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு என்பதால், அங்குள்ள எண்ணெய் வயல்கள், சுத்திகரிப்பு மையங்கள் என அது சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் குவைத்தில் வசிக்கின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவர். பிற வளைகுடா நாடுகளைப்போல குவைத்திலும் இந்தியர்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். குவைத்தின் மொத்த மக்கள் தொகையில் 21 சதவீதத்தினர், அதாவது சுமார் 10 லட்சம் பேர் இந்தியர்கள் ஆவர். மேலும் நாட்டின் தொழிலாளர் வர்க்கத்திலும் 30 சதவீதம் பேர் (சுமார் 9 லட்சம்) இந்தியாவை சேர்ந்தவர்கள். குவைத்தில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றி வரும் இந்தியர்கள் பலர் குடும்பமாக தங்கியிருக்கின்றனர். அதேநேரம் குடும்பத்தினரை இங்கே விட்டுவிட்டு தனியாக வசிப்பவர்களும் அதிகமாக உள்ளனர். இவர்கள் பெரும்பாலும்…

குவைத்தின் தீ விபத்தில்மனிதச் சதைகள்கருகிய வாசம்உலகக் காற்றில் வீசுகிறது

இறந்த பின்தான்தகனம் செய்வார்கள்;தகனம் செய்துஇறப்பைத் தந்திருக்கிறதுநெருப்பு இதயத்தின்மெல்லிய தசைகள்மெழுகாய் உருகுகின்றன உலகம்தோன்றிய நாளிலிருந்துவிபத்துகள் புதியனவல்ல விஞ்ஞானம் வளர்ந்தபின்னும்அது தொடர்வதுபாதுகாப்பு அளவீடுகளின்குறைபாடுகளைக் காட்டுகிறது மனிதத் தவறுகள்திருந்தவில்லை என்றுவருந்திச் சொல்கிறது மாண்டவர்களுக்காகஅழுது முடித்த இடத்தில்அழத் தேவையில்லாத சமூகத்தைவார்த்தெடுக்க வழி சமைப்போம் உலகத் தொழிலாளர்களுக்குஎன் இந்தியக் கண்ணீர்

ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி

இத்தாலியில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று இத்தாலி புறப்படுகிறார். உக்ரைன்-ரஷியா மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் என உலக நாடுகளில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் நடைபெற இருப்பதால் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஜூன் 13 ஆம் தேதி துவங்கும் ஜி7 மாநாடு ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த முறை ஜி7 மாநாட்டை நடத்தும் இத்தாலி, மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் என ஏழு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள இத்தாலி விரைகின்றனர். அதன்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்,…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- தி.மு.க. தேர்தல் பணிக்குழு அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் தாக்கல் நாளை தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கலுக்கான கடைசி நாள் ஜூன் 21-ந்தேதி ஆகும். மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-ம் தேதி நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன. இருப்பினும், இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் விவசாய தொழிலாளர் அணியின் மாநில செயலாளர் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலில் அறிவித்தார். இதை தொடர்ந்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது தி.மு.க. இதனைத் தொடர்ந்து தி.மு.க. சார்பில் 11 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற ஜூலை-10 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தலைமைக்…

குவைத் தீ விபத்தில் நமது குடிமக்கள் பாதுகாப்பிற்கு இந்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் – ராகுல் காந்தி

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இச்சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டததில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள…

புதுச்சேரி உள்துறை அமைச்சர் இறந்தவர்கள் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி இறந்தவர்கள்உடலுக்கு அமைச்சர் நமச்சிவாயம் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்,தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருத்தத்தை தெரிவித்து கொண்டார்.

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் உடல்களுக்கு காங்கிரசார் அஞ்சலிசெலுத்தினர்

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் உடல்களுக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்

95 முறை மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை

மத்தியப் பிரதேச மாநிலத்தில், கடந்த 2022 ஆம் ஆண்டு தனது மாமியாரை 95 முறைக்கு மேல் கத்தியால் குத்தி கொலை செய்த 24 வயது பெண்ணுக்கு அம்மாநில நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பின்போது, ரேவா மாவட்டத்தின் நான்காவது கூடுதல் அமர்வு நீதிபதி பத்மா ஜாதவ், “தனது 50 வயது மாமியார் சரோஜ் கோலைக் கொன்றதற்காக காஞ்சன் கோல் குற்றவாளி” என்று தீர்ப்பளித்துள்ளார். மங்காவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அட்ரைலா கிராமத்தில் வசிக்கும் காஞ்சன், குடும்பத் தகராறை தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி அன்று தனது மாமியார் சரோஜ் கோலை அரிவாளால் 95 முறை குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். அப்போது வீட்டில் ரத்த வெள்ளத்தில் தனியாக கிடந்த சரோஜை, அவரது மகன் மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், சரோஜ் இறந்துவிட்டதாக…

காங்கோவில் சோகம்: ஆற்றில் படகு கவிழ்ந்து 80 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான காங்கோவின் மாய்-நிடோம்பே மாகாணத்தில் காங்கோ ஆற்றின் கிளை ஆறுகளில் ஒன்றான குவா ஆறு பாய்கிறது. இந்த ஆற்றில் நேற்று முன்தினம் இரவு மிகப்பெரிய படகு ஒன்று கவிழ்ந்து மூழ்கியது. முஷீ நகரில் இருந்து தலைநகர் கின்ஷாசா நோக்கி வந்த படகு, லெடிபா கிராமத்தின் அருகே வந்தபோது விபத்தில் சிக்கியது. படகில் பயணித்த அனைவரும் ஆற்றில் விழுந்தனர். நீச்சல் தெரிந்தவர்கள் கரையை நோக்கி நீந்தினர். மற்றவர்கள் மூழ்கினர். விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழு அங்கு விரைந்து சென்றது. ஆற்றில் தத்தளித்தவர்களை மீட்டனர். இறந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன. இன்று மாலை நிலவரப்படி 21 குழந்தைகள் உள்பட 80க்கும் அதிகமானோரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியானது. பலர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

குவைத் தீ விபத்து: உதவி எண்களை அறிவித்துள்ள தமிழநாடு அரசு

குவைத் நாட்டின் மங்காஃப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் தமிழர்கள் எவரேனும் உள்ளனரா என்ற தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்களான, +91 1800 309 3793 (இந்தியாவுக்குகுள் ), +91 80 6900 9900, +91 80 6900 9901 (வெளிநாடு ) தொடர்பு கொள்ளலாம் என்று அயலக தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: குவைத் நாட்டின் மங்காஃப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில், இன்று (ஜூன் 12) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக, சுமார் 49 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வரப்பெற்றுள்ளது. அவர்களுள் எவரேனும் தமிழர் உள்ளனரா என்ற தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் விபத்தில்…