இமாச்சல பிரதேச மாநிலத்தில் பருவமழைக் காரணமாக ஏற்பட்ட மேகவெடிப்பு, மழை வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 69 பேர் உயிரிழந்த நிலையில், 37 பேரை காணவில்லை. 110 பேர் காயம் அடைந்துள்ளனர். 700 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் சுக்விந்தர்சிங் சுகு தெரிவித்துள்ளார். ஏற்கனவே மழையால் தத்தளித்து வரும் நிலையில், வருகிற 7ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தின் மண்டியில் உள்ள துனாக், பக்சயேத் ஆகியப் பகுதிகள் மிகப்பெரிய அளவில் சேதத்தை சந்தித்துள்ளன. பருவமழை தொடங்கியதில் இருந்து 14 மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலைகள், குடிநீர் திட்டங்கள், மின்சார வினியோகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் அரசு நிற்பதாக சுகு உறுதி அளித்துள்ளார். மேலும், பாதிகப்பட்ட குடும்பங்களுக்கு தங்குமிடத்திற்கு வாடகையாக 5 ஆயிரம் வழங்கப்படும்.…
Category: இந்தியா
10 ஆண்டுகள் நிறைவு செய்த சென்னை மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு, 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. சென்னையில் 2015 ஆம் ஆண்டில் ஜூன் 29 ஆம் தேதியில்தான் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கி, இன்றுடன் 10 நிறைவு பெற்றதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2015-ல் முதற்கட்டமாக கோயம்பேடு – ஆலந்தூர் இடையே தொடங்கப்பட்ட மெட்ரோ சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், தற்போது இரண்டாம் கட்டப் பணியும் நடைபெற்று வருகிறது. ரூ. 63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் இரண்டாம் கட்டப் பணி நடைபெற்று வருகிறது.
தமிழக மீனவர்கள் 8 பேர் கைது இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!
எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பாகத்தான் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேர் சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். இந்த நிலையில், ஆழ்கடலில் மீன்பிடித்துவிட்டு திரும்புகையில், தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, 8 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், விசாரணைக்காக தமிழக மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மீனவர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பழுதடைந்து நின்ற முதல்வரின் வாகனம்
மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவின் 19 வாகனங்கள் டீசலில் தண்ணீர் கலந்ததால் பழுதடைந்து சாலையில் சிக்கிக் கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. பம்பில் இருந்து டீசல் நிரப்பப்பட்ட பிறகு வாகனங்கள் பழுதடைந்தன. கான்வாயின் பல வாகனங்கள் பாதி வழியில் சாலையில் பழுதடைந்து நின்றன. ரட்லாவில் நடைபெற்ற பிராந்திய தொழில் திறன் மேம்பாட்டு மாநாட்டில் பங்கேற்க மோகன் யாதவ் நேற்று சென்றிருந்தபோது இந்த சம்பவம் ஏற்பட்டது. முதல்வர் கான்வாயில் உள்ள ஒரு வாகனத்தின் ஓட்டுநர், இந்தூரில் இருந்து முதல்வர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறினார். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் டீசலில் தண்ணீர் கலந்திருப்பது தெரியவந்தது.இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தாசில்தார் ஆஷிஷ் உபாத்யாய் தெரிவித்தார். இதையடுத்து சம்மந்தப்பட்ட பெட்ரோல் பம்ப் இழுத்து மூடப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக…
பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல சாமியார் பிரதிபாநந்தா மீது பாலியல் வன்கொடுமை புகார்
இந்த வருடம், நாட்டின் 4வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல சாமியார் ஸ்வாமி பிரதிபாந்தா மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். பாரத் சேவாஸ்ரம சங்கத்தின் முர்ஷிதாபாத் பிரிவில் பிரதிபாந்தா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஆசிரமத்தின் பள்ளியில் வேலை வாங்கி தருவதாக கூறியும் பின்னர் மிரட்டியும் கடந்த 2013 முதல் தன்னை பலமுறை பிரதிபாந்தா பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் புகார் அளித்துள்ளார். புகாரின்படி, பாதிக்கப்பட்ட பெண் கடந்த 2012 டிசம்பரில் பிரதிபாந்தாவை சந்தித்தார். பள்ளியில் வேலை தருவதாக உறுதியளித்து அவரை ஆசிரம விடுதியில் தங்க வைத்துள்ளார். பின்னர் தினந்தோறும் அப்பெண்ணை 5வது மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.பின்னர் அப்பெண்ணுக்கு மாதந்தோறும் பணம் அனுப்புவதாக கூறி விடுதியிலிருந்து அனுப்பி வைத்தார். இடையில் 2013 இல்…
புரி ஜெகந்நாதர் கோயிலில்ரத யாத்திரை கோலாகலம்!
ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதா் கோயில் ரத யாத்திரை வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா். ஒடிஸா மாநிலம், புரியில் 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஜெகந்நாதா் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை பிரசித்தி பெற்ாகும். நிகழாண்டு ரத யாத்திரை வெள்ளிக்கிழமை மிக விமா்சையாக நடைபெற்றது. இதையொட்டி, கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்ட மூன்று பிரம்மாண்ட ரதங்களில் எழுந்தருள்வதற்காக, ஜெகந்நாதா், அவரது அண்ணன் பலபத்திரா், தங்கை தேவி சுபத்திரை ஆகிய மூவரின் மரச்சிற்பங்கள், கோயிலில் இருந்து வேத மந்திரங்கள்-மேளதாளங்கள்-சங்கொலி முழங்க வெளியே எடுத்துவரப்பட்டன. சுமாா் 2 மணிநேரம் நடைபெற்ற இச்சடங்கின்போது, வெள்ளமென பக்தா்கள் சூழ சுவாமி சிற்பங்கள் எடுத்துவரப்பட்டு, ரதங்களில் அமா்த்தப்பட்டன. ரத யாத்திரைக்கு முந்தைய சிறப்பு மிக்க இந்நிகழ்வில் மத்திய அமைச்சா்கள் தா்மேந்திர பிரதான்,…
ராஜ்பாஷா எல்லாம் தேவை இல்லை – அமித் ஷாவுக்கு கனிமொழி பதில்
இந்தி பற்றிய மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பதிலளித்துள்ளார். டெல்லியில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்தில் பேசுபவர்கள் எதிர்காலத்தில் வெட்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார். தொடர்ந்து நேற்று ராஜ்பாஷா துறையின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, ‘இந்தி எந்த மொழிக்கும் எதிரானது அல்ல, அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் போன்றது’ என்று கூறியிருந்தார். இந்நிலையில் இதுபற்றி திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், “சரியாகச் சொன்னீங்க. அதையேதான் நாங்களும் சொல்கிறோம். நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம். தனியா ராஜ்பாஷா எல்லாம் தேவை இல்லை. அந்த பெயரை இந்திய மொழிகள் வளர்ச்சி துறைன்னு மாத்திடலாம்” என்று பதிவிட்டுள்ளார்.
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல்நிலை கவலைக்கிடம்
கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளத்தின் முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் (வயது 101), கடந்த 2 நாள்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், அந்த மருத்துவமனை தரப்பில் இன்று (ஜூன் 25) வெளியிடப்பட்ட அறிக்கையில், அச்சுதானந்தனின் உடல்நிலையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை எனவும், தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மூத்த தலைவர் அச்சுதானந்தனை, கேரள முதல்வர் பினராயி விஜயன், நேற்று (ஜூன் 24) நேரில் சந்தித்தார். கடந்த 1964 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து, அச்சுதானந்தன் உள்ளிட்ட தலைவர்கள்…
சுபான்ஷு சுக்லாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பல்வேறு இன்னல்களைத் தாண்டி, ஃபால்கன்-9 ராக்கெட் இன்று 12.01 மணியளவில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா குழு விண்வெளி நிலையத்திற்குப் புறப்பட்டது. இது 28 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு நாளை மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையமான ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் அடையவுள்ளது. இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கொண்ட குழுவுடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்று 14 நாள்கள் தங்கி ஆய்வு மேற்கொள்ளவிருக்கின்றது. இதுதொடர்பாக மோடியின் எக்ஸ் பதிவில், இந்திய விண்வெளி வீரர் சுக்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா, ஹங்கேரி, போலந்து, அமெரிக்க வீரர்களை ஏற்றிச் செல்லும் விண்வெளிப் பயணத்தின் வெற்றிகரமான ஏவுதலை நாங்கள் வரவேற்கிறோம். சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச்…
வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம்- தமிழக முதல்வர் ஸ்டாலின்
முன்னாள் பிரதமா் வி.பி.சிங் பிறந்த நாளையொட்டி, வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் பிறந்திருந்தாலும் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தலைவா்- சமூகநீதிக் காவலா் என்று அழைக்கப்படும் மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் வி.பி.சிங் நினைவைப் போற்றி, முதல்வா் வெளியிட்ட பதிவு: இந்திய நிலப்பரப்பில் மண்டிக்கிடந்த ஆதிக்க இருள் அகற்றிட, சமூகநீதி எனும் பேரொளியைத் தூக்கிச் சுமந்த விடிவெள்ளி ‘சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங் அவர்களின் புகழை நாளும் போற்றுவோம்!ஆதிக்கத்துக்கு எதிரான போராட்ட வரலாற்றைத் திரிபுகளால் மாற்றுவது மீண்டும் அடிமைத்தனத்துக்கே வழியமைக்கும் முயற்சி என்பதை இளம் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம்! என கூறியுள்ளார்.