பாதுகாப்பு உபகரணங்கள் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் (MoSJE) மற்றும் தேசிய தூய்மை தொழிலாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (NSKFDC) இணைந்து தொடங்கியுள்ள தேசிய இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதார சுற்றுச்சூழல் நடவடிக்கை (NAMASTE) திட்டம், கழிவு நீர் மற்றும் செப்டிக் டேங்க் தூய்மை செய்யும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதுவை மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 243 தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE Kits) முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார். சபாநாயகர் செல்வம், உள்ளாட்சி துறை இயக்குநர் சாக்திவேல், துணை இயக்குநர் சவுந்திரராஜன், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

புதுச்சேரி பாஜக தலைவர் தேர்வு

பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி மாநிலத் புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் ராமலிங்கம். தலைவர் பதவிக்கு ராமலிங்கத்தை தவிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் ராமலிங்கம்.

புதுச்சேரி பொதுப்பணித்துறை பணி நீக்க ஊழியர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு

எருமை மாடு மீது மழை பெய்வது போன்று வரையப்பட்ட பேனரை கையில் பிடித்துக் கொண்டு துணைநிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித்துறை பணி நீக்க ஊழியர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது புதுச்சேரியில் 2015-ம் ஆண்டு பொதுப்பணித்துறையில் 2642 பேர் பணிக்கு அமர்த்தபட்டனர். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது பணிக்கு அமர்த்தபட்டதால் தேர்தல் ஆணையத்தால் 2016 ஆம் ஆண்டு 2642 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக இவர்களுக்கு பணி வழங்கவில்லை. இந்த நிலையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பணி நீக்கம் செய்யப்பட்ட 2642 பேருக்கும் மீண்டும் பணி வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்றும்…

எல்லா அதிகாரமும் எனக்கு தான்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட் – ராமதாஸ் அறிவிப்பு

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக பா.ம.க.வில் அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்து வருகிறார். அந்தவகையில், இதுவரை பா.ம.க.வில் 78 புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் 61 புதிய மாவட்ட தலைவர்களை டாக்டர் ராமதாஸ் நியமித்துள்ளார். இதனை தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களுடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். மேலும் புதிதாக நியமிக்கப்பட்ட பொது செயலாளர் முரளி சங்கர், சமூக நீதிப்பேரவை கோபு, பொருளாளர் சையத் மன்சூர் உசேன் ஆகியோரை புதிய மாவட்ட செயலாளர்கள், தலைவர்களுக்கு டாக்டர் ராமதாஸ் அறிமுகம் செய்து வைத்தார். கூட்டத்தில் பா.ம.க. இணை பொதுச்செயலாளராக சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை டாக்டர் ராமதாஸ் நியமித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஆகஸ்டு 10-ந் தேதி…

புதுச்சேரிஅரியாங்குப்பம் தொகுதிசிமெண்ட் சாலைகளை மறுசீரமைப்பு பணி எம்எல்ஏ தொடங்கிவைத்தார்

புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட முருங்கப்பாக்கத்தில் விடுபட்ட பகுதிகளான சேத்திலால் நகர் மற்றும் முருங்கப்பாக்கம் பகுதிகளில் உள்ள சிமெண்ட் சாலைகளை மறுசீரமைப்பு செய்து மேம்படுத்தும் பணிகளுக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் என்கிற தட்சணாமூர்த்தி பங்கேற்று ரூ.34.35 இலட்சத்திற்கு பணிகளை பூஜை செய்து துவக்கி வைத்தார். . இந்த திட்டத்தின்மூலம் முருங்கப்பாக்கத்தில் விடுபட்ட பகுதிகளான சேத்திலால் நகர் மற்றும் பழைய முருங்கப்பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 3000 மக்கள் பயனடைவர்.இந்நிகழ்ச்சியின் போது தலைமைப் பொறியாளர் வீரசெல்வம் , கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி , பொது சுகாதாரக்கோட்ட செயற்பொறியாளர் வாசு, உதவிப்பொறியாளர் சுந்தரி, இளநிலைப் பொறியாளர்கள் தணிகைவேல் மற்றும் செல்வி தேவிபாரதி , ஒப்பந்ததாரர் பரஞ்சோதி , முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

புதுச்சேரி மணவெளி தொகுதி தவளக்குப்பம் பகுதியில் சாலை அமைக்கும்பணி- சபாநாயகர் செல்வம் தொடங்கிவைத்தார்

மணவெளி சட்டமன்ற தொகுதி தவளக்குப்பம் காந்தி நகர் பகுதியில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் ரூ.16.75 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பணிகளை சட்டப்பேரவை தலைவர் செல்வம் தொடங்கி வைத்தார். தவளக்குப்பம் பகுதியில் உள்ள காந்தி நகர் பகுதியில் சாலை மற்றும் வடிகால் வசதிகள் இல்லாமல் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்கள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து முதற்கட்டமாக காந்தி நகரில் கழிவுநீர் வாய்க்கால் வசதியை ஏற்படுத்தித் தந்தார். அதனைத் தொடர்ந்து அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காந்தி நகர் பகுதியில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் புதிய தார் சாலை அமைப்பதற்கு அரசாணை பெற்று தந்தார். இதன்படி தார் சாலை அமைக்கும் பணிகளை துவங்கும் முகமாக பணிகளுக்கான பூமி பூஜை…

வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம்- தமிழக முதல்வர் ஸ்டாலின்

முன்னாள் பிரதமா் வி.பி.சிங் பிறந்த நாளையொட்டி, வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் பிறந்திருந்தாலும் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தலைவா்- சமூகநீதிக் காவலா் என்று அழைக்கப்படும் மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் வி.பி.சிங் நினைவைப் போற்றி, முதல்வா் வெளியிட்ட பதிவு: இந்திய நிலப்பரப்பில் மண்டிக்கிடந்த ஆதிக்க இருள் அகற்றிட, சமூகநீதி எனும் பேரொளியைத் தூக்கிச் சுமந்த விடிவெள்ளி ‘சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங் அவர்களின் புகழை நாளும் போற்றுவோம்!ஆதிக்கத்துக்கு எதிரான போராட்ட வரலாற்றைத் திரிபுகளால் மாற்றுவது மீண்டும் அடிமைத்தனத்துக்கே வழியமைக்கும் முயற்சி என்பதை இளம் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம்! என கூறியுள்ளார்.

10ம் வகுப்பிற்கு இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு- சிபிஎஸ்இ

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அறிவித்துள்ளார். அதன்படி, முதல் கட்ட பொதுத்தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும், 2ம் கட்ட பொதுத்தேர்வை மாணவர்கள் விருப்பம் இருந்தால் எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான உள்மதிப்பீடு தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 முறை தேர்வு எழுதியவர்களில் அவர்கள் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தார்களோ அதுவே இறுதி மதிப்பெண்ணாக கருதப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்வில் மதிப்பெண் போதவில்லை எனக் கருதினால் 2ம் கட்ட தேர்வை எழுதலாம் என சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.

தக்காளியை வீசி போராட்டம் 100 பேர் கைது

புதுச்சேரியில் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் மீது தக்காளியை வீசி போராட்டத்தில் ஈடுபட்ட பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்தனர் புதுச்சேரியில் 2015-ம் ஆண்டு பொதுப்பணித்துறையில் 2642 பேர் பணிக்கு அமர்த்தபட்டனர். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது பணிக்கு அமர்த்தபட்டதால் தேர்தல் ஆணையத்தால் 2016 ஆம் ஆண்டு 2642 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக இவர்களுக்கு பணி வழங்கவில்லை. இந்த நிலையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பணி நீக்கம் செய்யப்பட்ட 2642 பேருக்கும் மீண்டும் பணி வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை அந்த அறிவிப்பு செயல்படுத்தப்படவில்லை இதனை கண்டித்தும்…

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நேருஎம்எல்ஏ பேட்டி

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி வருகிற 27-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப் போவதாக தனி மாநில அந்தஸ்து போராட்ட குழு தலைவர் நேரு தெரிவித்துள்ளார் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என நெடுங்காலமாக புதுச்சேரி அரசு மத்திய அரசை வலியுறுத்தி 15 தீர்மானங்கள் சட்டப்பேரவையில் இயற்றி உள்ளது. ஆனால் மத்திய அரசு புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க முடியாது என்று கைவிரித்த நிலையில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 16 வது முறையாக தனி மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தனி மாநில அந்தஸ்துக்காக முதலமைச்சர் ரங்கசாமியும் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வரும் நிலையில்,புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ.,நேரு தலைமையில் 22-க்கும் மேற்பட்ட சமூக…