சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. சென்னையில் வரும் 28ம் மற்றும் ஜூலை 3ம் தேதி நடைபெற உள்ளது. பாராட்டு விழாவில் நடிகர் விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டும் நிலையில் விழாவுக்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாராட்டு விழாவில் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பேப்பர்,பேனா கொண்டு வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. விழாவில் மாணவர்களுடன் பெற்றோர், உடன் பிறந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Category: தமிழ்நாடு
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 பேர் போட்டி- இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனுக்களைத் திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான இன்று (ஜூன் 26) யாரும் மனுக்களைத் திரும்ப பெறவில்லை. இதனால், இடைத்தேர்தலில் 29 பேர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 64 பேர் போட்டியிட வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இதில் 35 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 29 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. வேட்புமனுக்களைத் திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான இன்று (ஜூன் 26) 29 பேர்களில் யாரும் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற விருப்பம் தெரிவிக்கவில்லை. மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான நேரம் பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 பேர் போட்டியிடுவார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில்…
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டசபையில் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்
10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான விவாதம் சட்டசபையில் நடைபெற்றபோது, சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி இந்த கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று சட்டசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது:-
காவிரி நதிநீர் பங்கீடு குறித்து தமிழகத்தின் கோரிக்கையை ஏற்க கர்நாடகா மறுப்பு
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 31-வது கூட்டம் இன்று டெல்லியில் சுமார் ஒன்றை மணி நேரம் நடைபெற்றது. இதில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கர்நாடகா, தமிழகம் மற்றும் கேரளா, புதுச்சேரி ஆகியே மாநிலங்களின் அதிகாரிகள் நேரில் பங்கேற்றனர். அதேபோல் ஒவ்வொருவரும் தங்களின் மாநிலங்களின் அணைகளில் உள்ள நீர் நிலவரம் குறித்து எடுத்துரைத்தனர். ஜூன் மாதத்திற்கு 9.19 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழுவிடம் தமிழக அரசு ஏற்கனவே கோரிக்கையை முன் வைத்திருந்தது. அப்போது கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவில் இருந்து எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், இன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் ஜூன் மாதம் நிலுவையில் உள்ள 5.367 டிஎம்சி…
6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படைக் கணினி அறிவியல் மற்றும் ஏஐ பாடத்திட்டம்
பள்ளிக் கல்வித் துறையின் 2024-2025 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் இடம் பிடித்துள்ள முக்கியம்சங்கள் பின்வருமாறு- உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை வளர்க்கவும், குழுவாக இணைந்து செயல்படக்கூடிய திறனைக் கற்றுக் கொள்ளவும், படைப்பாற்றலை வளர்க்கவும் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்ற அளவில் 38 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் எந்திரனியல் ஆய்வகம் (Robotics Lab) ரூ.15.43 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும். 8 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் புலன் உணர்வுத்திறன், அறிவுத்திறன், பெருந்தசை இயக்கத்திறன் மற்றும் நுண்தசை இயக்கத்திறன் ஆகியவை மேம்படுவதற்காக ஒரு மாவட்டத்திற்கு ஒரு “பல்வகைத் திறன் பூங்கா” என 38 மாவட்டங்களில் ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும். 15 1000 ஆசிரியர்களுக்குத் தொல்லியல் சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டது. இவ்வாண்டில்…
தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, தனது முந்தைய கடிதத்தில் சுட்டிக் காட்டியது போன்று மீனவர்களை கைது செய்தல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்வதால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அச்சமுதாயத்தினரிடையே மிகுந்த அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர் கடந்த 22.06.2024 அன்று, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள். IND- TN-10-MM-84, IND-TN-10-MM-88 IND-TN-10-MM-340 எண்களைக் கொண்ட மூன்று இயந்திரப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகச் தெரிவித்துள்ளார். எனவே, இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர். ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட…
ஜூன் 3ஆம் தேதி செம்மொழி தமிழ் நாளாக கொண்டாடப்படும்- தமிழக செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு
சட்டசபை கூட்டத்தில் பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதில் கூறியிருப்பதாவது,
மத்தியஅரசு சாதிவாரி கணக்கெடுப்பை விரைவாக நடத்த சட்டசபையில் தீர்மானம்-முதல்வர் ஸ்டாலின்
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடப்பில் உள்ளதாகவும், சாதிவாரி கணக்கெடுப்புகளை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-இப்போது பா.ஜ.க. கூட்டணியில் தான் பா.ம.க. உள்ளது. பா.ஜ.க.வுடன் பேசி நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகு தான் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும்.ஏற்கனவே இடஒதுக்கீடு அமல்படுத்தி நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு காண வேண்டுமென்றால், சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசால் விரைந்து நடத்தப்பட வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.4000 கோடியில் தமிழ்நாட்டின் சாலைகள் 10 ஆயிரம் கி.மீட்டர் மேம்படுத்தப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபையின் 4-வது நாளான இன்று கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். வில்லிவாக்கம் பகுதியில் பணிபுரியும் மகளிருக்கான மகளிர் தங்கும் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். இதையடுத்து 110 விதியின் கீழ் அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள்- அரசு சார்பில் மரியாதை சங்க இலக்கியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும், சிற்றிலக்கியங்களிலும் உள்ள அற்புதமான கருத்துகளை எளிமைப்படுத்தி, தனது பாடல்கள் மூலம் பாமரர்களிடம் கொண்டு சேர்த்த மாபெரும் கவிஞர் கவியரசு கண்ணதாசன். அவரது திரையிசைப் பாடல்கள் இசை நூலில் கோர்க்கப்பட்ட வார்த்தை மணிகள் அல்ல; வாழ்க்கையை சாறுபிழிந்து வடிகட்டிய தேனமுது. கவியரசு கண்ணதாசனின் 98-வது பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவ படத்திற்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் சாமிநாதன், கவியரசு…
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- வேட்பு மனுக்கள் பரிசீலனை
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந் தேதியன்று விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தொடங்கி 21-ந்தேதியுடன் முடிவடைந்தது. இத்தொகுதியில் போட்டியிடுவதற்காக தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா, ஆகியோர் உட்பட 16 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி வனிதா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணிக்கு மாற்று வேட்பாளராக ரங்கநாதன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவுக்கு மாற்று வேட்பாளர் கலைச்செல்வி, தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி வேட்பாளர் முகமது ஹனீபாவுக்கு மாற்று வேட்பாளராக முகமது இலியாஸ் ஆகிய 4 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்களை தவிர சுயேச்சை வேட்பாளர்களாக சதீஷ்,…
