விழுப்புரத்தில் இடி மின்னலுடன் மழைவாக்கு எண்ணும் மையத்தில் கேமராக்கள் பழுது

தமிழகத்தில், பாராளுமன்ற தேர்தல் வாக்குகள், 39 மையங்களில் எண்ணப்பட உள்ளன. மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் முத்திரையிடப்பட்டு, அறைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி சீலிடப்பட்டுள்ளன.வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தில், மூன்றடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அலுவலர்கள், 24 மணி நேரமும் பாதுகாப்பில் உள்ளனர். அறை உள்ளேயும், வெளியிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏழு தொகுதிகளின் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளது. இங்கு 300 சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு பணிக்காக பொருத்தப்பட்டுள்ளது.இன்று காலை இடி மின்னலுடன் பெய்த மழையால் 7.30 மணிக்கு வெளியே பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த ஏழு சிசிடிவி கேமராக்கள் திடீரென பழுதானது.…

.நெல்லை ஜெயக்குமார் மர்ம மரணம் குறித்து இளம் பெண்ணிடம் போலீசார் விசாரணை

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங், மர்ம மரணம் தொடர்பாக இளம்பெண் ஒருவரிடம் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கூறப்படுவதாவது: போலீசாரால் விசாரணை நடத்தப்படும் இளம்பெண் ஜெயக்குமாருக்கு நன்கு அறிமுகமானவர். அவரை ஓரிரு முறை ஜெயக்குமார் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனால், வீட்டில் பிரச்னை எழுந்தது. அந்த பெண்ணிடம் 2 நாட்களாக விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டு உள்ளது. இதனிடையே, ஜெயக்குமார் தனசிங்கின் கையெழுத்தில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. மரண வாக்குமூலம் என்ற பெயரில் ஒரு கடிதமும், குடும்பத்தினருக்கு என மற்றொரு கடிதமும் ஜெயக்குமார் தனசிங் பெயரில் வெளியாகின. இந்நிலையில் மற்றொரு கடிதமும் வெளியாகி உள்ளது. இதில் உள்ள கையெழுத்துகள் வெவ்வேறாக உள்ளது. இதனிடையே கடந்த மார்ச் மாதம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி…

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் வருகிற 13-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கம்

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் வருகிற 13-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது இந்தியா – இலங்கை இடையே வர்த்தகம், சுற்றுலா மேம்பட கப்பல் சேவையை துவக்க, நாகப்பட்டினத்தில் இருந்து 60 கடல் மைல் தொலைவில் காங்கேசன் துறைமுகத்திற்கு, சிறிய பயணியர் கப்பல்களை இயக்க கடந்த ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான, 150 பயணியர் பயணிக்கும் வகையில் குளிர்சாதன வசதியுடன் உருவாக்கப்பட்ட, ‘சிரியா பாணி’ என்ற சிறிய கப்பல், கடந்த ஆண்டு அக்., 14ல் இயக்கப்பட்டது. கடலின் பருவ மாற்றத்தால் சில தினங்களில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.இந்நிலையில், தனியார் வசம் கப்பல் போக்குவரத்து சேவை ஒப்படைக்கப்பட்டு, வரும் 13 முதல், இலங்கைக்கு மீண்டும் பயணியர் கப்பல் போக்குவரத்து துவங்குகிறது. இது குறித்து தனியார் கப்பல் போக்குவரத்து நிர்வாக இயக்குனர் நிரஞ்சன்…

சென்னையில் சிறுமியை கடித்து குதறிய, ராட்வெய்லர் நாய்களின் உரிமையாளர்கள் கைது-காவல்நிலைய ஜாமீனில் விடுதலை

சென்னையில் சிறுமியை கடித்து குதறிய, ராட்வெய்லர் நாய்கள் உரிமம் இன்றி வளர்க்கப்பட்டுள்ளது’ என சென்னை மாநகராட்சி கமிஷனர் விளக்கம் அளித்துள்ளார். அது மட்டுமின்றி ராட்வெய்லர் நாய் இனத்தை இந்தியாவில் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட நாய்களை வளர்க்கலாமா? என சமூகவலைதளத்தில் விவாதம் கிளம்பி உள்ளது.சென்னை ஆயிரம் விளக்கு மாதிரிப் பள்ளி சாலையில் உள்ள பூங்காவில் 5 வயது சிறுமியை இரண்டு ராட்வெய்லர் வகை வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறியது. பலத்த காயத்துடன் சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாயின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேசன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேர் மீதும், 2 பிரிவுகளின் கீழ் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, ராட்வெய்லர் நாய்களின் உரிமையாளர் புகழேந்தி காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.…

26 ஆயிரத்து 352 பேர் தமிழக பிளஸ் 2வில் 100க்கு 100 பெற்று மாணவர்கள் சாதனை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் முக்கியப் பாடங்களில் 100% மதிப்பெண் பெற்ற மாணாக்கரின் எண்ணிக்கை தொடர்பான விவரமும் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ் மொழிப் பாடத்தில் 35 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 7 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடத்தில் 6996 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக வணிகவியலில் 6142 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். கணிதப் பாடத்தில் 2587 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இவ்வாறாக ஏதோ ஒரு பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை – 26,352 ஆக உள்ளது. பாடவாரியாக முழு மதிப்பெண்: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இத்தேர்வில்,…

பிளஸ் 2 தேர்வில் 95.75 சதவீதம் பெற்று திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மவட்டம் சாதனை

திருப்பூர்: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் 97.45 தேர்ச்சி சதவீதத்துடன் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து திருப்பூர் சாதனை படைத்துள்ளது. மேலும், அரசுப் பள்ளி அளவிலும் திருப்பூர் மாவட்டமே தேர்ச்சியில் முதலிடம் பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 849 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் மாணவர்கள் 10,440 பேரும், மாணவிகள் 12 ஆயிரத்து 802 பேரும் என மொத்தம் 23 ஆயிரத்து 252 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் சதவீதம் 97.45 ஆகும். தமிழகத்தில் முதல் இடம் பிடித்து திருப்பூர் மாவட்டம் சாதனை படைத்துள்ளது.கடந்த ஆண்டு 2-து இடம் பிடித்திருந்தாலும், அதற்கு முன்னதாக 2019, 2020-ம் ஆண்டுகளில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. நடப்பு ஆண்டும் முதல் இடம் பிடித்ததால் 3 முறை முதலிடம் பிடித்த மாவட்டம் என்ற பெருமையை திருப்பூர் மாவட்டம் பெற்றுள்ளது.…

பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! தமிழக முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியாகியிருக்கும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு இன்று முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ளார். அதன்படி, மொத்தம் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு 94.03% விகிதம் தேர்ச்சி பதிவாகியிருந்த நிலையில் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவிகள் 96.44%, மாணவர்கள் 92.37% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,…

குவியும் சுற்றுலாப்பயணிகள் குலுங்கும் கொடைக்கானல்

கொடைக்கானலுக்கு செல்ல மே 7ஆம் தேதிமுதல் இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் வருகை தற்போது அதிகரித்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை சீசன் களைகட்டியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 7ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பதிவு செய்த பிறகே கொடைக்கானலுக்கு வர முடியும். இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் வருகை வழக்கத்தைவிட தற்போது மிகவும் அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை என்பதாலும், அக்னி நட்சத்திரம் இன்று துவங்க உள்ளதாலும் சுற்றுலாப் பயணிகள் வருகை பல மடங்கு தற்போது அதிகரித்துள்ளது.இதனால் கொடைக்கானல் ஏரி, பிரையண்ட் பூங்கா, தூண் பாறை, குணா குகை, மோயர் பாயின்ட் உள்ளிட்ட இடங்களில் மக்கள்கூட்டம் அலைமோதுகிறது. கொடைக்கானலில் பகலில் வெப்பமான சூழலும், இரவில் இதமான சூழலும் நிலவி வருகிறது. மேலும் இங்கு முன்னெப்போதும் இல்லாத அளவில்…

சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்த வந்த போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது

யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்த வந்த போலீஸ் வாகனம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே விபத்துக்குள்ளது. இதில் காரில் இருந்த அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. சவுக்கு சங்கருக்கு உரிய சிகிச்சை வழங்கி மாற்று வாகனத்தில் அவரைக் கோவை அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. முன்னதாக, பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் இன்று அதிகாலை கைது செய்தனர். அவரை தேனியில் இருந்து கோவை அழைத்து வரும் வழியில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் காவல் துறை வாகனம் மீது லாரி மோதியதாக கூறப்படுகிறது. இதில் காவலர்கள் மற்றும் சவுக்கு சங்கர் என அனைவருக்குமே லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சவுக்கு சங்கருக்கு…