தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்த பிறகு கருத்து தெரிவிப்பேன். தமிழகத்தில் இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சியை சார்ந்தே எப்போதும் செல்கிறது. அதன் பிறகு ஒரு ஆண்டுக்கு பிறகு வரும் தேர்தலில் முழுமையாக முடிவுகள் மாறி இருக்கிறது என்பதை பார்த்து இருக்கிறோம். இந்த முறையும் அப்படித்தான் பார்க்கிறோம். இடைத்தேர்தல் முடிவுகள்தான் தமிழக மக்களின் மனநிலை என்று நினைத்தால் அது தவறானது. இதற்கு முன்பு அப்படி இருந்ததில்லை. இப்போதும் அப்படி இருக்க போவதில்லை. இருந்தாலும் மக்களின் முடிவை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். எந்த மாற்று கருத்து கூறினாலும் மக்களின் வாக்கு வாக்குதான். முதல் முறையாக கூட்டணி கட்சிகள் இணைந்து களபணியாற்றி இருக்கிறார்கள். அரசின் அதிகார பலம், பணபலத்தை தாண்டி மக்கள் வாக்களித்து…
Category: தமிழ்நாடு
விக்கிரவாண்டியில் சாதனை வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி” – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சாதனை வெற்றியைக் கொடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி” என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், “இந்தியா முழுமைக்கும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகள் 11 இடங்களில் முன்னணியில் இருக்கிறது. பாஜக தோல்வியைத் தழுவி இருக்கிறது. அத்தகைய தோல்வி முகமே பாஜகவுக்கு இந்த இடைத்தேர்தலிலும் தொடர்கிறது. தோல்விகளில் இருந்து பாஜக பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்.” என்றும் முதல்வர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு மகத்தான, மாபெரும் வெற்றியை வழங்கிய விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட தமிழகத்தின் நாற்பது தொகுதியிலும் நாற்பதுக்கு நாற்பது என்ற நூறு விழுக்காடு வெற்றியை திமுக…
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- திமுக 69 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10ம் தேதி 276 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. இத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இத்தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்துள்ளனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 82.47 ஆகும். இன்று காலை சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். இந்நிலையில் 20 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டநிலையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா…
மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்
மதுவிகள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சுமார் 229 பேர் கடந்த 18-ந்தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். கல்லீரல், சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்பு உள்ளிட்ட கடும் உபாதைகளால் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எதிர்கட்சிகள் இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்திய நிலையில், தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்குலக்கு திருத்தச் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல்உத்தரவிட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தமிழ்நாடு சட்டப்பேரைவையில் கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்கும் வகையிலும், அவற்றை விற்பனை செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் வகையிலும், ‘தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா கடந்த மாதம்…
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மொத்த வாக்கு பதிவு 82.48 சதவீதம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. வாக்குப்பதிவுக்கு முன்பாக வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாட்டை உறுதி செய்திட வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 6.30 மணி வரை மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னர், 276 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி, இன்று மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதையடுத்து, வரும் 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 50.95 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. தொடர்ந்து, பிற்பகல் 3 மணி நிலவரப்படி 64.44 சதவீத வாக்குகள் பதிவானது. 5 மணி நிலவரப்படி 77.73 சதவீத வாக்குகள் பதிவானது. இதைத்தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 6 மணிக்கு முடிவடைந்தது. இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் 82.48…
சென்னை மெட்ரோ ரெயிலில் திடீர் தீப்பொறி அவசரமாக நிறுத்தப்பட்ட ரெயில்
சென்னை மெட்ரோ ரெயிலில் திடீரென தீர்பொறி பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகள் மத்தியில் கூச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து ரெயில் அவரசாமக நிறுத்தப்பட்டுள்ளது. விம்கோ நகர்- விமான நிலையம் வரை செல்லக்கூடிய மெட்ரோ ரெயிலில், உயர்நீதிமன்ற நிறுத்தத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இயந்திர கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் அவசரமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரெயில் நிறுத்தியதை தொடர்ந்து ரெயிலில் பயணித்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீல நிறப் பாதையில் செல்லும் மெட்ரோ ரெயில்கள் 10 நிமிடம் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பசுமை நிறப் பாதையில் செல்லும் மெட்ரோ ரெயில்களில் எந்தவித பிரச்சினையும் இல்லை என மெட்ரோ ரெயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரைவேட்புமனு தாக்கல் நடந்தது. 24-ம்தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடந்து, 26-ம் தேதி இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதிமுக போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ள நிலையில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சைவேட்பாளர்கள் என 29 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். இந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு…
சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல்: குடியுரிமை அதிகாரி `சஸ்பெண்டு’
சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில், வெளிநாடு செல்லும் விமான பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பரிசோதித்து அனுப்புவதற்காக, குடியுரிமை பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றிய அதிகாரி சரவணன் வெளிநாடுகளுக்கு செல்ல வரும் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பரிசோதிக்கும் போது, முறைகேடுகளில் ஈடுபடுவதும், தங்கம் கடத்தி வருபவர்களுக்கு உதவி செய்வதும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் உறுதியானது. இதையடுத்து குடியுரிமை அதிகாரி சரவணன் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். விசாரணையில் கடத்தல் காரர்களிடம் இருந்து தங்கத்தை, சரவணன் வாங்கி வைத்துக் கொண்டு, சுங்கச் சோதனை இல்லாமல் வெளியில் எடுத்துச் செல்வதற்கு உதவி புரிந்தது தெரிந்தது. இதுதொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கூறும்போது, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 267 கிலோ தங்கம் கடத்தலுக்கும் தற்போது சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள சரவணனுக்கும் சம்பந்தம்…
சிவகாசி வெடிவிபத்துக்கு தமிழக முதல்வர் நிவாரணம் அறிவித்தார்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார் குறிச்சி கிராமத்தில் முருகவேல் என்பவருக்கு சொந்தமான சுப்ரீம் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த குடோன் அறை பலத்த சேதம் அடைந்தது. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் அனைத்தும் வெடித்து சிதறியதோடு தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதற்கிடையே வெடி மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிதம்பரா புரத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 45), முத்துமுருகன் (45) ஆகிய 2 பேரும் உடல் சிதறியும், கருகியும் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் இந்த கோர விபத்தில் சரோஜா (55), சங்கரவேல் (54) ஆகிய 2 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையல் முதலமைச்சர்…
சீரமைக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிரெயில் பெட்டிகளாக மாறிய வகுப்பறைகள்
சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 10 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது. ரெயில் பெட்டிகள் போன்று வகுப்பறைகளுக்கு வண்ணம் தீட்டியதுடன், வகுப்பறைக்குள் பழமொழிகள், திருக்குறள், சித்த மருத்துவ பயன்கள், பொதுஅறிவு தகவல்கள், தமிழ் ஆங்கில மாதங்கள் உள்ளிட்டவை எழுதப்பட்டுள்ளன. சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் இருக்கும் வகுப்பறைகளில் கல்வி கற்க மாணவர்கள் ஆர்வம் காட்டுவதாக ஆசிரியர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
