ரைஸ் மோட்டோ அதன் சமீபத்திய ஹெல்டன் ஹெல்மெட் சீரிஸை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஹெல்டன் சீரிஸ் ஹெல்மெட் விலை ரூ.3,499 ஆகும். ஹெல்டன் ISI, DOT மற்றும் ECE தரநிலைகளுக்கு இணங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஹெல்மெட் மூன்று விதமான அளவுகளில் கிடைக்கிறது. ரைஸ் ஹெல்டன் சீரிஸ் மாடல் மேம்பட்ட பாலிகார்பனேட் மற்றும் ஷெல் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் எடை 1,500 கிராம். இந்த ஹெல்மெட் அதிக வேகத்தில் இழுவையைக் குறைக்கும் ஏரோடைனமிக் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஒருங்கிணைந்த முன்புற வென்ட்கள் ஹெல்மெட்டுக்குள் காற்றைச் செலுத்துகின்றன, அதே நேரத்தில் பின்புற எக்ஸாஸ்ட் வென்ட்கள் வெப்பத்தை வெளியேற்றி, உங்களை குளிர்ச்சியாகவும் கவனம் சிதறாமலும் வைத்திருக்கின்றன.இதில் இரட்டை டி-ரிங் லாக் வழங்கப்படவில்லை. ஆனால் மைக்ரோமெட்ரிக் சின்ஸ்ட்ராப் சரிசெய்யக்கூடிய தன்மையை உறுதி செய்கிறது. இதில் ஃபேக்டரி ஃபிட்…
Category: பொது செய்தி
வயநாட்டை பார்வையிட்டார் பிரதமர் மோடி
கேரள மாநிலம் வயநாடு, சூரல் மலை, முண்டகை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை ஆகிய இடங்களில் கடந்த மாதம் 30-ஆம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் மாயமாகிவிட்டனர். மீட்புப் பணி இன்னும் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி உள்பட பலர் சென்று, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று கேரளா சென்றடைந்தார். இந்நிலையில், வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு வருகிறார். நிலச்சரிவால் சேதமடைந்த பகுதிகளை ஹெலிகாப்டரில் இருந்தவாறு பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். ஹெலிகாப்டரில் பிரதமர் மோடியுடன் கேரள ஆளுநர் மற்றும் கேரள…
தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மாணவ-மாணவிகள் உயர்கல்வி படிக்கும் நோக்கத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு பள்ளிகளில் படித்து விட்டு பின்னர் உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி, தமிழ்ப்புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் இன்று (9-ந் தேதி) காலை 11.30 மணியளவில் தொடங்கி வைத்தார். கோவை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் இதற்கான பிரமாண்ட விழா நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் தேர்வான மாணவர்களின் வங்கி கணக்கில் உடனடியாக ரூ.1000 செலுத்தப்படும் என்று…
அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வை நீதிமன்ற உத்தரவுபடி செயல்படுத்த வேண்டும் – அன்புமணி
நீதிமன்றத் தீர்ப்புகளைக் கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு குறித்த உயர் நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மறுப்பது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசு மருத்துவர்களின் கோரிக்கையை 6 வாரங்களுக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டு, 6 மாதங்களுக்கு மேலாகியும் அதை நடைமுறைப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு தொடர்பான சிக்கலில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது. திமுகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கொண்டு வந்த பல்வேறு சட்டங்கள், அரசாணைகள் குறித்து உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அளித்தத்…
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வந்தது காவிரி தண்ணீர் எம்.எல்.ஏ., மாவட்ட ஆட்சியர் மலர் துாவி வரவேற்பு
காரைக்காலுக்கு வந்தடைந்த காவிரி தண்ணீரை எம்.எல்.ஏ., மற்றும் மாவட்ட ஆட்சியர் மலர் துாவி வரவேற்றனர். புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தின் கடைமடைப்பகுதி. இங்கு ஆண்டுதோறும் தமிழகத்தில் இருந்து வரும் காவிரி தண்ணீரை பயன்படுத்தி விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தாண்டு மேட்டூர் அணை தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 1ஆம் தேதி கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. பின், முக்கிய ஆறுகள் வழியாக காவிரி நீர் நேற்று திருநள்ளாறு கொம்யூன், நல்லம்பல் கிராமத்தில் உள்ள நுாலாறு நீர்தேக்கத்திற்கு வந்தடைந்தது. காவிரி தண்ணீரை சிவா எம்.எல்.ஏ., தலைமையில் ஆட்சியர் மணிகண்டன் ஆகியோர் மலர் துாவி வரவேற்றனர். பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன், மகேஷ், கடைமடை விவசாயிகள் சங்க தலைவர் சுரேஷ் உட்பட பலர் உடனிருந்தனர். காரைக்காலுக்கு காவிரி தண்ணீர் 384 கன அடி வந்து கொண்டிருந்தது.
விளையாட்டுக்காக தனியாக இயக்குனரகம் ரூ.38 கோடி நிதி முதல்வர் ரங்கசாமி தகவல்
புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்துள்ள முருங்கப்பாக்கம் தீரர் சத்தியமூர்த்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. பள்ளி கல்வி துறை இயக்குனர் பிரியதஷ்னி வரவேற்றார். பாஸ்கர் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தீரர் சத்தியமூர்த்தி அரசுப் பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் 40 பேர், அரியாங்குப்பம் இமாக்குலேட் பள்ளி மாணவிகள் 142 பேருக்கு இலவச லேப்டாப்பை முதல்வர் வழங்கினார். தொடர்ந்து, சமூக நலத்துறை மூலம் வழங்கப்பட்ட இருசக்கர வாகனத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார். விழாவில், எம்.எல்.ஏ., க்கள் ரமேஷ், லட்சுமிகாந்தன், முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் துணை சபாநாயகர் பக்தவச்சலம், பள்ளி முதல்வர் சீத்தா உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில், முதல்வர் ரங்கசாமி, பேசியதாவது: கடந்த ஆண்டு இலவச லேப்டாப் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இடையில் நிறுத்தப்பட்டலேப்டாப்பை வழங்கி வருகிறோம்.…
17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கவேண்டும் யூ டியூபர் சவுக்கு சங்கர் வழக்கு
தனக்கு எதிரான 17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிடக் கோரி பிரபல யூ டியூபர் சவுக்கு சவுக்கு சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா? என விளக்கமளிக்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது, ஒரு வழக்கில் ஜாமின் வழங்கினால் மற்றொரு வழக்கில் கைது செய்யப்படுவதாக சவுக்கு சங்கர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. அப்போது, அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா என சரிபார்க்க அவகாசம் வழங்க வேண்டும் னெ காவல் துறை தரப்பு கோரிக்கை வைத்தது. இந்நிலையில், காவல் துறையின் கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சவுக்கு சங்கரின் மனு மீதான விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக கைலாஷ்நாதன் பதவியேற்றார்
கடந்த 2021-ம் ஆண்டு முதல் புதுவைக்கு தனி ஆளுநர் நியமிக்கப்படவில்லை. தனி ஆளுநராக இருந்த கிரண்பேடி நீக்கத்துக்கு பிறகு தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புதுவையின் பொறுப்பு ஆளுநராக செயல்பட்டார். அவர் சுமார் 3 ஆண்டுகள் பதவி வகித்தார். . பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மீண்டும் ஜார்க்கண்ட் மாநில கவர்னராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, புதுவை பொறுப்பு ஆளுநராலக பதவி கூடுதலாக அளிக்கப்பட்டது. இதனால் சுமார் 3½ ஆண்டுக்கும் மேலாக புதுவைக்கு தனி துணைநிலை ஆளுநர் இல்லாமல் பொறுப்பு ஆளுநர்களே புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராகவும் இருந்து புதுச்சேரி அரசை நிர்வகித்து வந்தனர். இந்த நிலையில் புதுவையின் பொறுப்பு ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். புதுவையின் புதிய துணைநிலை ஆளுநராக கேரளா மாநிலத்தை சேர்ந்த…
புனித ஆரோக்கியமேரி அன்னை ஆலயத்திற்கு எம்.எல்.ஏ. பாஸ்கர்(எ)தட்சணாமூர்த்தி 1லட்சம் நிதி
அரியாங்குப்பம், புனித ஆரோக்கியமேரி அன்னை ஆலயத்தில் தரை அமைக்கும் பணிக்கு எம்.எல்.ஏ., பாஸ்கர்(ஏ) தடசணாமூர்த்தி ரூ. 1 லட்சம் நிதி வழங்கினார். முதல்வர் ரங்கசாமி 75வது பிறந்த நாள் விழா அரியாங்குப்பத்தில் கொண்டாடப்பட்டது. அரியாங்குப்பம் புனித ஆரோக்கியமேரி அன்னை ஆலயத்தில் முதல்வருக்காக சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் ஆலயத்தின் தரை அமைக்கும் பணிக்காக தனது சொந்த செலவில் இருந்து எம்.எல்.ஏ., பாஸ்கர்(எ)தட்சணாமூர்த்திரு். 1 லட்சம்நிதியை ஆலயத்தின் பங்கு தந்தை அருள்தாசிடம் வழங்கினார். அதனை தொடர்ந்து, அரியாங்குப்பம் பிரம்மன் சிலை அருகே, பொதுமக்களுக்கு சர்க்கரை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நேற்று மாலை வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தனியார் குழந்தைகள் காப்பகத்தில் எம்.எல்.ஏ., அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், என்.ஆர்., காங்., பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி சட்டசபை நிகழ்ச்சிகளை அரசு பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்
சட்டசபை நிகழ்வுகளைபள்ளி மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் 20அரசு பள்ளி மாணவர்கள் பார்வையாளர் மாடத்தில்அமர்ந்து சட்டசபைநிகழ்வுகளை தெரிந்துகொண்டனர். 15-வது தொடரின் 2 வதுகூட்டத்தொடர் நேற்று காலைகூடியது. சட்டபேரவைதலைவர் செல்வம் திருக்குறள் வாசிக்க அவைதொடங்கியது. 2017-ஆண்டுபுதுச்சேரி சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஆண்டு அறிக்கை மற்றும்2023 ஆம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. அறிக்கைவெளியிடப்பட்டது.தொடர்ந்து துணை நிலைஆளுநர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் விவாதமும்,2024-2025-ஆம் ஆண்டிற்கானநிதிநிலைஅறிக்கைமீதானவிவாதம்நடைபெற்றது..இந்நிலையில் சட்டசபைநிகழ்வுகளை பள்ளிமாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில்பள்ளி மாணவர்கள் சபைநிகழ்வுகளை காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.அதன்படி வ.௨.சி, சுசிலாபாய், உள்ளிட்ட அரசுபள்ளியை சேர்ந்த 20-க்கும்மேற்பட்ட மாணவர்கள்சட்டசபைக்கு வந்தனர்.அவர்கள் சட்டசபை மையமண்டபத்தின் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்துசட்டசபை நிகழ்வுகளைதெரிந்து கொண்டனர். சட்டசபை நிகழ்ச்சிகளை பார்யிட வந்த மாணவர்களுக்கு பேரவை தலைவர் நினைவு பரிசாக புத்தகங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். அருகில் சட்டமன்ற உறுப்பினர் நேரு (எ) குப்புசாமி மற்றும் மாவட்ட…