புதுச்சேரி நிறுவனத்திற்கு கொப்பரை தேங்காய் தருவதாக கூறி 1 கோடியே 35 லட்சம் ஏமாற்றிய பலே கில்லாடிகள் சைபர்கிரைம் போலீசார் விசாரணை

புதுச்சேரி நிறுவனத்திற்கு கொப்பரை தேங்காய் தருவதாக கூறி 1 கோடியே 35 லட்சம் ஏமாற்றிய பலே கில்லாடிகள் சைபர்கிரைம் போலீசார் விசாரணை
புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு மொத்தமாக கொப்பரை தேங்காய்யை தமிழகம் முழுவதும் இருந்து கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்து வருகின்றனர். அதுபோல் துபாயில் இருக்கின்ற ஒரு நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்புடைய கொப்பரை தேங்காய்களை வாங்கி அனுப்ப ஆர்டர் கிடைத்ததால் மேற்படி நிறுவனத்தின் உரிமையாளர் உடனடியாக நிறைய கொப்பரை தேங்காய் வாங்க வேண்டும் என்பதால் இணைய வழியில் தேடினால் நிறைய வியாபாரிகளின் தொடர்பு கிடைக்கும் என்று நினைத்து இணைய வழியில் கொப்பரை தேங்காய் வியாபாரம் செய்யும் நிறுவனங்களை தேடிய போது ஒரு நபரின் தொலைபேசி எண் கிடைத்துள்ளது அந்த நபரை தொடர்பு கொண்டு பேசிய போது அவர் பெரிய அளவில் கொப்பரை தேங்காய் வியாபாரம் செய்வதாகவும் உங்களுக்கு எவ்வளவு கொப்பரை தேங்காய் வேணுமோ அதற்கு ஏற்ப முன்பணம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். அந்த நபரை கூறியதை நம்பி கடந்த நான்கு மாதங்களில் ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் 1,35,00,000 பணத்தை அவர் கூறிய பல வங்கிக் கணக்கிற்கு அனுப்பி உள்ளார். பிறகு அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில்

  1. பொள்ளாச்சி தளவாய்பாளையம் நாகராஜ்,
  2. செல்லக்குமார் டிரேடர்ஸ் முத்துசாமி
  3. தாராபுரம் – ரகுபதி,
  4. பொள்ளாச்சி டி.நல்லிகவுண்டன்பாளையம், ஸ்ரீ அங்காளம்மன் டிரேடர்ஸ் மாரிமுத்து சிவக்குமார்,
  5. வேட்டைக்காரன் புதூர் ஒடையகுளம் முருகன் துணை கார்த்திகேயன் முருகானந்தம்
  6. தாராபுரம் குளத்துபுஞ்சை தெரு சசிகலா,
  7. திருப்பூர், அன்வர் தீன் ,
  8. கோயம்புத்தூர் கப்பலங்காரை, கார்த்திகேயன்.
  9. கோயம்புத்தூர் கப்பலங்காரை ,
  10. பொன்னாபுரம்,பொள்ளாச்சி, என்.பரணி,
  11. பொள்ளாச்சி,பெரிய நெகமம், ஆர்.கார்த்திகேயன்,
  12. பொள்ளாச்சி, செட்டியக்காபாளையம் சதீஷ்குமார்
  13. கோயம்புத்தூர், கப்பலாங்கரை சரவணக்குமார், ஆகியோர் குறித்து இணைய வழி காவல் கண்காணிப்பாளர் .பாஸ்கரன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் கீர்த்தி மற்றும் தியாகராஜன் விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts

Leave a Comment