வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத், ஏராளமான புலம்பெயர் மக்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. உலக அளவில் எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு என்பதால், அங்குள்ள எண்ணெய் வயல்கள், சுத்திகரிப்பு மையங்கள் என அது சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் குவைத்தில் வசிக்கின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவர். பிற வளைகுடா நாடுகளைப்போல குவைத்திலும் இந்தியர்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். குவைத்தின் மொத்த மக்கள் தொகையில் 21 சதவீதத்தினர், அதாவது சுமார் 10 லட்சம் பேர் இந்தியர்கள் ஆவர். மேலும் நாட்டின் தொழிலாளர் வர்க்கத்திலும் 30 சதவீதம் பேர் (சுமார் 9 லட்சம்) இந்தியாவை சேர்ந்தவர்கள். குவைத்தில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றி வரும் இந்தியர்கள் பலர் குடும்பமாக தங்கியிருக்கின்றனர். அதேநேரம் குடும்பத்தினரை இங்கே விட்டுவிட்டு தனியாக வசிப்பவர்களும் அதிகமாக உள்ளனர். இவர்கள் பெரும்பாலும்…
Category: பொது செய்தி
குவைத் தீ விபத்தில் நமது குடிமக்கள் பாதுகாப்பிற்கு இந்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் – ராகுல் காந்தி
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இச்சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டததில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள…
தங்கம் வென்ற மாரியப்பன்: ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
உலக பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் தொடரில் மாரியப்பன் தங்கம் வென்றார்.மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.75 லட்சத்துக்கான காசோலை வழங்கினார். மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் நாட்டின் கோபே நகரில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். உலக பாரா தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், உலக பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.75 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். அப்போது விளையாட்டுத்துறை அமைச்சர்…
வாரத்துக்கு 400 சிகரெட்டுகள் – ஓட்டையான சிறுமியின் நுரையீரல்
அதிகமாக சிகெரெட் பிடித்ததால் 17 வயது இளம்பெண்ணின் நுரையீரலில் ஓட்டை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த 17 வயதாகும் கைலா பிளைத் ஒரு வாரத்துக்கு சாராசரியாக 400 இ-சிகரெட்டுகளை புகைத்து வந்துள்ளார் அதாவது ஒரு வாரத்துக்கு சற்றேறக்குறைய 4000 பஃப்- களை அவர் உள்ளிழுத்துள்ளார். இந்நிலையில் கடந்த மே 11 ஆம் தேதி தனது தோழியின் வீட்டில் இருந்தபோது கைலா, திடீரென வயிற்றில் ஏற்பட்ட கடுமையான வலியால் அலறித் துடித்து மயங்கி விழுந்தார். உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் கைலாவை பரிசோதித்த மருத்துவர்கள், அளவுக்கு அதிகமான முறை சிகெரெட் புகையை உள்ளிழுத்ததால் நுரையீரலில் ஓட்டை விழுந்துள்ளதாக தெரிவித்தனர். பல்மோனரி பிலெப் எனப்படும் இந்த நுரையீரல் ஓட்டை விரிவடையாமல் இருக்க ஐந்தரை மணி நேரம் போராடி அறுவை சிகிச்சை செய்து நுரையீரலின் ஒரு…
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களை சந்திக்கிறார் விஜய்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. விழாவை 2 கட்டங்களாக நடத்த அக்கட்சியின் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் மாணவர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததால் இம்முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வருகிற 28-ஆம் தேதி மற்றும் ஜூலை 3-ஆம் தேதிகளில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து பாராட்டு சான்றிதழை விஜய் வழங்குகிறார். மேலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்குகிறார். முதல் கட்டமாக வருகிற 28-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி,…
மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்க பா.ஜ.க. திட்டம் – டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை
மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார். இதையடுத்து முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 40 தொகுதிகளும் அடங்கும். அதைத்தொடர்ந்து ஏப்ரல் 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1-ந்தேதி ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக 6 கட்டங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. நாடு முழுவதும் வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது. தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கியதில் இருந்தே பா.ஜனதா கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்று இருந்தது. குறிப்பாக ராஜஸ்தான், குஜராத், ஆந்திரா, ஒடிசா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் முன்னிலை வகித்தனர். மத்திய பிரதேசம்,…
“கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். பிரதமர் மோடி
மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்த நாள் இன்று. அவரது 101-வது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், கருணாநிதியுடன் இணைந்து பயணித்த அரசியில் வாழ்க்கை குறித்து நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி, கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை புகழ்ந்துள்ளார் கலைஞர் கருணாநிதியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்த படத்தை பதிவிட்டு எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் “கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். பொது வாழ்வில் தனது வாழ்க்கையின் பெரும்பாலான ஆண்டுகள் தமிழகம் மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். தனது அறிவார்ந்த தன்மைக்காக பெரிதும் மதிக்கப்பட்டவர். நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சராக இருந்தது உள்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் கலைஞர்…
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஜூன் 5-ல் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு
நீட் தேர்வை மீண்டும் நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என புகார் வந்ததால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.
வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2000க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. அதில் சிறுத்தை, வெள்ளை புலிகள், மனித குரங்குகள், வங்காளப் புலிகள், நீர்நாய், சிங்கங்கள் என அனைத்து வகையான விலங்குகளும் உள்ளன. இந்த பூங்காவில் குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகளின் இருப்பிடம், பூங்கா மீன் மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா கண்காட்சியகம் போன்றவை தனித்தனியாக அமைந்துள்ளது. மேலும் விலங்குகள் கோடைகால வெயிலை சமாளிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் பார்வையாளர்களை கவரும் வகையில் அனைத்துநடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட மக்களின் பொழுதுபோக்கு இடமாக இந்த பூங்கா விளங்குகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வண்டலூர் உயிரியல் பூங்காவை பார்வையிட்டு செல்கின்றனர். வண்டலூர் பூங்கா வழக்கமாக செவ்வாய்க்கிழமை…