பான்-இந்தியா திரைப்படத்திற்காக தயாரிப்பாளர் பூஷன் குமாருடன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் தயாரிப்பைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. கடந்த தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று, வசூலிலும் சாதனை படைத்த ‘அமரன்’ படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார். இதனால் அவர் ரசிகர்களின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ள அடுத்த படம் தொடர்பான அறிவிப்புக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு உள்ளனர். இதனிடையே, பெரிய அளவிலான திரைப்படங்களை தயாரிப்பவர் பூஷன் குமார். பாலிவுட்டில் பல திரைப்படங்களை தயாரித்துள்ள பூஷன் குமார் Hurun India Rich List 2022-ம் ஆண்டு பட்டியலில் ரூ.10,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன் 175-வது இடத்தில் இடம்பிடித்தார். இதனால் ராஜ்குமார் பெரியசாமி மற்றும்…
Category: சினிமா
டெல்லி கணேஷ் மறைவு – நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார். டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலர் நேரிலும், சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி,” என குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
நடிகர் டெல்லி கணேஷ் (80) உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக இன்று(நவ. 10) காலமானார். நடிகர் டெல்லி கணேஷின் உடல் ராமபுரத்தில் உள்ள அவரது வீட்டில்பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அவரது இறுதிச் சடங்குகள் நாளை காலை 10.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும் என்று குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.நாடகத்துறையில் இருந்து பட்டினப்பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குணசித்திர நடிகராக அறிமுகமானவர் நடிகர் டெல்லி கணேஷ். தொடர்ந்து பசி, அபூர்வ சகோதரர்கள், தாயா தாரமா, மனிதன், நாயகன், சிந்து பைரவி, அவ்வை சண்முகி, ஆஹா, லண்டன், மாசிலாமணி உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு இந்திய விமானப்படையில் 10 ஆண்டுகள் பணியாற்றினார். நகைச்சுவை, வில்லன், குணசித்திரம் என பன்முக பாத்திரங்களில் நடித்தவர்…
அமரன் படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் பாராட்டு
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரித்த இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ‘முகுந்தன்’ என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியான இத்திரைப்படத்திற்கு மக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. இத்திரைப்படம் உலகமுழுவதும் முதல்நாள் மட்டும் 42.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களின் மிகப் பெரிய ஓப்பனிங் கொண்ட திரைப்படமாக அமைந்துள்ளது.இந்நிலையில், அமரன் படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து மகிழ்ந்துள்ளார். கமல்ஹாசன் அவர்களை தொலைபேசியில் அழைத்த ரஜினிகாந்த் இந்தப் படத்தை தயாரித்ததற்காக மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்தார். அத்துடன், அமரன் படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன், ஒளிப்பதிவாளர் சாய் உள்ளிட்ட அமரன் படக்குழுவினரை நேரில் சந்தித்து…
மேஜர் முகுந்தனுக்கு மிகப்பெரிய சல்யூட்- தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பாராட்டு
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் ‘முகுந்தன்’ என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். இந்த படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.அமரன் படத்தை பார்த்த முதலமைச்சர் முக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:- நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்களது அன்பு அழைப்பை ஏற்று, நேற்று அமரன் திரைப்படம் பார்த்தேன். புத்தகங்களைப் போல்- திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் இயக்குநர் ராஜ்குமார் படமாக்கியுள்ளார்.அமரன் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு படக்குழுவினர்…
குரங்கு பெடல்’ திரைப்படத்திற்கு புதுவை அரசின்சங்கரதாஸ் சுவாமிகள் விருது ரூ. 1 லட்சம் பரிசுமுதல்வர் ரங்கசாமி வழங்கினார்
புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்படக் கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் இணைந்து, ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழாவை நடத்தி வருகின்றன. இந்த விழாவில் ஒரு சிறந்த தமிழ் படம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டு ‘குரங்கு பெடல்’ படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. குரங்கு பெடல்’ படம் ஒரு சிறுவனின் சைக்கிள் கனவை சொல்லும் படமாக உருவாகி இருந்தது. நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். இந்த படத்திற்குவிருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கத்தில் நடந்தது. செய்தி மற்றும் விளம்பரத்துறையின் இயக்குநர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு செயலாளர் கேசவன், அலையன்ஸ்பிரான்சேஸ் தலைவர் சதீஷ்நல்லாம்,நவதர்ஷன் திரைப்படகழகத்தின் செயலாளர் பழனி, ஆகியோர் வாழ்த்தினர். விழாவில், குரங்கு பெடல் திரைப்படத்தின் இயக்குநர் கமலக் கண்ணனுக்கு விருது வழங்கி…
கவிஞர் மு.மேத்தா, பாடகி பி. சுசீலாவுக்கு விருதுகள்: தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவினைப் போற்றிடும் வகையில் கவிஞர் மு.மேத்தா, பின்னணிப் பாடகி பி. சுசீலா ஆகியோருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (அக். 4) தலைமைச் செயலகத்தில், தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் 2023-ஆம் ஆண்டிற்கான ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது’களை கவிஞர் மு. மேத்தாவுக்கும், பின்னணிப் பாடகி பி. சுசீலாவுக்கும் வழங்கிச் சிறப்பித்தார். செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் ‘கலைஞர் நினைவு கலைத்துறை…
பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு- இயக்குனர் மோகன் ஜி மீது பழனி போலீஸ் நிலையத்திலும் வழக்கு
பராசூரன், திரவுபதி உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பழனியில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் சேர்க்கப்படுவதாக சர்ச்சை கருத்துகளை தெரிவித்தார். இதனையடுத்து அவர் மீது திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் மேலாளர் கவியரசு கொடுத்த புகாரின் பேரில் நேற்று சென்னையில் இருந்த மோகன் ஜியை கைது செய்தனர். பின்னர் திருச்சி அழைத்து வந்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை சொந்த ஜாமினில் விடுவித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதனிடையே மோகன் ஜி மீது பழனி அடிவாரம் போலீஸ் நிலையத்திலும் தேவஸ்தானம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் அடிவாரம் போலீசார் மோகன் ஜி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே பழனி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு…
ஏஐ தொழில்நுட்பத்தில் திரைப்படத்தில்விஜயகாந்த் பயன்படுத்து கூடாதுதேமுதிக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது. எனவே இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது. எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும். ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களை சந்திக்கிறார் விஜய்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. விழாவை 2 கட்டங்களாக நடத்த அக்கட்சியின் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் மாணவர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததால் இம்முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வருகிற 28-ஆம் தேதி மற்றும் ஜூலை 3-ஆம் தேதிகளில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து பாராட்டு சான்றிதழை விஜய் வழங்குகிறார். மேலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்குகிறார். முதல் கட்டமாக வருகிற 28-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி,…