தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது:- மத்திய அரசு அளவில் மலிவான அரசியல் ஆதாயத்திற்காக மக்களை மத ரீதியாக பிளவுப்படுத்தி, மக்களிடையே வேற்றுமையை விதைத்து அதில் குளிர்காய நினைக்கிறது பாஜக. அவர்களுடைய இந்த விஷமத்தனமான வேலைகள் வேறு எங்கு வேண்டுமானாலும் எடுபடலாம். தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது. சமூக நீதியும், நல்லிணக்கமும், சகோரத்துவமும், சமத்துவமும் ஆழமாக வேரூன்றிய மண் இந்த தமிழ்நாட்டு மண். எனவே இங்கே தந்தை பெரியாரை அவமதித்தோ, அறிஞர் அண்ணாவை அவதூறுக்கு உள்ளாக்கியோ தமிழ்நாட்டில் உள்ள மதிப்பிற்குரிய தலைவர்களை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் அதனால் பாஜகவால் ஒருபோதும் வெற்றி பெற இயலாது. சுயநல அரசியல் லாபங்களுக்காக கூடி குலைந்து கூட்டணி போக தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவோ, திமுகவோ இல்லை. கொள்கை எதிரிகள், பிளவுவாத சக்திகளுடன்…
Category: தமிழ்நாடு
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி – முதலமைச்சர் திறந்து வைத்தார்
அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு உபயதாரர் நிதி மற்றும் கோவில் நிதியின் மூலம் பெருந்திட்ட வரைவின்கீழ், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வரிசை முறை, காத்திருப்பு அறை, மருத்துவ மையம், முடிக் காணிக்கை செலுத்தும் இடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, அன்னதானக்கூடம், பக்தர்கள் தங்கும் விடுதிகள், சுகாதார வளாகம், திருமண மண்டபங்கள், பணியாளர் குடியிருப்பு ஆகிய திருப்பணிகளின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 28.9.2022 அன்று தொடங்கி வைத்தார். அத்திருப்பணிகளில் 33.25 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட முடி காணிக்கை மண்டபம், வரிசை வளாகம், சுகாதார வளாகங்கள், கலையரங்கம், நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்று நிலையம், ஆகியவை கடந்த 14.10.2024 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
பா.ம.க. கொறடா- சட்டப்பேரவை செயலாளருக்கு ராமதாஸ் தரப்பினர் கடிதம்
பா.ம.க.வில் தந்தை மகனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், நிர்வாகிகள் சிலர் ராமதாசுக்கு ஆதரவாகவும், சிலர் அன்புமணிக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். இதனிடையே, மூச்சு உள்ளவரை பா.ம.க. தலைவர் தானே என ராமதாசும், வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் என்று அன்புமணியும் பேசி வருகிறார்கள். இதற்கிடையே, அன்புமணி ஆதரவாளர்களை ராமதாசும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணியும் நீக்கி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம், சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருளை பா.ம.க.வில் இருந்து நீக்கி அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து, நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், எம்.எல்.ஏ. பதவியில் இருந்து யாரையும் நீக்க முடியாது. அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. எம்.எல்.ஏ.க்களை நீக்க பா.ம.க. கொறடா தான் சபாநாயகருக்கு பரிந்துரை செய்ய முடியும் என்று கூறியிருந்தார்.…
10 ஆண்டுகள் நிறைவு செய்த சென்னை மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு, 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. சென்னையில் 2015 ஆம் ஆண்டில் ஜூன் 29 ஆம் தேதியில்தான் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கி, இன்றுடன் 10 நிறைவு பெற்றதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2015-ல் முதற்கட்டமாக கோயம்பேடு – ஆலந்தூர் இடையே தொடங்கப்பட்ட மெட்ரோ சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், தற்போது இரண்டாம் கட்டப் பணியும் நடைபெற்று வருகிறது. ரூ. 63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் இரண்டாம் கட்டப் பணி நடைபெற்று வருகிறது.
தமிழக மீனவர்கள் 8 பேர் கைது இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!
எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பாகத்தான் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேர் சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். இந்த நிலையில், ஆழ்கடலில் மீன்பிடித்துவிட்டு திரும்புகையில், தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, 8 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், விசாரணைக்காக தமிழக மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மீனவர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக மேலும் 3 தளர்வுகள் தமிழக அரசு அறிவிப்பு,
தமிழகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தற்போதைய நிலையில் சுமார் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் மாதந்தோறும் கலைஞர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர்.விடுபட்ட பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக மேலும் 3 தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து ,அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணை வெளியிட்டுள்ளது.அதன்படி, காலமுறை ஊதியம் பெற்று, தற்போது ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களில் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.அரசுத்துறைகளில் மானியம் பெற்று 4 சக்கர வாகனம் வைத்திருப்போர் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் தகுதியானவர்கள்.விதவை ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களில் ஓய்வூதியதாரர் அல்லாத பெண்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் வழக்கில் கைதான பிரதீப் உடன் இருக்கும் புகைப்படம் – பாஜக நிர்வாகி விளக்கம்
சென்னை மாநகரில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நுங்கம்பாக்கத்தில் அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகியான பிரசாத் மற்றும் அவரது கூட்டாளி பிரதீப் ஆகியோர் போதை பொருட்களை வாங்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த மற்றும் கிருஷ்ணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதிப் குமார் உடன் பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், பிரதிப் குமார் உடனான தொடர்ப்பு குறித்து வினோஜ் பி செல்வம் விளக்கமளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “ஒன்றாக படிக்கும்போது எனக்கும் பிரதீப்பிற்கும் பழக்கம் ஏற்பட்டது; ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக அவருடன் எந்தவித தொடர்பும் இல்லை…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைக்க டெண்டர்
தமிழ்நாடு அரசு சார்பில் டைடல் பூங்காவானது பல்வேறு மாவட்டங்களில் திறக்கப்படுகிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. ரூ. 34.75 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்கள் கொண்டதாக இந்த மினி டைடல் பூங்கா அமைய உள்ளது. இந்த டைடல் பூங்கா மூலம் சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 12 மாதங்களில் இந்த கட்டுமான பணிகளை முடிக்க டைடல் பூங்கா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மினி டைடல் பூங்கா கட்டிடத்தில் தலா 500 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் அங்கேயே பணிபுரியும் வகையில் குளிர்சாதன வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு மற்றும் மின் இயக்கி வசதிகள், மின்தூக்கி வசதிகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள்,…
ராஜ்பாஷா எல்லாம் தேவை இல்லை – அமித் ஷாவுக்கு கனிமொழி பதில்
இந்தி பற்றிய மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பதிலளித்துள்ளார். டெல்லியில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்தில் பேசுபவர்கள் எதிர்காலத்தில் வெட்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார். தொடர்ந்து நேற்று ராஜ்பாஷா துறையின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, ‘இந்தி எந்த மொழிக்கும் எதிரானது அல்ல, அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் போன்றது’ என்று கூறியிருந்தார். இந்நிலையில் இதுபற்றி திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், “சரியாகச் சொன்னீங்க. அதையேதான் நாங்களும் சொல்கிறோம். நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம். தனியா ராஜ்பாஷா எல்லாம் தேவை இல்லை. அந்த பெயரை இந்திய மொழிகள் வளர்ச்சி துறைன்னு மாத்திடலாம்” என்று பதிவிட்டுள்ளார்.
முருகன் தமிழ் கடவுள் என்றால் அவன் அப்பன் சிவனும் தமிழ் கடவுளாக தானே இருக்க முடியும்-திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியிருப்பதாவது:- முருகன் தமிழ் கடவுள் என்றால் அவன் அப்பன் சிவனும் தமிழ் கடவுளாக தானே இருக்க முடியும். முருகன் தமிழ் கடவுள் என்றால், சிவனும் தமிழனாக இருந்தால் பார்வதியும் தமிழச்சியாகத் தான் இருக்க முடியும். இவர்கள் இருவரும் கையிலாய மலையில் இருக்கிறார்கள் என்றால், கையிலாயம் தமிழகத்தின் தேசம் தானே. அப்போது ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழர்களின் தேசம் தானே. எங்கள் தமிழன் சிவப்பெருமான் கையிலாயத்தில் குடியிருக்கிறான் என்றால், கையிலாய மலையும் தமிழனுக்கு சொந்தம். அதனால், கையிலாயம் முதல் கன்னியாகுமரி வரை தமிழன் வாழ்ந்தான் என்பதற்கு சிவப்பெருமானே ஒரு சான்று. சிவன் தமிழன், பார்வதி தமிழச்சி, முருகன் தமிழன் என்றால், கணேசனும் தமிழர் தானே. அப்போ, கணேசனை ஏன் தமிழ் கடவுள் என்று யாரும் கூறுவதில்லை? இவ்வாறு நாம் லாஜிக்கா கேட்டால் கோபம்…