.”என்னைப் போல ராகுலையும் ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர் ஏமாற்ற மாட்டார்”: சோனியா காந்தி பேச்சு

”என் மகன் ராகுலை ரேபரேலி மக்களிடம் ஒப்படைக்கிறேன். என்னை ஏற்றுக்கொண்டது போல் நீங்கள் அவரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்; ராகுல் உங்களை ஏமாற்ற மாட்டார்” என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.,யுமான சோனியா பேசினார்.உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் இண்டியா கூட்டணி கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, ராகுல், அக்கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் பிரியங்கா பேசுகையில், ”கடந்த 10 ஆண்டுகளாக, நாட்டின் சாமானியர்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகள் துன்புறுத்தப்படுகிறார்கள். இந்த நாடு தனது குரலைக் கேட்க விரும்புகிறது. ஆனால் நரேந்திர மோடியின் அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. இந்த பா.ஜ., அரசை அகற்ற வேண்டும் என்ற புயல் வீசுகிறது,” என்றார்.எங்கள் குடும்பத்தின் வேர்கள் இந்த மண்ணின் மண்ணோடு இணைக்கப்பட்டுள்ளன. இந்த உறவு, கங்கை…

தேர்தலுக்கு முன்னதாகவே சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நோக்கதம் தெரிந்து விட்டது-பிரதமர் மோடி கடும் தாக்கு

தேர்தலுக்கு முன்னதாகவே சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நோக்கதம் தெரிந்து விட்டது-பிரதமர் மோடி கடும் தாக்கு ம்பிரதமர் மோடி இன்று உத்தர பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:- சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக உங்களை எச்சரிக்க இன்று நான் இங்கே வந்துள்ளேன். அவர்கள் உங்களுடைய வாக்கை பெற்றுக் கொள்வார்கள். ஆனால், அதிகாரத்திற்கு வந்த பிறகு அவர்களுக்காக வாக்கு ஜிஹாத் செய்பவர்களுக்கு பரிசுகளை பகிர்ந்து அளிப்பார்கள். இந்தமுறை தேர்தலுக்கு முன்னதாகவே சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நோக்கதம் தெரிந்து விட்டது. காங்கிரஸ் கட்சி ஒவ்வொருவரின் சொத்துகளையும் ஆய்வு செய்ய இருப்பதாக சொல்லிக்கொண்டு வருகிறது. பின்னர் அவர்கள் உங்களுடைய சொத்துகளின் ஒரு பகுதியை, அவர்களுடைய வாக்கு வங்கியான, அவர்களுக்காக “வாக்கு ஜிஹாத்”…

மனித மூளையில் சிப் பொருத்திக் கொள்ள- விண்ணப்பங்களை வரவேற்கும் நியூராலிங்க்

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் சமூக வலைதளம் மற்றும் நியூராலிங்க் என பல்வேறு நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். இவரது நியூராலிங்க் நிறுவனம் கை, கால் போன்ற உடல் உறுப்புகள் செயலிழந்தவர்கள் மொபைல், கணினி போன்ற சாதனங்களை எண்ணங்கள் மூலம் இயக்க செய்யும் சிப் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இந்த சிப் மனித மூளையில் பொருத்தி கொண்டால், பயனர்கள் கை, கால் உதவியின்றி எண்ணங்களாலேயே கர்சர் மூலம் மொபைல் போன் மற்றும் கணினி உள்ளிட்டவைகளை இயக்கிவிட முடியும். முதற்கட்டமாக விலங்குகளில் இந்த சோதனை நடத்தப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் நியூராலிங்க் உருவாக்கிய சிப்-ஐ மனித மூளையில் பொருத்தி சோதனை செய்வதற்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. அந்த வகையில், இந்த ஆண்டு துவக்கத்தில் நியூரிங்க் உருவாக்கிய டெலிபதி…

ஸ்வாதி மாலிவால் விவகாரம் பா.ஜனதாவின் சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை பெண் எம்.பி.யான ஸ்வாதி மாலிவால், தான் கெஜ்ரிவால் வீட்டில் அவரது தனிச் செயலாளரால் தாக்கப்பட்டேன் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.இது தொடர்பாக டெல்லி மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து ஸ்வாமி மாலிவால் தாக்கப்படவில்லை. இது பா.ஜனதாவின் சதி என 52 வினாடி வீடியோவை சுட்டிக்காட்டி ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி என குற்றம்சாட்டியுள்ளார். அந்த வீடியோவில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வீட்டிற்கு வந்திருந்த ஸ்வாதி மாலிவாலை, வெளியேறும்படி பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். இதனைக் கேட்டு ஸ்வாமி மாலிவால் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பாதுகாப்பு அதிகாரிகளை மிரட்டுகிறார். அவர்களை வெளியேற்ற முற்படுகிறார் என்பதுபோல் உள்ளது. இந்த வீடியோவை…

நியூஸ் க்ளிக்’ ஆசிரியரை கைது செய்தது செல்லாது: விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நியூஸ் க்ளிக்” நிறுவனர் மற்றும் ஆசிரியரை கைது செய்யப்பட்டது செல்லாது எனக்கூறியுள்ள உச்சநீதிமன்றம்,அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டு உள்ளது.சீனாவிடம் இருந்து நிதி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து நியூஸ்க்ளிக்செய்தி இணையதளதின் நிறுவனர் பரபீர் புரக்யஸ்தா மற்றும் மனித வளத்துறை தலைவர் அமித் சக்கரவர்த்தி ஆகியோரை கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டில்லி போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்(UAPA) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று( அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது: பரபீர் புரக்யஸ்தாவை கைது செய்ததும், சிறையில் அடைத்தது செல்லாது. கைது செய்ததற்கான காரணத்தை, அவரை கைது செய்வதற்கு முன்னர், அவரிடமோ அல்லது அவரது வழக்கறிஞரிடமோ கூறப்படவில்லை எனக்கூறிய நீதிமன்றம், அவரை சிறையில் இருந்து விடுதலை செய்ய…

கங்கை நதியின் தத்துப்பிள்ளை நான் பிரதமர் மோடி

நாடாளமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் இன்று (மே 14) பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் கங்கை நதியில் சிறப்பு பூஜைகள் நடத்தினார். வேத பட்டர்கள் மந்திரம் ஓத, பிரதமர் கங்கை நதியில் மலர்கள் தூவி வணங்கினார். தொடர்ந்து ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கங்கை நதியின் புனிதத்தை எடுத்து கூறினார். அவர் கூறியதாவது: கங்கை நதியின் தத்துப்பிள்ளை நான். எனது தாய் மறைவுக்குப்பின் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன். கங்கை என்னை வலுப்படுத்தி தேற்றியது. கங்கை நதி தாயை போல் அனைவரையும் காக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மும்பையில் கடும் புழுதி புயல் பேனர் விழுந்து 35 பேர் காயம்- விமான நிலையம் மூடப்பட்டது

மும்பை நகரில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மும்பையில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசியது. இதனால் மும்பை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புழுதி புயலுடன் மழையும் பெய்ததால் மும்பை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதும் தரையிறக்கப்படுவதும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. புழுதி புயல் காரணமாக மெட்ரோ ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.மும்பை நகரில் 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மும்பையின் வடாலா பகுதியில் புழுதிப் புயல் வீசியதில் ராட்சத இரும்பு பேனர் ஒன்று பெட்ரோல் பங்க் மீது விழுந்ததில் 35 பேர் காயம் அடைந்துள்ளனர்.

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் மழைவாக்கு எண்ணும் மையத்தில் கேமராக்கள் பழுது

தமிழகத்தில், பாராளுமன்ற தேர்தல் வாக்குகள், 39 மையங்களில் எண்ணப்பட உள்ளன. மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் முத்திரையிடப்பட்டு, அறைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி சீலிடப்பட்டுள்ளன.வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தில், மூன்றடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அலுவலர்கள், 24 மணி நேரமும் பாதுகாப்பில் உள்ளனர். அறை உள்ளேயும், வெளியிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏழு தொகுதிகளின் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளது. இங்கு 300 சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு பணிக்காக பொருத்தப்பட்டுள்ளது.இன்று காலை இடி மின்னலுடன் பெய்த மழையால் 7.30 மணிக்கு வெளியே பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த ஏழு சிசிடிவி கேமராக்கள் திடீரென பழுதானது.…

தனியார் இடத்தில் கோவில் கட்டி ஆஞ்சநேயரை மனுதாரராக சேர்த்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

தனியார் நிலத்தில் உள்ள கோவில் தொடர்பான வழக்கில் , கடவுள் ஆஞ்சநேயரையும் மனுதாரராக சேர்த்தவருக்கு டில்லி உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உள்ளது.டில்லி உத்தம் நகர் பகுதியில்,தனியார் நிலத்தில் கோவில் கட்டப்பட்டது தொடர்பாக டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தொடர்ந்த அங்கித் மிஸ்ரா என்பவர், அந்த சொத்தில் உள்ள கோவில் பொது மக்களுக்கு சொந்தமானது என்பதால், இந்த நிலம் கடவுள் ஆஞ்சநேயருக்கு சொந்தமானது எனக்கூறி, ஆஞ்சநேயரையும் ஒரு மனுதாரராக சேர்த்து இருந்தார்.இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரரின் இந்த செயல், சட்ட நடவடிக்கையை துஷ்பிரயோகம் செய்யக் கூடியது. மோசமான மற்றும் தீங்கு விளைவிக்கும் நடைமுறை எனக்கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

கோவிட் தடுப்பூசி திரும்ப பெறுகிறோம் ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் அறிவிப்பு

கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்த ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம், உலக அளவில் தங்களுடைய கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. கோவிட் பரவலின் போது ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் கோவிஷீல்டு என்ற தடுப்பூசி மருந்தை தயாரித்தது. ஒருவருக்கு இரண்டு டோஸ் வீதம் நம் நாட்டில் மட்டும் 175 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. இந்த தடுப்பூசி போட்டுக் கொண்டதால், பக்க விளைவுகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டதாகவும், பலர் மரணம் அடைந்ததாகவும் பிரிட்டிஷ் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வகையில் 51 வழக்குகள் ஒன்றாக சேர்க்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றன. ரூ.1,047 கோடி இழப்பீடு வழங்க மனுதாரர்கள் கோரி உள்ளனர். இந்த வழக்கில், லண்டன் நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் அளித்த வாக்குமூலத்தில், தாங்கள் தயாரித்த தடுப்பூசி மருந்தால் ரத்தத்தை உறைய வைக்கும் ஒரு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த பாதிப்பு…