10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம்… பாஜக MLA விடுதலை செல்லும்… தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன்!

புதுச்சேரி காலாப்பட்டு தொகுதியின் தற்போதைய பாஜக எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார் கல்யாணசுந்தரம். கடந்த 2011ஆம் ஆண்டு முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில், இதே காலாப்பட்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். மேலும், முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார் கல்யாணசுந்தரம். 2011ல் பள்ளிக்கல்வித்துறை நடத்திய பத்தாம் வகுப்பு தேர்வில் தனித் தேர்வராகப் பங்கேற்றார் கல்யாணசுந்தரம். அப்போது, அவர் போலி ஆவணங்களைத் தயார் செய்தும், ஆள்மாறாட்டம் செய்தும், திண்டிவனத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியதாக, கல்யாணசுந்தரம் மீது வழக்கு பதிவு செய்தது தமிழக காவல்துறை.இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்தார் கல்யாணசுந்தரம். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. அதைத்தொடர்ந்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் கல்யாணசுந்தரம். அதையடுத்து…