நேற்று 12.12.24 புதுச்சேரி அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்காததற்கு முன்பே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று பொய்யான செய்தியை WhatsApp மூலம் இணையதளத்தில் பரப்பிய ஆட்டோ ஓட்டுநர்களான புதுச்சேரி சின்னையாபுரத்தை சேர்ந்த ஐஸ்வர்யா ராஜ் மற்றும் கலைவாணன் ஆகியோர்கள் பொதுமக்களிடம் தங்களின் வருத்தத்தையும், மன்னிப்பையும் கேட்ட வீடியோ பதிவு.
Category: முதன்மை செய்திகள்
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவிழந்தது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் (டிச.14, காலை 9 மணி) மேற்கு வட மேற்கு திசையில் குமரிக்கடல் வழியே மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.
நிவாரணத் தொகையை பத்தாயிரம் ஆக உயர்த்து வழங்க வேண்டும்காங்கிரஸ் கோரிக்கை
. நிவாரணத் தொகையை பத்தாயிரம் ஆக உயர்த்து வழங்க வேண்டும்காங்கிரஸ் கோரிக்கை. புதுச்சேரி. டிச.12-புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவரும் எம்பியும் ஆன வைத்திலிங்கம் தலைமையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி வைத்தியநாதன் எம் எல் ஏ காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் கவர்னர் கைலாசநாதனை நேற்று சந்தித்து மனு கொடுத்தனர் அதில் கூறியிருப்பதாவது பெண்கள் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படும் ஆவணங்கள் மீண்டும் கிடைத்திட சிறப்பு முகாம் நடத்த வேண்டும் வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள் மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் வெள்ளத்தால் வீட்டு உபயோக பொருட்கள் சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவே ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தபட்சம் ரூபாய் 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் மீனவர்களுக்கான இழப்பு தொகையை 20 ஆயிரம் ஆகும் ஹெக்டர் பயிரிழப்புக்கு ரூபாய் 50,000 ஆகவும் கால்நடைகள் இழப்பீட்டுத்…
தமிழ்நாட்டில் கோவில்கள் தணிக்கையின் கீழ் வரவில்லை
சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை பேசியதாவது:- கோவில்களை தணிக்கையின் கீழ் கொண்டு வர வேண்டுமென்ற நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது. தமிழ்நாட்டில் அறநிலையத்துறை ஏன் இருக்க கூடாது என்பதற்கு இது ஓரு சான்று. இதற்கு எதிராக தமிழக பாஜக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர உள்ளது. தமிழக அரசு விழித்துக்கொள்ள வேண்டும். அரசின் நிலை மோசமாக உள்ளது. அதானியை முதலமைச்சர் சந்தித்ததாக பாஜக ஒரு போதும் கூறவில்லை. அதானியை சந்திப்பது குற்றமில்லை. முதலமைச்சரின் மருமகன் அதானியை சந்தித்ததாக பாஜக குற்றம்சாட்டுகிறது. முதலமைச்சரின் மருமகன் அதானியை சந்திக்கவில்லை என முதலமைச்சர் கூறுவாரா ? இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன்
முன்னாள் முதல்வர் உடல் எரியூட்டப்பட்டதுமுதல்வர் அமைச்சர்கள் திமுக காங்க காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலிபுதுச்சேரி டிசம்பர் 10 புதுச்சேரியில் மறைந்த முன்னாள் முதல்வர் ராமச்சந்திரனின் உடல் 21 குண்டுகள் வழங்க முழு அரசு மரியாதை உடன் நேற்று தகரம் செய்யப்பட்டதுபுதுச்சேரி முன்னாள் முதல்வர் எம் டி ஆர் ராமச்சந்திரன் 93 வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் நல குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காலமானார் திமுக அதிமுக காங்கிரஸ் கட்சிகளில் பல்வேறு பொறுப்புகளில் இருந்த அவர் தற்போது காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவராக இருந்து வந்தார் அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் புதுச்சேரி ஆளுநர் கைலாஷ் நாதன் முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் திமுக காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர் மேலும்…
விடுதலை சிறுத்தைகள் நிவாரண உதவி
ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு விசிக சார்பில் நிவாரண உதவி விசிக சார்பில் நிவாரண உதவி ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் விசிக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியமான ₹10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் திருமாவளவன
7 கி.மீ. வேகத்தில் நகரும் தாழ்வு மண்டலம்- வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து நாளை மாமல்லபுரம்-காரைக்காலுக்கு இடையே புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடைப்பட்ட பகுதிகளை மையமாக கொண்டு கரையை கடக்கக்கூடும். இதனால் தமிழகத்துக்கு புயல் ஆபத்து நீங்கியது. இருப்பினும் சென்னை உள்பட வடமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் கடும் மழையை பெய்துவருகிறது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு 310 கி.மீ., புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 360 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு 400 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. திரிகோணமலையின் கிழக்கு வடகிழக்கே 260 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்டில் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த 20 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெற்றது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 4 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததை அடுத்து, கவர்னர் சந்தோஷ் காங்வாரை சந்தித்த ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கவர்னரின் ஒப்புதலை அடுத்து, ஜார்க்கண்டில் நான்காவது முறையாக ஆட்சி அமைக்கும் சோரன் இன்று முதல்வராக பதவி ஏற்றுள்ளார். ஆளுநர் சந்தோஷ் குமார் கங்குவார் பதவி பிரமாணமும் ரகசகய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும், காங்கிரஸ் தலைவர்…
லெபனான்- இஸ்ரேல் போர் நிறுத்தம்! -அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு
லெபனான் – இஸ்ரேல் போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். லெபனானில் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையேயான 14 மாதங்களாக நடைபெற்றுவந்த போரை நிறுத்தம் செய்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்கா – பிரான்சின் ஒப்பந்தம் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகை தொலைக்காட்சி உரையில் பேசுகையில், “இது ஒரு வரலாற்றுத் தருணம். இந்த ஒப்பந்தத்தின்படி, புதன்கிழமை அதிகாலை 4 மணி முதல் நடைமுறைக்கு வரும்.இதனால், லெபனான்- இஸ்ரேல் எல்லையில் போர் முடிவுக்கு வரும். போர்நிறுத்தம் நடைமுறைக்கு வரும்போது, இரு நாடுகளுக்கு இடையேயான சண்டை நிரந்தரமாக நிறுத்தப்படும். இது இரு நாடுகளுக்கு இடையேயான விரோதப் போக்கை நிரந்தரமாக நிறுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. போரை…
எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், அதானி விவகாரத்தை மத்திய அரசுக்கு எதிராக கையில் எடுத்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்தனர். மக்களவை நேற்று ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மக்களவைத் தொடங்கியது. அதானி விவகாரம், வக்ஃபு வாரிய சட்ட திருத்தம், ஒரே நாடு ஒரே தேர்தல், மணிப்பூர் வன்முறை, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து, தமிழக மீனவர்கள் பிரச்னை உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்தன. இதனால், மக்களவைத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மக்களவை செயல்பாடுகள் பிற்பகல் 12 மணி வரை…