Blog

பக்ரீத் பண்டிகை- புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பக்ரீத் பண்டிகை என்பது உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய மக்களால் தியாகத்தின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தியாகம், இரக்கம், நன்றியுணர்வு போன்ற மனித மாண்புகளின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் இதுபோன்ற பண்டிகைகள் சமூகங்களுக்கு இடையேயான பிணைப்புகளை வலுப்படுத்தி நல்லிணக்க உணர்வை வளர்க்க உதவுகின்றன. பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் இந்த புனிதமான நாளில் அல்லாஹ்வின் ஆசீர்வாதமும் கருணையும் அனைவரது குடும்பத்திலும் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும் என்று கூறி, அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து தந்தையர் தின வாழ்த்து

முதலமைச்சர் ஸ்டாலின் தனது தந்தை மு. கருணாநிதிக்கு நன்றி மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் தனது தந்தை அவருக்கும் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவரது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது, “தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடைய வேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!” என்று கூறியுள்ளார்

தமிழக தலைவர்கள் பக்ரீத் வாழ்த்து

பக்ரீத் பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பக்ரீத் திருநாள் வாழ்த்து வருமாறு:- நபிகள் நாயகம் காட்டிய வழியில் சமத்துவம்-சகோதரத்துவம்-அன்புநெறி ஆகியவற்றைப் பின்பற்றி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள். ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை ‘ஈத்துவக்கும் இன்பம்’ என்பார் அய்யன் திருவள்ளுவர். அந்த இன்பத்தை எய்திட இசுலாமியப் பெருமக்களுக்கு வழிகாட்டுவதே இந்த பக்ரீத் பெருநாள்! நபிகள் நாயகத்தின் போதனைகள் அன்றாட வாழ்வில் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறவழிக்கான அறிவுரைகளாகவே அமைந்திருக்கின்றன. நபிகள் நாயகத்தின் அத்தகைய அறிவுரைகளைப் பின்பற்றி வாழ்கின்ற இசுலாமிய மக்கள் அனைவரும் இந்த பக்ரீத் பெருநாளை இனிதே கொண்டாடி மகிழ எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர்…

மழையால் இந்தியா, கனடா டி20 உலகக் கோப்பை போட்டி ரத்து

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வென்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்திய இந்தியா, தனது 4-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று கனடாவை எதிர்கொள்ள இருந்தது. இப்போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில்லில் நடைபெற இருந்தது. மழை பெய்ததால் மைதானத்தில் ஈரப்பசை அதிகம் இருந்ததால். இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், இந்தியா-கனடா இடையிலான போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி 7 புள்ளிகளுடன் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ளது. கனடா 3 புள்ளிகள் பெற்று 3-ம் இடத்தில் உள்ளது.

குவைத் தீ விபத்து- செஞ்சி, காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் உடல் சொந்த ஊரில் அடக்கம்

குவைத் நாட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிருஷ்ணாபுரம் ஜாபர் பேக் தெருவை சேர்ந்த முகமது ஷெரிப் (வயது 35) மற்றும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் பகுதியை சேர்ந்த சின்னத்துரை உள்பட தமிழகத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். நேற்று காலை குவைத் நாட்டில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சி விமான நிலையம் கொண்டு வரப்பட்ட முகமது ஷெரீப் மற்றும் சின்னத்துரை உள்ளிட்ட 7 தமிழர்களின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்ட நிலையில், நேற்று பிற்பகல் தனி ஆம்புலன்ஸ் மூலம் முகமது ஷெரீப் மற்றும் சின்னத்துரை உடல்கள் செஞ்சி மற்றும் காட்டுமன்னார்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், நள்ளிரவு முகமது ஷெரீப் மற்றும் சின்னத்துரை உடல்கள் அவர்களது இல்லத்திற்கு வந்தது. அப்பொழுது முகமது ஷெரீப் மற்றும் சின்னத்துரை…

லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இந்திய ரெயில்வே அமைச்சகம்

இந்திய ரெயில்வே அமைச்சகம் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி நாடு முழுவதும் 2,140 இடங்களில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாகப் பங்கேற்று பல்வேறு ரெயில்வே துறை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து 40 லட்சத்து 19 ஆயிரத்து 516 பேர் கலந்து கொண்டனர். இந்திய அளவில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட பொது நிகழ்ச்சி ஒன்றில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொண்ட சாதனையாக இந்த நிகழ்ச்சி அமைந்தது. இந்நிலையில், லிம்கா சாதனை புத்தகத்தில் இந்த நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழை லிம்கா புக் ஆப் ரெகார்ட்ஸ் தற்போது வழங்கியுள்ளது.

மக்களுக்கான குரல் வலுவாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகிறது- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் திமுக முப்பெரும் விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- கடந்த முறை நான் கலந்துக் கொண்ட கூட்டம் இந்தியா முழுவதும் டிரெண்டானது. 8 முறை பிரதமர் மோடி வந்து கட்டமைத்த பிம்பத்தை ஸ்வீட் பாக்ஸ் மூலம் ராகுல் முறியடித்தார். நாற்பதும் நமதே என முழங்கினேன். நடக்குமா என கேள்வி எழுப்பினார்கள். என் நம்பிக்கைக்கு ஆதாரம் கூட்டணி தலைவர்கள். நாற்பது தொகுதிகளிலும் வெற்றி. 40க்கு 40க்காக உழைத்த திமுக தொண்டர்கள், இந்தியா கூட்டணி கட்சியினருக்கு நன்றி. இது சாதாரண வெற்றி அல்ல. வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. 2004ல் 40க்கு 40 வெற்றியை பெற்று தந்தார் தலைவர் கலைஞர். திமுக அரசு மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி. இது சாதாரண வெற்றி அல்ல, வரலாற்று சிறப்புமிக்க…

புதுச்சேரி பாஜக தலைவர் பதவி விலக கோரி அரை நிர்வாண போராட்டம் நடத்திய பா.ஜனதா நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

புதுவை பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியடைந்தார். தேர்தல் தோல்விக்கு பாஜக மாநில தலைவர் செல்வகணபதியின் அணுகுமுறை தான் காரணம் என்று முன்னாள் தலைவர் சாமிநாதன் ஏற்கனவே போர்கொடி உயர்த்தினார். அதோடு மட்டுமல்லாது செல்வகணபதியை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் அல்லது தார்மீக பொறுப்பேற்று அவர் தானாக முன் வந்து பதவி விலக வேண்டும் என வலிறுத்தியிருந்தார். இந்த நிலையில் நேற்று கட்சியின் மாநில செயலாளர் ரத்தினவேலு பாஜக தலைமை அலுவலகத்தில் உள்ள பாரத மாதா சிலையின் கீழ் அமர்ந்து மேல் சட்டை அணியாமல் திடீரென அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். இது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை எற்படுத்தியது, அவரை அங்கிருந்த நிர்வாகிகள் சமாதானப்படுத்தி அனுப்பினர். அரை நிர்வாண போராட்டம் நடத்திய மாநில செயலாளர் ரத்தினவேலு கட்சி பொறுப்பில்…

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்- சசிகலா கோரிக்கை

சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நீட் தேர்வு இல்லாமல் மருத்துவ கல்வியை தமிழகத்தில் இருந்து படித்து முடித்து எத்தனையோ மருத்துவர்கள் இன்றைக்கு மருத்துவத்துறையில் சாதித்துக்கொண்டு இருக்கிறார்கள். துணி துவைக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் குடும்பத்தில் இருந்து வந்து நன்றாக படித்து இன்றைக்கு சென்னையிலேயே ஒரு சிறந்த இதயநோய் மருத்துவராக சேவையாற்றிக்கொண்டு இருக்கிறார் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே மத்திய அரசு தமிழகத்தில் உள்ள இளம் சமுதாயத்தினரின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு நீட் விலக்கு பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேணடும். தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு பெறுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

முதன்முறையாக காகங்களுக்கு பறவை காய்ச்சல் உறுதி

கேரளாவில் மக்களை அச்சுறுத்தி வரும் நோய்களில் ஒன்று பறவை காய்ச்சல். இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் தான் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. வாத்து, கோழி ஆகியவற்றின் மூலமாக தான் பறவை காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது. தற்போது அது காகங்கள் மூலமாகவும் பரவுவதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக கேரளாவில் வாத்து, கோழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மாநிலத்தில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பறவைகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த காய்ச்சல் மனிதர்களை தாக்காது என கருதப்பட்டு வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 59 வயது நபர் மெக்சிகோ நாட்டில் பறவைக் காய்ச்சல் தாக்கி இறந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.இதனால் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை கேரளாவில் தீவிரப்படுத்தப்பட்டது. பறவைக் காய்ச்சல் பரவுவது குறித்து ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது.…