விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அப்பையநாயக்கன்பட்டியில் சாய்நாத் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகிறார்கள். தற்போது பட்டாசு ஆலையில் வெடிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலைக்கு வந்தனர். பட்டாசு ஆலையில் உள்ள ஒரு அறையில் மருந்து கலக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது உராய்வு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அருகில் இருந்த அறைகளில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளிலும் தீ பரவி பயங்கரமாக வெடித்தது. வெடி விபத்தின் சத்தம் சில கிலோ மீட்டர் தூரம் வரை கேட்டது. இந்த விபத்தில் மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன், நாகராஜ், கண்ணன், சிவக்குமார், காமராஜ்,…
Category: தொழில்நுட்பம்
பேட்டரியால் இயங்கும் மிதிவண்டி வடிவமைத்த மாணவருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பாரட்டு
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் அபிஷேக் பேட்டரியால் இயங்கும் மிதிவண்டியை வடிவமைத்துள்ளார். அந்த மிதிவண்டியில் நாள்தோறும் பள்ளிக்கு சென்று வருகிறார். இதை கேள்விப்பட்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது ‘எக்ஸ்’ வலைதள பதிவில் மாணவர் அபிஷேக்கை பாராட்டி அரசுப் பள்ளி மாணவர்களின் சாதனைக்கு எடுத்துக்காட்டாக திகழும் அபிஷேக் முயற்சிக்கு வாழ்த்துகள். தொடர்ந்து சாதனைகள் படைப்போம். அரசுப் பள்ளி என்பது பெருமையின் அடையாளம் என்பதை நிரூபிப்போம் என பதிவிட்டார். இதைத் தொடர்ந்து மாணவர் அபிஷேக்கை தொலைபேசியில் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்பு கொண்டு பேசி வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர் பேசும்போது, உங்கள் கண்டுபிடிப்புகளை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. அறிவியலில் ஆர்வம் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் நீங்கள் முன் மாதிரியாக திகழ்கிறீர்கள். அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்பாக…
மீண்டும் மோடி ஆட்சிஇந்திய பங்குச் சந்தை வர்த்தகம் எகிறியது
இன்று காலை முதல் வர்த்தகம் தொடங்கியது முதல் சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் நிலையான ஏற்றத்தை கண்டுள்ளது. சென்செக்ஸ் 76,935 புள்ளிகள், நிஃப்டி 23,319 புள்ளிகள் என தொடங்கியது. அதிகபட்சமாக 77,079.04 என்ற புள்ளிகளை சென்செக்ஸ் இன்று எட்டியிருந்தது. நிஃப்டியும் 23,411.90 என்ற புள்ளிகளை எட்டியிருந்தது. இதனால் பெரும்பாலான துறைகளின் வர்த்தகம் ஏற்றத்துடன் உள்ளது. புதிய அரசின் கொள்கை முடிவுகள், மத்திய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும் இலாகா போன்ற விவகாரங்களில் முதலீட்டாளர்களின் கவனம் இப்போது இருப்பதாக வணிக துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வரும் நாட்களில் பங்குச் சந்தை வர்த்தகத்தில் இதனை பொறுத்தே ட்ரெண்ட் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த வாரம் மீண்டும் மோடி ஆட்சி அமைக்கிறார் என தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்தன. அதனால் கடந்த ஜூன் 3 ல் பங்குச் சந்தை வர்த்தகம் உச்சத்தை எட்டியது.…