ஸ்வாதி மாலிவால் விவகாரம் பா.ஜனதாவின் சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை பெண் எம்.பி.யான ஸ்வாதி மாலிவால், தான் கெஜ்ரிவால் வீட்டில் அவரது தனிச் செயலாளரால் தாக்கப்பட்டேன் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.இது தொடர்பாக டெல்லி மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து ஸ்வாமி மாலிவால் தாக்கப்படவில்லை. இது பா.ஜனதாவின் சதி என 52 வினாடி வீடியோவை சுட்டிக்காட்டி ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி என குற்றம்சாட்டியுள்ளார். அந்த வீடியோவில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வீட்டிற்கு வந்திருந்த ஸ்வாதி மாலிவாலை, வெளியேறும்படி பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். இதனைக் கேட்டு ஸ்வாமி மாலிவால் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பாதுகாப்பு அதிகாரிகளை மிரட்டுகிறார். அவர்களை வெளியேற்ற முற்படுகிறார் என்பதுபோல் உள்ளது. இந்த வீடியோவை…

நியூஸ் க்ளிக்’ ஆசிரியரை கைது செய்தது செல்லாது: விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நியூஸ் க்ளிக்” நிறுவனர் மற்றும் ஆசிரியரை கைது செய்யப்பட்டது செல்லாது எனக்கூறியுள்ள உச்சநீதிமன்றம்,அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டு உள்ளது.சீனாவிடம் இருந்து நிதி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து நியூஸ்க்ளிக்செய்தி இணையதளதின் நிறுவனர் பரபீர் புரக்யஸ்தா மற்றும் மனித வளத்துறை தலைவர் அமித் சக்கரவர்த்தி ஆகியோரை கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டில்லி போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்(UAPA) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று( அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது: பரபீர் புரக்யஸ்தாவை கைது செய்ததும், சிறையில் அடைத்தது செல்லாது. கைது செய்ததற்கான காரணத்தை, அவரை கைது செய்வதற்கு முன்னர், அவரிடமோ அல்லது அவரது வழக்கறிஞரிடமோ கூறப்படவில்லை எனக்கூறிய நீதிமன்றம், அவரை சிறையில் இருந்து விடுதலை செய்ய…

கங்கை நதியின் தத்துப்பிள்ளை நான் பிரதமர் மோடி

நாடாளமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் இன்று (மே 14) பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் கங்கை நதியில் சிறப்பு பூஜைகள் நடத்தினார். வேத பட்டர்கள் மந்திரம் ஓத, பிரதமர் கங்கை நதியில் மலர்கள் தூவி வணங்கினார். தொடர்ந்து ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கங்கை நதியின் புனிதத்தை எடுத்து கூறினார். அவர் கூறியதாவது: கங்கை நதியின் தத்துப்பிள்ளை நான். எனது தாய் மறைவுக்குப்பின் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன். கங்கை என்னை வலுப்படுத்தி தேற்றியது. கங்கை நதி தாயை போல் அனைவரையும் காக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மும்பையில் கடும் புழுதி புயல் பேனர் விழுந்து 35 பேர் காயம்- விமான நிலையம் மூடப்பட்டது

மும்பை நகரில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மும்பையில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசியது. இதனால் மும்பை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புழுதி புயலுடன் மழையும் பெய்ததால் மும்பை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதும் தரையிறக்கப்படுவதும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. புழுதி புயல் காரணமாக மெட்ரோ ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.மும்பை நகரில் 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மும்பையின் வடாலா பகுதியில் புழுதிப் புயல் வீசியதில் ராட்சத இரும்பு பேனர் ஒன்று பெட்ரோல் பங்க் மீது விழுந்ததில் 35 பேர் காயம் அடைந்துள்ளனர்.

.நெல்லை ஜெயக்குமார் மர்ம மரணம் குறித்து இளம் பெண்ணிடம் போலீசார் விசாரணை

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங், மர்ம மரணம் தொடர்பாக இளம்பெண் ஒருவரிடம் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கூறப்படுவதாவது: போலீசாரால் விசாரணை நடத்தப்படும் இளம்பெண் ஜெயக்குமாருக்கு நன்கு அறிமுகமானவர். அவரை ஓரிரு முறை ஜெயக்குமார் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனால், வீட்டில் பிரச்னை எழுந்தது. அந்த பெண்ணிடம் 2 நாட்களாக விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டு உள்ளது. இதனிடையே, ஜெயக்குமார் தனசிங்கின் கையெழுத்தில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. மரண வாக்குமூலம் என்ற பெயரில் ஒரு கடிதமும், குடும்பத்தினருக்கு என மற்றொரு கடிதமும் ஜெயக்குமார் தனசிங் பெயரில் வெளியாகின. இந்நிலையில் மற்றொரு கடிதமும் வெளியாகி உள்ளது. இதில் உள்ள கையெழுத்துகள் வெவ்வேறாக உள்ளது. இதனிடையே கடந்த மார்ச் மாதம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி…

மத்தியபிரதேசத்தில் வாக்கு பதிவு இயந்திரங்களுடன் சென்ற பேருந்து தீ பிடித்து 4 வாக்குபதிவு இயந்திரங்கள் சேதம்

மத்தியபிரேதேச மாநிலத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதமடைந்தது. இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.நாடு முழுவதும் 94 தொகுதிகளில் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 7ஆம் தேதி நேற்று நடந்தது.மத்தியபிரதேசத்தில் 9 தொகுதிகளுக்கு நடந்த தேர்தல் மாலை 7 மணிக்கு நிறைவு பெற்றது. பிறகு வாக்கு பதிவு இயந்திரங்களை, வாக்குகள் எண்ணும் மையத்திற்கு அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர்.பீட்டுல் மாவட்டத்தின் கோலா கிராமத்தில் பேருந்து மூலம் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு சென்றனர். பேருந்தில் 6 வாக்கு இயந்திரங்கள் இருந்தன. வழியில் இரவு 11 மணியளவில், அந்த பேருந்து தீப்பிடித்து எரிந்தது. தீவிபத்து ஏற்பட்டதும் கதவுகள் அனைத்தும் சிக்கிக் கொண்டன. இதனால் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து அனைவரும் வெளியே தப்பி ஓடிவந்தனர். யாருக்கும் எந்தவித காயங்களும்,…

சென்னையில் சிறுமியை கடித்து குதறிய, ராட்வெய்லர் நாய்களின் உரிமையாளர்கள் கைது-காவல்நிலைய ஜாமீனில் விடுதலை

சென்னையில் சிறுமியை கடித்து குதறிய, ராட்வெய்லர் நாய்கள் உரிமம் இன்றி வளர்க்கப்பட்டுள்ளது’ என சென்னை மாநகராட்சி கமிஷனர் விளக்கம் அளித்துள்ளார். அது மட்டுமின்றி ராட்வெய்லர் நாய் இனத்தை இந்தியாவில் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட நாய்களை வளர்க்கலாமா? என சமூகவலைதளத்தில் விவாதம் கிளம்பி உள்ளது.சென்னை ஆயிரம் விளக்கு மாதிரிப் பள்ளி சாலையில் உள்ள பூங்காவில் 5 வயது சிறுமியை இரண்டு ராட்வெய்லர் வகை வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறியது. பலத்த காயத்துடன் சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாயின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேசன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேர் மீதும், 2 பிரிவுகளின் கீழ் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, ராட்வெய்லர் நாய்களின் உரிமையாளர் புகழேந்தி காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.…

பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! தமிழக முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியாகியிருக்கும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு இன்று முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ளார். அதன்படி, மொத்தம் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு 94.03% விகிதம் தேர்ச்சி பதிவாகியிருந்த நிலையில் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவிகள் 96.44%, மாணவர்கள் 92.37% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,…

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வில் ஒரே ஒரு அரசுப் பள்ளி மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி 526 பேர் 100க்கு 100 பெற்றுள்ளனர்

பிளஸ் 2 தேர்வில் புதுச்சேரி, காரைக்காலில் 92.41 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டை விட 0.26 சதவீதம் குறைவு. மேலும், 55 அரசு பள்ளிகளில் ஒரெயொரு பள்ளி மட்டுமே நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 12-ம் வகுப்புகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அறிமுகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது: புதுவை, காரைக்காலில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்2 பொதுத்தேர்வை 6 ஆயிரத்து 566 மாணவர்களும், 7 ஆயிரத்து 446 மாணவிகளும் என மொத்தம் 14 ஆயிரத்து 012 பேர் தேர்வு எழுதினர். இதில் புதுவை அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 867 மாணவர்கள், 7 ஆயிரத்து 081 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.புதுவையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களில் 86.39 சதவீதம்,…