3 ஆண்டுகளாக திருந்தி வாழ்ந்த திருடன் மீண்டும் திருட்டில் ஈடுபட்ட போது சிக்கினார்.

புதுச்சேரி மாநிலம் உருளையன்பேட்டை அருகே உள்ள முல்லை நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். கடந்த 16 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் வெளியே சென்றார். பின்னர், மாலை வீடு திரும்பியவர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவின் கதவு திறந்து கிடந்தது. அதிலிருந்த, ரூ.10 லட்சம் மதிப்பிலான 25 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.15,000  ரொக்கம் திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த வீதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர். விசாரணையில் சந்தேகப்படும் படியாக நடந்து சென்ற நபரின் புகைப்படத்தை கைப்பற்றிய போலீசார், அந்த நபர் குறித்து விசாரிக்கத் தொடங்கினர். ஆனால், எந்த தகவலும் கிடைக்காததால், தமிழ்நாடு போலீசாரின் உதவியை அவர்கள் நாடினர். இமெயில் மூலம் அனுப்பப்பட்ட புகைப்படத்தை பார்த்ததும், தமிழ்நாட்டு…

ஏ.வி.எஃப்.ஐ “அனுபவ” பொருட்களுடன் பி.ஜி பிலிம்மேக்கிங் படிப்பை அறிமுகப்படுத்துகிறது

திரைப்படம் மற்றும் ஊடக ஆய்வுகளில் புதுமையான அணுகுமுறைகளைத் தழுவுவதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பாகும்; முதல் தொகுதி மார்ச் 2024 இல் சுமார் 12 மாணவர்களைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலைகள், ஏரிகள் மற்றும் பனிப்பாறைகளின் லடாக்கின் பிரமிக்க வைக்கும் நிலப்பரப்பை படமாக்குவது முதல் ஆரோவில்லில் எடிட்டிங் டேபிளில் காட்சி கதை சொல்லும் சக்தியை செலுத்துவது வரை, குறும்படம் தயாரிக்கும் ஆர்வலர்களுக்கு இப்போது ஆரோவில் திரைப்பட நிறுவனம் (ஏ.வி.எஃப்.ஐ) மற்றும் லடாக் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்பிலிருந்து அனுபவ பயிற்சி வாய்ப்பு கிடைத்துள்ளது. “ஓபன் ஸ்பேஸ் டாக்குமெண்டரி ஆர்ட்ஸ்” இல் ஒரு வருட முதுகலை டிப்ளமோ திட்டம் ஒரு வருடத்தில் ஐந்து சிறப்பு தொகுதிகளை விரிவுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் பல்வேறு தொழில்முறை பின்னணிகள் மற்றும் ஆர்வங்களைக் கொண்ட தேசிய மற்றும் சர்வதேச மாணவர்களை ஈர்க்க முயற்சிக்கிறது. ஆரோவில் உயிரியல் பகுதி…

மாற்றுத்திறனாளிகளுக்கான நிகழ்ச்சிகளை நடத்தும் ஜிப்மர்

ஜிப்மரின் உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில், சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ஜிப்மர் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. விளையாட்டு போட்டிகளை ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் எல்.என்.துரைராஜன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எம்.ஹாதர் பாஷா ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து புனர்வாழ்வு மருத்துவத் துறை தலைவர் நவீன் குமார் தலைமையில் ஜிப்மர் ஊழியர்கள் மற்றும் மாணவர்… மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் காக்க உறுதிமொழி ஏற்றனர்..அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி ஊழியர்கள், மாணவர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் ஜிப்மர் மைதானத்திலும், சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டுகள் ஜிப்மர் சமுதாய கூடத்திலும் நடந்தது..போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜிப்மர் இயக்குநர் (பொறுப்பு) கவுதம் ராய் பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் புனர்வாழ்வு மருத்துவத் துறை தலைவர் நவீன்குமார், சத்யா மற்றும்,…

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்த ரவுடி கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் இண்டிலியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாக ரவுடி மற்றும் அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டனர். நவம்பர் 29, 2023 புதன்கிழமை மாலை காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டுக் குழுக்கள் நடத்திய சோதனைகளைத் தொடர்ந்து இந்த கைதுகள் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புகாரின் பேரில், இண்டிலியைச் சேர்ந்த முருகேசன், 43, என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். விசாரணையில், டி.பார்ம் படித்த முருகேசன், தனது உதவியாளர் சின்ராஜ், 28, என்பவரின் உதவியுடன், வீட்டில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஸ்கேன் இயந்திரம் மற்றும் ஊசி மருந்துகளை பறிமுதல் செய்தனர். அந்த வீட்டை போலீசார் சீல் வைத்தனர்.

மழை பாதிப்பு : மீட்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் – ராமதாஸ்

மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை,: இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு பெய்த மழையால், மாநகரத்தின் பெரும்பான்மையான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருக்கின்றன. சாலைகளில் வெள்ளம், வீடுகளுக்குள் தண்ணீர், போக்குவரத்து பாதிப்பு என பலவழிகளில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மழை பாதிப்புகளை சரி செய்ய போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது கண்டிக்கத்தக்கது. சென்னை பெருநகரப் பகுதிகளில் நேற்று மாலை 6 மணிக்குத் தொடங்கி 9 மணி வரை இடைவிடாமல் பெய்த கனமழை மிகக்கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பான்மையான இடங்களில் 10 முதல் 12 செ.மீ வரை மழை கொட்டியுள்ள நிலையில், மிக அதிக அளவாக மீனம்பாக்கத்தில் 26 செ.மீ அளவுக்கும், ஆவடியில் 19 செ.மீ…

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

சென்னையில் சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீர் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், மக்கள் அவதியடைந்துள்ளனர். சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை தொடர்பான புகார்கள் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் எண் – 9444272345, கட்டணமில்லா தொலைபேசி எண் – 1077, தொலைபேசி எண்கள் – 044 – 27427412, 27427414 என்ற எண்கள் மூலம் புகார்களை அளிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்து

ரஜினியுடன் இணையும் சிவகார்த்திகேயன்… எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தலைவர் 171…!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, நடிகர் ரஜினிகாந்த், கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. வசூலில் ரூ.600 கோடியை தாண்டிய நிலையில் ஜெயிலர் படம் ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி பொங்கலுக்கு வெளியாகவுள்ள “லால் சலாம்” படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் உடன் 170வது படத்தில் இணைந்துள்ளார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் துஷாரா விஜயன் மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா ரகுபதி, பஹத் பாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படம் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும்…

மன்னிப்பு கேட்க முடியாதா..? அடுத்த நடவடிக்கை இதுதான்: அண்ணாமலை அதிரடி பதில்

மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கர் பரம்பரை அல்ல, பெரியாரின் பேரன்கள் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியிருந்தார். சென்னை: ஆவின் நிறுவனத்தின் பச்சை நிற பாக்கெட் பால் 4.5 சதவீத கொழுப்புச் சத்து கொண்டது. இந்த பால் பாக்கெட் விநியோகத்தை நவம்பர் 25-ம் தேதியுடன் நிறுத்தவும், அதற்கு பதில் அதே விலையில் 3.5 கொழுப்புச் சத்துடைய டிலைட் ஊதா நிற பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்யவும் அரசு முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். பாலில் கொழுப்புச்சத்தைக் குறைத்துவிட்டு, விலையைக் குறைக்காமல் தொடர்ந்து பொதுமக்களை மோசடி செய்துவருவதை தி.மு.க அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் சிலர் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கவேண்டும் எனவும்,…

வனவாசியின் பெருமித நாளில் கொடூரம்.. விழாவில் கலந்து கொண்ட தமிழிசை மலைவாழ் மக்களை தரையில் அமர வைத்தார்!

புதுச்சேரி: பழங்குடியினர் தின விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்த நாள் இன்று ‘வனவாசி பெருமை தினமாக’ கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிர்சா முண்டாவின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி ஆகியோரும் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் உள்ள உலிஹாட்டில் உள்ள பிர்சா முண்டாவின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மத்திய அரசு இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ‘வனவாசி பெருநாள்’ கொண்டாடி வருகிறது. புதுச்சேரியில் ஆதிதிராவிடர் நலன்…