டி20 உலகக்கோப்பை தொடரை 7 ரன்கள் வித்தியாசத்தில் கைப்பற்றிய இந்தியா

பரபரப்பாக நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 2-வது முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்த போட்டி முடிந்த பிறகு உலகக் கோப்பையை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஸ்டைலாக வாங்கினார். இதை தொடர்ந்து அனைவரும் உலகக் கோப்பையை கையில் ஏந்தி கொண்டாடினர். அப்போது ஒரு ஓரமாக இருந்த இந்திய அணியின் பயிற்சியாளரை விராட் கோலி அழைத்து வந்து அவரிடம் கோப்பை வழங்கினார். இதனால் உணர்ச்சிவசப்பட்ட ராகுல் டிராவிட், கோப்பை கையில் ஏந்தி ஆக்ரோஷமாக ஆர்பரித்தார். அவருடன் சேர்ந்து அனைத்து வீரர்களும் இதனை கொண்டாடினர். இந்திய அணியின் கேப்டனாகவோ, ஒரு வீரராகவோ உலகக்கோப்பையை கையில் ஏந்தி சாதிக்க முடியாத ராகுல் டிராவிட், ஒரு பயிற்சியாளராக உலகக்கோப்பையை கைகளில் ஏந்தி…

ஐபிஎல் பைனலில் ஐதராபாத்தை வீழ்த்தியது 3வது முறையாக கொல்கத்தா சாம்பியன்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கொல்கத்தா அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தொடக்கத்திலேயே பந்துகள் நன்கு ஸ்விங் ஆகின. அதேவேளையில் சீரான பவுன்ஸும் இருந்தது. மேலும் பந்தை இறுகப்பிடித்து வீசமுடிந்ததால் சரியான திசையில் பந்துகளை வீசி கொல்கத்தா அணி வீரர்கள் அழுத்தம் கொடுத்தனர். குர்பாஸ் உடன் இணைந்த வெங்கடேஷ் அய்யர் அதிரடியாக விளையாடி ரன் குவிக்க, கொல்கத்தா அணியின் வெற்றி உறுதியானது. குர்பாஸ் – வெங்கடேஷ்…