புதுச்சேரி பிளஸ் 2 தேர்வில் ஒரே ஒரு அரசுப் பள்ளி மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி 526 பேர் 100க்கு 100 பெற்றுள்ளனர்

பிளஸ் 2 தேர்வில் புதுச்சேரி, காரைக்காலில் 92.41 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டை விட 0.26 சதவீதம் குறைவு. மேலும், 55 அரசு பள்ளிகளில் ஒரெயொரு பள்ளி மட்டுமே நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 12-ம் வகுப்புகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அறிமுகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது: புதுவை, காரைக்காலில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்2 பொதுத்தேர்வை 6 ஆயிரத்து 566 மாணவர்களும், 7 ஆயிரத்து 446 மாணவிகளும் என மொத்தம் 14 ஆயிரத்து 012 பேர் தேர்வு எழுதினர். இதில் புதுவை அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 867 மாணவர்கள், 7 ஆயிரத்து 081 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.புதுவையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களில் 86.39 சதவீதம்,…

புதுச்சேரி மாநில தொமுச சார்பில் மே தினம் கொண்டாட்டம்

புதுச்சேரி மாநில தொமுச சார்பில் மே தினம் கொண்டாட்டப்பட்டது.அதில் 30 இடங்களில் கொடியேற்றி தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார். தொழிலாளர் தினத்தையொட்டி புதுச்சேரி மாநில தொமுச சார்பில் சுதேசி பஞ்சாலை, மாஸ் ஹோட்டல், பழைய சட்டக்கல்லூரி, கதிர்காமம், புவன்கரே வீதி ஆட்டோ ஸ்டேண்ட், மூலகுளம் ஆட்டோ ஸ்டேண்ட், மேட்டுப்பாளையம் தேவி பாட்டில் தொழிற்சாலை, திருவள்ளுவர் பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலைய ஆட்டோ தொழிற்சங்கங்கள், தந்தை பெரியார் போக்குவரத்து கழக பணிமனை, பிஆர்டிசி பணிமனை, வில்லியனூர் ஆட்டோ மற்றும் டெம்போ ஓட்டுநர்கள் சங்கம், நோணாங்குப்பம் போட்ஹவுஸ் உள்ளிட்ட 30 இடங்களில் தொமுச கொடி ஏற்றுதல் மற்றும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. தொமுச பேரவைத் தலைவர் அண்ணா அடைக்கலம் தலைமை தாங்கினார். தொமுச நிர்வாகிகள் அங்காளன்,…

தமிழக அரசு நிதியுதவியுடன்அரபு மொழியில் பாரதிதாசனின் கவிதைகள் நூல் புதுவை தலைமை நீதிபதி வெளியிட்டார்

புரட்சிக்கவிஞர்‌ பாவேந்தர்‌ பாரதிதாசன்‌ 134-ஆம்‌ பிறந்தநாள்‌ விழா. உலகத்‌ தமிழ்மொழி நாள்‌ – உலகத்‌ தமிழ்க்‌ கவிஞர்‌ நாள்‌ விழா  கொண்டாடப்பட்டது. இதில் பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகள் அரபுமொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.புதுவை தமிழ் சங்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாரதிதாசனின் பேரன் பாரதி தலைமை தாங்கினார்.பாவலா் இராஸ்ரீமகேஷ் வரவேற்றாா்.புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்றத் தலைமை நீதிபதி த.சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு , அரபு மொழியில் மொழி பெயா்க்கப்பட்ட பாரதிதாசன் கவிதைகள் நூலின் முதல் படியை வெளியிட்டாா். அதனை, புதுச்சேரி அரபிக் ஆய்வு மைய நிறுவனா் சையது நிஜாமிஷாஹ் நூரி பெற்றுக் கொண்டாா். விழாவில் புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவா் வி. முத்து பாராட்டிப் பேசினாா். மதுரை அரபிக் கல்லூரி முதல்வா் முஹம்மத் முஸ்தஃபா நூலின் சிறப்பினை எடுத்துரைத்தாா். நூலாசிரியா் ஜாகிா் ஹூசைன் ஏற்புரையாற்றினாா். விழாவில்…