குவைத்தின் தீ விபத்தில்மனிதச் சதைகள்கருகிய வாசம்உலகக் காற்றில் வீசுகிறது

இறந்த பின்தான்தகனம் செய்வார்கள்;தகனம் செய்துஇறப்பைத் தந்திருக்கிறதுநெருப்பு இதயத்தின்மெல்லிய தசைகள்மெழுகாய் உருகுகின்றன உலகம்தோன்றிய நாளிலிருந்துவிபத்துகள் புதியனவல்ல விஞ்ஞானம் வளர்ந்தபின்னும்அது தொடர்வதுபாதுகாப்பு அளவீடுகளின்குறைபாடுகளைக் காட்டுகிறது மனிதத் தவறுகள்திருந்தவில்லை என்றுவருந்திச் சொல்கிறது மாண்டவர்களுக்காகஅழுது முடித்த இடத்தில்அழத் தேவையில்லாத சமூகத்தைவார்த்தெடுக்க வழி சமைப்போம் உலகத் தொழிலாளர்களுக்குஎன் இந்தியக் கண்ணீர்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- தி.மு.க. தேர்தல் பணிக்குழு அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் தாக்கல் நாளை தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கலுக்கான கடைசி நாள் ஜூன் 21-ந்தேதி ஆகும். மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-ம் தேதி நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன. இருப்பினும், இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் விவசாய தொழிலாளர் அணியின் மாநில செயலாளர் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலில் அறிவித்தார். இதை தொடர்ந்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது தி.மு.க. இதனைத் தொடர்ந்து தி.மு.க. சார்பில் 11 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற ஜூலை-10 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தலைமைக்…

குவைத் தீ விபத்து: உதவி எண்களை அறிவித்துள்ள தமிழநாடு அரசு

குவைத் நாட்டின் மங்காஃப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் தமிழர்கள் எவரேனும் உள்ளனரா என்ற தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்களான, +91 1800 309 3793 (இந்தியாவுக்குகுள் ), +91 80 6900 9900, +91 80 6900 9901 (வெளிநாடு ) தொடர்பு கொள்ளலாம் என்று அயலக தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: குவைத் நாட்டின் மங்காஃப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில், இன்று (ஜூன் 12) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக, சுமார் 49 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வரப்பெற்றுள்ளது. அவர்களுள் எவரேனும் தமிழர் உள்ளனரா என்ற தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் விபத்தில்…

ஆந்திர முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

உங்களது தலைமை ஆந்திரத்துக்கு வளத்தையும் நலத்தையும் கொண்டு வரட்டும். இருமாநில முன்னேற்றத்துக்காக, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழகம் இடையேயான நட்பையும் கூட்டுறவையும் வலுப்படுத்த ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளேன்,” என்று ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ஆந்திர பிரதேச மாநில முதல்வராக நான்காவது முறையாகப் பொறுப்பேற்றிருக்கும் என்.சந்திரபாபு நாயுடுவுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். உங்களது தலைமை ஆந்திரத்துக்கு வளத்தையும் நலத்தையும் கொண்டு வரட்டும். இருமாநில முன்னேற்றத்துக்காக, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழகம் இடையேயான நட்பையும் கூட்டுறவையும் வலுப்படுத்த ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளேன்,” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னதாக, ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்டமான…

‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்தைமுதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்தை தொடங்கி வைத்து, ரூ.20 கோடி நிதி ஒதுக்கீட்டில் 4000 மெட்ரிக் டன் பசுந்தாள் உர விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினார். தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில், 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 4000 மெ.டன் பசுந்தாள் உர விதைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் குறைந்த வாடகையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக டிராக்டர்கள், கொத்துக் கலப்பைகள் மற்றும் ரோட்டவேட்டர்களை வழங்கிடும் வகையிலும், கிராமப்புற இளைஞர்களுக்கு டிராக்டர் இயக்குவதற்கு பயிற்சி அளித்திடும் வகையிலும் டிராக்டர்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.…

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களுக்கு தடை- தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை ஆணையர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மத்திய மோட்டாா் வாகன சட்டம் 1988-ன் பிரிவு 88 (9) ஆம்னி பஸ்களுக்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்செல்ல அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு (ஏ.ஐ.டி.பி.) வழங்க அதிகாரம் அளித்துள்ளது. இவ்வாறு அனுமதி பெற்ற வாகனங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படாமல் பயணிகள் பஸ்கள் போல் மின்னணு முன்பதிவு நிறுவனங்கள் மூலம் பயணச்சீட்டுகளை வழங்கி, கட்டணத்தை வசூலிக்கின்றன. இவ்வாறு நிபந்தனைகளை மீறுவதன் மூலம் மாநில அரசுக்கு கணிசமான வருவாய் இழப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, ஏ.ஐ.டி.பி. வாகனங்களின் இயக்கத்தை நெறிப்படுத்தும் நோக்கில் நாளை (வியாழக்கிழமை) முதல் அனைத்து சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் எப்போதும் சுற்றுலா பயணிகளின் பட்டியலை மின்னணு வடிவிலோ அல்லது காகித வடிவிலோ வைத்திருக்க வேண்டும். அதில் ஒவ்வொரு சுற்றுலா பயணிகள்…

தங்கம் வென்ற மாரியப்பன்: ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

உலக பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் தொடரில் மாரியப்பன் தங்கம் வென்றார்.மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.75 லட்சத்துக்கான காசோலை வழங்கினார். மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் நாட்டின் கோபே நகரில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். உலக பாரா தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், உலக பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.75 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். அப்போது விளையாட்டுத்துறை அமைச்சர்…

விழுப்புரமாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகிற ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

விழுப்புரமாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகிற ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ.,வும், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளருமான புகழேந்தி கடந்த ஏப்ரல் 5ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி புகழேந்தி ஏப்ரல் 6ம் தேதி காலமானார். எம்எல்ஏ புகழேந்தி மரணம் குறித்து சட்டசபை செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்தது. இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலி என தேர்தல் ஆணையம் உடனடியாக அறிவித்தது. இந்நிலையில் இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெற்றது. 7ம் கட்ட தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது…

கும்பகர்ண தூக்கத்தில் திமுக அரசு… எடப்பாடி பழனிசாமி காட்டம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கஞ்சா மற்றும் கொலை வழக்கில் கைது செய்ததற்கு எதிர்ப்பாக ரவுடி கும்பல் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கண்ணாடிகளை சேதப்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. போதைப்பொருள் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடே அடையாள அட்டையாக திகழும் இந்த விடியா திமுக ஆட்சியில், பொதுமக்கள் மருத்துவ உதவி பெற வரும் அரசு மருத்துவமனையிலேயே பாதுகாப்பு இல்லாத சூழல் தான் இன்றைக்கு நிலவுகிறது. இந்த விடியா திமுக அரசின் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு குறித்து பல்வேறு முறை சுட்டிக்காட்டி வந்தும், அதனை சீர்செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கேளாதார் காதில் சங்கு ஊதிய கதையாக கும்பகர்ண தூக்கத்தில் உள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.சேதமடைந்த மருத்துவ உபகரணங்களை உடனடியாக சீர்செய்வதுடன், தாக்குதல் நடத்திய…

விருதுநகர் அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: ஓருவர் பலி, 37 பேர் படுகாயம்

கோவையில் இருந்து கோவில்பட்டி நோக்கி இன்று அதிகாலை அரசு விரைவு பேருந்து ஒன்று 39 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை பழனியை சேர்ந்த டிரைவர் முருகபூபதி (து 36) என்பவர் ஓட்டி சென்றார். பேருந்தில் பேரையூரை சேர்ந்த பிரதீப் நடத்துனராக பணியில் இருந்தார். இந்நிலையில் விருதுநகர் அருகே விருதுநகர்-சாத்தூர் சாலையில் காலை 5.30 மணியளவில் சென்றபோது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.வச்சகாரப்பட்டி அருகே சாலையோர தடுப்பு சுவரின் மீது மோதி சாலையோர பள்ளத்தில் பேருந்து நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சின் இருபுறமும் சக்கரங்கள் கழன்று நொறுங்கி பேருந்து பலத்த சேதமடைந்தது. இதில் பிரபு(31), கோவையை சேர்ந்த நாகராஜன் என்பவரின் மனைவி புவனேஸ்வரி (33) ஆகியோர் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.மேலும் பேருந்தில் பயணம் செய்த 37 பயணிகளும் காய மடைந்தனர்.…