தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வாழ்த்து1!

கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளே பாட புத்தகங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன்! பெற்றோர்களும், ஆசிரியர்களும் மீண்டும் வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களின் மனநிலை – உடல்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாசிப்பிலும் விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டி மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களை சந்திக்கிறார் விஜய்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. விழாவை 2 கட்டங்களாக நடத்த அக்கட்சியின் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் மாணவர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததால் இம்முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வருகிற 28-ஆம் தேதி மற்றும் ஜூலை 3-ஆம் தேதிகளில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து பாராட்டு சான்றிதழை விஜய் வழங்குகிறார். மேலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்குகிறார். முதல் கட்டமாக வருகிற 28-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி,…

“கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். பிரதமர் மோடி

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்த நாள் இன்று. அவரது 101-வது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், கருணாநிதியுடன் இணைந்து பயணித்த அரசியில் வாழ்க்கை குறித்து நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி, கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை புகழ்ந்துள்ளார் கலைஞர் கருணாநிதியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்த படத்தை பதிவிட்டு எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் “கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். பொது வாழ்வில் தனது வாழ்க்கையின் பெரும்பாலான ஆண்டுகள் தமிழகம் மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். தனது அறிவார்ந்த தன்மைக்காக பெரிதும் மதிக்கப்பட்டவர். நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சராக இருந்தது உள்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் கலைஞர்…

கலைஞரின் அரிய புகைப்படங்களின் கண்காட்சி ஜூன் 7 வரை நீட்டிப்பு

கலைஞரின் அரிய புகைப்படங்களை கொண்டு சென்னையில் நடத்தப்பட்டு வரும் கண்காட்சி ஜூன் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் கடந்த 30ல் புகைப்பட கண்காட்சி தொடங்கியது

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஜூன் 5-ல் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.

வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2000க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. அதில் சிறுத்தை, வெள்ளை புலிகள், மனித குரங்குகள், வங்காளப் புலிகள், நீர்நாய், சிங்கங்கள் என அனைத்து வகையான விலங்குகளும் உள்ளன. இந்த பூங்காவில் குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகளின் இருப்பிடம், பூங்கா மீன் மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா கண்காட்சியகம் போன்றவை தனித்தனியாக அமைந்துள்ளது. மேலும் விலங்குகள் கோடைகால வெயிலை சமாளிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் பார்வையாளர்களை கவரும் வகையில் அனைத்துநடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட மக்களின் பொழுதுபோக்கு இடமாக இந்த பூங்கா விளங்குகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வண்டலூர் உயிரியல் பூங்காவை பார்வையிட்டு செல்கின்றனர். வண்டலூர் பூங்கா வழக்கமாக செவ்வாய்க்கிழமை…

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள்விழா முதல்வர் ஸ்டாலின் தலைவர்கள் மலர்தூவி மரியாதை

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை ஒட்டி, இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார் . இதேபோல் தலைவர்கள் பலரும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின். மலர் தூவி மரியாதை செலுத்தினார் அப்போது அவருடன் அமைச்சர்கள் உதயநிதி, பொன்முடி, ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், கேஎன்.நேரு போன்றோரும், கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் போன்ற திமுக எம்பிக்களும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். முன்னதாக, இன்று காலை சென்னை…

பண்ருட்டி அருகே பலாதோப்பில் பலாபழ திருவிழா

பண்ருட்டியை அடுத்த கீழ் மாம்பட்டு கிராமத்தில் நாளோடை பலாதோப்பில் பலாபழ திருவிழா நேற்று நடந்தது. விழாவில் வேளாண், தோட்டக்கலை திட்டங்கள், பயிர் சாகுபடி, பலா ரகங்கள் குறித்தும், பயன்கள் குறித்தும், மத்திய, மாநில அரசின் பங்களிப்புகள் குறித்து வேளாண் அதிகாரிகள் பேசினர். நிகழ்ச்சியில், பண்ருட்டி பலாவின் சிறப்புகளை அறிந்து கொள்ளவும். பலாவினுடைய இலை, பிஞ்சு, காய், பழம், பழத்தின் ஈக்கு, சுளை, கொட்டை, தொப்புள். மரம் இவைகளை மதிப்புக்கூட்டுதல் செய்து சந்தைப்படுத்துவது, வருமானத்தை பன்மடங்காகப் பெருக்குவது விளக்கப்பட்டது. பலாவின் பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள், கண்காட்சியில் பலாச்சுளை சாறு, பலாவத்தல், பலாச்சுளை, பலாகொட்டை அவியல், பலாச்சுளை அல்வா, பலா பிரியாணி, பலாச்சுளை பனிக்கூழ் (ஐஸ்கிரீம்)ஆகியவை இடம் பெற்றது. நாட்டு பலா கன்றுகள், பலா சாக்லேட், பலா பிஸ்கட், பலா பஜ்ஜி இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மரபு அரிசி,…

இண்டியா கூட்டணி வெற்றி பெறாத வெற்று கூட்டணி என்பதை அதன் தலைவர்களே உணர்ந்து விட்டார்கள். முன்னாள் ஆளுநர் தமிழிசை பதிவு

முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியை வீழ்த்தி இந்தியாவை காக்க உருவாக்கப்பட்ட கூட்டணி இண்டியா கூட்டணி என்றவர்கள், இன்றைக்கு மக்களின் எதிர்ப்பை பெற்று வெற்றி கிட்டாது என்ற பதற்றத்தின் முகட்டில் நிற்கிறனர். பல்லாண்டு காலமாக தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்றமமதையில் இயங்கி வந்த காங்கிரஸுக்கு எதிராக பாஜக இன்று அசுர பலம் பெற்று வலம் வருகிறது. இடைவிடாத உழைப்பால் பிரதமரும், பாஜக கூட்டணி கட்சி தலைவர்களும் இண்டியா கூட்டணி உருவாக்கிய போலி பிம்பத்தை உடைத்தெறிந்துள்ளனர். அந்த வகையில் பாஜக கூட்டணியின் வெற்றி எழுதப்பட்டுவிட்டது. அதிகாரப்பூர்வமாக வெற்றி கொண்டாட்டங்களுக்கு இன்றும் 3 நாட்களே உள்ளன.எனவே வாக்கு எண்ணிக்கையின்போது அதிக விழிப்புணர்வுடன் பாஜக கூட்டணி கட்சியினர் இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் மக்களை ஏமாற்றியே அரசியல் செய்யும் கூட்டத்தோடு…

வைகோவை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடந்த 25-ஆம் தேதி நெல்லையில் கால் தடுமாறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக நெல்லையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துவரப்பட்ட வைகோ ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் நடைபெற்றது. இதையடுத்து வைகோவிற்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதை தொடர்ந்து வைகோவிற்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதில் அவர் குணமடைந்து வருகிறார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வைகோவை தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார். சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற சந்திப்பில் வைகோவின்…